மகாதீர் அவர்களே, உங்கள் நேரம் வந்தது இப்போது போய் விட்டது

say‘இந்த நாட்டில் செய்யப்பட்ட எல்லாத் தவறுகளையும் சரி செய்ய வேண்டிய நேரம் வந்து விட்டது. நீங்கள்  ஒதுங்கிக் கொள்ள வேண்டும் என நாங்கள் பணிவாகக் கேட்டுக் கொள்கிறோம். மலேசியாவை மீண்டும்  மகத்தான நாடாக மாற்ற எங்களை அனுமதியுங்கள்’

டாக்டர் மகாதீர்: பக்காத்தான் ஆட்சி நாட்டை ‘தோல்வி அடைந்த இஸ்லாமிய நாடாக மாற்றி விடும்’

தேஹாசாப்பி: முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் அவர்களே, நீங்கள் சொல்வது பெருந்தவறு. 13வது  பொதுத் தேர்தலில் பக்காத்தான் ராக்யாட் வெற்றி பெறாவிட்டாலும் மலேசியா தோல்விடைந்த நாடாகத் தான்  மாறும் அது இஸ்லாமாக இருந்தாலும் இல்லாவிட்டாலும்.

நாம் உயிர்வாழ்வதற்கு ஒரே வழி 13வது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் தீவிர மாற்றத்தை கொண்டு
வருவதாகும். அம்னோ அரசாங்கத்தின் மீது நாங்கள் நம்பிக்கை இழந்து விட்டோம். நெறிமுறைகளும் தார்மீகப்  பண்புகளும் காற்றில் பறந்து விட்டன.

ஊழலும் குற்றச் செயல்களும் பெருகியுள்ளன. பணவீக்கம் அதிகரித்துள்ளது. கல்வி, சுகாதாரத் தரங்கள்
சரிந்துள்ளன. போலீஸ் முரட்டுத் தனம், போட்டி ஆற்றல் குறைவு ஆகியவற்றால் நாங்கள் அவதிப்படுகிறோம்.

ஊழலைத் துடைத்தொழிக்க எங்களுக்கு அமைதி வேண்டும். நாட்டின் நடப்பு நிலைக்கு நீங்கள் பொறுப்பேற்றுப்  பதில் சொல்ல வேண்டிய விரைவில் வரும்.  இப்போதைக்கு நலிந்துள்ள நாட்டுக்கு நீங்கள் மேலும் சேதத்தை ஏற்படுத்த நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.  நாட்டைப் பாதுகாப்பது எங்கள் கடமை. உங்களுக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் தோல்வி கண்டு விட்டீர்கள்.

வாழ்க்கை தொடருகின்றது: “நாங்கள் தகுதி கோட்பாட்டுக்கு எதிரானவர்கள் அல்ல. ஆனால் நாங்கள் நன்றாக  செயல்படுகின்றவர்களுக்கு வாய்ப்புக் கொடுப்பது பற்றிப் பரிசீலிக்கிறோம். ஆனால் மிகச் சிறந்தவர்களுக்கு  அல்ல. இது தான் எங்கள் வழி,” என மகாதீர் சொன்னார்.

அந்த அடிப்படையை அவர் தமது புதல்வருக்குப் பயன்படுத்தினார். அவர் நன்றாக இயங்குகின்றவர். ஆனால்
சிறந்தவர் அல்ல. அம்னோ இளைஞர் தேர்தலில் கைரி ஜமாலுதின், முகமட் கிர் தோயோ ஆகியோருடன்
ஒப்பிடுகையில் அவருடைய புதல்வருக்கு குறைந்த வாக்குகளே கிடைத்தன.

ஆனால் அம்னோ அவரை துணை அமைச்சராக்கியது. இப்போது கெடா மந்திரி புசாராக வாய்ப்பு
கொடுத்துள்ளது. இது தான் மகாதீர் வழி. சேவகர்களுக்கு ‘didahulukan’. (முன்னுரிமை)

சக தோழன்: டாக்டர் மகாதீர் அவர்களே, உண்மையான உலகத்தில் போட்டியிடுவதற்கு ‘நன்றாக’ இருப்பது
மட்டும் போதாது. உங்கள் கொள்கைகளைப் பின்பற்றினால் நாம் எப்போதும் இரண்டாம் நிலையிலேயே
இருப்போம். மற்ற நாடுகள் எல்லாத் துறைகளிலும் நம்மைத் தாண்டி விடும்.

அதற்கு நல்ல எடுத்துக்காட்டு நமது கல்வி முறையாகும். நமது நிலை என்ன ? நமது பல்கலைக்கழகங்கள்
குறைவாக மதிப்பிடப்படுகின்றன. பல ஆசிய நாடுகள் நமது பொருளாதாரத்தை மிஞ்சி விட்டன. ரிங்கிட் மதிப்பு  சரிந்து விட்டது. அந்நியப் பொருட்கள் விலை கூடியதால் வாங்க முடியவில்லை.

பாதுகாப்பைப் பொறுத்த வரையில் பெருமை கொள்வதற்கு எதுவுமில்லை. நாட்டில் இரண்டு மில்லியன் கள்ளக்  குடியேற்றக்காரர்கள் உள்ளனர். அந்நியப் படைகள் எளிதாக நாட்டுக்குள் ஊடுருவியுள்ளன. லஹாட் டத்து  அதற்கு நல்ல எடுத்துக் காட்டு.

நம் நாட்டைக் காப்பாற்றவும் மலாய்க்காரர்களைப் பாதுகாக்கவும் நாம் மிகச் சிறந்தவர்களுடன்-அவர்கள்
மலாய்க்காரர்களாக, சீனர்களா, இந்தியர்களா, கடாஸான்களாக இருந்தாலும் சரி- வேலை செய்ய வேண்டும்.

மலேசிய மக்கள்: தகுதி அடிப்படை ? எவ்வளவு பெரிய பொய். பொதுப் பல்கலைக்கழகங்களில் உள்ள
விரிவுரையாளர்களுடைய தரத்தைப் பாருங்கள்.

அவர்களில் பெரும்பாலோர் குறைந்த தரத்தைக் கொண்டவர்கள். நான் அவர்களை கேவலப்படுத்தவில்லை.
ஆனால் நாம் தரமான பட்டதாரிகளை உருவாக்க முடியுமா ? மகாதீர் அவர்களே நீங்கள் கல்வி கற்றது
மலேசியாவிலா அல்லது வெளிநாட்டிலா ?

மூன் டைம்: அவரை யார் ஆரூடம் சொல்லச் சொன்னார்கள் ? புத்ராஜெயாவை பக்காத்தான் கைப்பற்றினால்
மலேசியர்களுக்கு கேடு விளையும் என்ற மந்திரத்தை தோல்வி கண்ட அந்த அரசியல்வாதி அடிக்கடி
சொல்கிறார்.

அதனால் மலேசியர்கள் திரும்பத் திரும்ப இந்தக் கேள்வியை எழுப்புகின்றனர்: விஷத்தைக் கக்கும் அவர்
மீண்டும் அரசியலுக்குத் திரும்ப விரும்புகிறாரா ?

மகாதீர் அவர்களே உங்கள் நேரம் வந்தது இப்போது போய் விட்டது. தோல்வி அடைந்த உங்கள்
கொள்கைகள், ஆடம்பரமான பெரிய திட்டங்கள், முட்டாள்தனமான காரியங்கள் ஆகியவற்றுக்கு நாங்கள்
அதிக விலை கொடுத்துள்ளோம்.

இந்த நாட்டில் செய்யப்பட்ட எல்லாத் தவறுகளையும் சரி செய்ய வேண்டிய நேரம் வந்து விட்டது. நீங்கள்
ஒதுங்கிக் கொள்ள வேண்டும் என நாங்கள் பணிவாகக் கேட்டுக் கொள்கிறோம். மலேசியாவை மீண்டும்
மகத்தான நாடாக மாற்ற இளைஞர்களை அனுமதியுங்கள்.

உங்களுடைய முட்டாள்தனமான ஆரூடங்கள், விஷமத்தனமான கருத்துக்கள் எங்களுக்கு தேவையில்லை.

 

TAGS: