பிரதமரின் கஸாக்ஸ்தான் வருகையின் செலவு ரிம1 மில்லியன்

இவ்வாண்டு ஜூன் மாதம் பிரதமர் நஜிப் கஸாக்ஸ்தானுக்கு மேற்கொண்ட வருகைக்கான செலவு ரிம1 மில்லியன் என்று வெளிவிவகார அமைச்சு இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தது.

பிரதமரும் அவரது பரிவாரமும் கஸாக்ஸ்தானில் நடந்த உலக இஸ்லாமிய பொருளாதார கருத்தங்கில் கலந்துகொண்டதற்கான மொத்த செலவு ரிம1,072,213.22 சென்.

இந்தக் கருத்தரங்கின் போது மலேசியா மற்றும் கஸாக்ஸ்தான் ஆகிய நாடுகளுக்கிடையில் ஐந்து ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டதாக வெளிவிவகார அமைச்சர் அனிப்பா அமன் எழுத்து மூலமாக சுவா தியான் சாங் (பிகேஆர்-பத்து) கேள்விக்கு பதில் அளித்தார்.

TAGS: