இசி-க்கு எதிரான நீதித் துறை மறு ஆய்வுக்கான விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது

1ecவாக்காளர் பட்டியலிலிருந்து தமது பெயரை அகற்றுமாறு தேர்தல் ஆணையத்தை (இசி) கட்டாயப்படுத்துவதற்கு பிரிட்டனில் வசிக்கும் பொறியியலாளர் சமர்பித்த நீதித் துறை மறு ஆய்வு விண்ணப்பத்தை ஷா அலாம் உயர்  நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது.

நீதிபதி வெர்னோன் ஒங் தமது அறையில் அந்த முடிவைச் செய்தார்.

இசி-யையும் சிலாங்கூர் இசி தலைமைப் பதிவதிகாரியையும் 32 வயதான எஸ்கே தினேஷ் பிரதிவாதிகளாக தமது விண்ணப்பத்தில் குறிப்பிட்டிருந்தார்.

தினேஷ் சார்பில் ஷா அலாம் உயர் நீதிமன்றப் பதிவகத்தில் ஏப்ரல் 4ம் தேதி அவரது தந்தை 63 வயதான கே
சிவகுமார் மெசர்ஸ் எஸ்என் பாம் அண்ட் கோ என்ற வழக்குரைஞர் நிறுவனம் வழியாக அந்த விண்ணப்பத்தைச் சமர்பித்திருந்தார்.

வாக்காளராகத் தாம் ஒரு போது பதிவு செய்யவில்லை எனக் கூறிய தினேஷ் அதனால் கிள்ளானுக்கான வாக்காளர் பட்டியலிலிருந்து தமது பெயர் அகற்றப்பட வேண்டும் என ஆணையிடுமாறு கோரியிருந்தார்.

நாடாளுமன்றமும் எந்த ஒரு சட்டமன்றமும் கலைக்கப்பட்ட நாள் தொடக்கம் குறிப்பிட்ட காலத்துக்கு வாக்காளர் பட்டியலை திருத்தவோ மாற்றவோ முடியாது என்ற தேர்தல் (வாக்காளர் பதிவு) விதியின் அடிப்படையில் தமது கட்சிக்காரரின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தினேஷ் -ஷைப் பிரதிநிதித்த வழக்குரைஞர் ஜான் பாம் நிருபர்களிடம் கூறினார்.

அதே விதியின் கீழ் வாக்காளர் பட்டியலிலிருந்து பெயர்களை நீக்குவது அல்லது திருத்துவது இசி-யின் விருப்பம் எனக் கூறப்பட்டுள்ளதையும் நீதிபதி குறிப்பிட்டதாகவும் அவர் சொன்னார்.

எனவே இசி தலைமைப் பதிவதிகாரியின் விருப்புரிமையில் நீதிமன்றம் தலையிட முடியாது என நீதிபதி குறிப்பிட்டார் என்றும் ஜான் பாம் தெரிவித்தார்.

பிரதிவாதிகள் சார்பில் முஷிலா முகமட் அர்ஷாட் ஆஜரானார்.

 

TAGS: