மகாதீரைப் பொறுத்த வரையில் எப்போதும் ‘அவர்கள் எங்களுக்கு எதிரானவர்கள்’

mahathir‘உங்களுக்கு நேரம் நன்றாக இல்லை. சீனர்களும் இந்தியர்களும் இப்போது பாஸ் கட்சியையும் பிகேஆர்  கட்சியையும் ஆதரிக்கத் தொடங்கியிருப்பதும் மலாய்க்காரர்கள் டிஏபி-யை ஆதரிக்கத் தயாராக இருப்பதும் தான்  உண்மை நிலை.’

டாக்டர் மகாதீர்: தேர்ந்தெடுக்கப்பட்ட பெர்க்காசா வேட்பாளர்கள் ‘எங்களுக்காக செயல்படுகின்றனர்’

மஹாஷித்லா: ஆகவே இப்போது யார் எஜமானர் ? முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் முன்னைக்  காட்டிலும் ஆணவமாக நடந்து கொள்கிறார். அந்த இரண்டு பெர்க்காசா வேட்பாளர்களையும் அம்னோ  நிறுத்தியதாக வெளிப்படையாக ஒப்புக் கொள்கிறார்.

அதனால் பாசிர் மாஸ் அம்னோ வேட்பாளர் விலகிக் கொண்டதற்காக அவர் மீது விசாரணையும் ஒழுங்கு
நடவடிக்கையும் எடுக்க வேண்டும் எனக் கூறிய அம்னோ தலைமைச் செயலாளர் தெங்கு அட்னான் தெங்கு
மான்சோரும் கிளந்தான் அம்னோ தலைவர் முஸ்தாபா முகமட்டும் முட்டாளாகி விட்டனர்.

மகாதீரும் பெர்க்காசாவும் அம்னோ மீது உறுதியான பிடியை வைத்திருக்க அனுமதித்ததின் மூலம் நஜிப்
அம்னோ வெடித்துச் சிதறுவதற்கு வழி வகுத்து விட்டார். வரும் தேர்தலில் மோசடிகள் மூலம் அது வெற்றி
பெற்றாலும் அது விரைவில் நிகழும்.

அப்சலோம்: டாக்டர் மகாதீர், நீங்கள் உண்மையில் சூட்சுமப் புத்தியுள்ளவர். இந்த வயதிலும் உங்களுடைய தீய  எண்ணம் போகவில்லை. மலாய்க்காரர்கள் வேறுபாடுகளை மறந்து ஒன்று சேருவார்கள் என்ற எண்ணத்தில்  மலாய்க்காரர்களுக்கும் சீனர்களுக்கும் இடையில் பிளவை ஏற்படுத்த நீங்கள் முயலுகின்றீர்கள். அதன் வழி  மலாய்க்காரர்கள் பிஎன் -னுக்கு வாக்களிப்பர் என நீங்கள் கருதுகின்றீர்கள்.

உங்களுக்கு நேரம் நன்றாக இல்லை. சீனர்களும் இந்தியர்களும் இப்போது பாஸ் கட்சியையும் பிகேஆர்
கட்சியையும் ஆதரிக்கத் தொடங்கியிருப்பதும் மலாய்க்காரர்கள் டிஏபி-யை ஆதரிக்கத் தயாராக இருப்பதும் தான்  உண்மை நிலை.

பிஎன் அஸ்தமனமாகும் போது இந்த நாட்டில் இன ஒற்றுமை உண்மை நிலையாகும்.

சின்ன அரக்கன்: இன்னும் ஏதாவது கௌரவம் மிஞ்சியிருந்தால் மசீச தலைவரான சுவா சொய் லெக் எழுந்து
நின்று மலேசிய சீனர்களைப் பற்றி மகாதீர் சொல்லியுள்ள அந்த நியாயமற்ற, அவதூறான கருத்துக்களுக்கு
பதில் சொல்ல வேண்டும்.

இந்த தேர்தல் பிரச்சாரக் காலத்தில் மக்களைப் பிளவுபடுத்தும் உணர்ச்சியைத் தூண்டும் அறிக்கைகளை மகாதீர்   வெளியிடுவதற்கு பராமரிப்பு அரசாங்கப் பிரதமரான நஜிப் ஏன் அனுமதிக்கிறார் ?

மகாதீர் விரக்தியின் உச்சக் கட்டத்துக்கு போய் விட்டதாகத் தெரிகிறது. வரும் தேர்தலில் எதிர்க்கட்சிகள்
கூட்டரசு அரசாங்கத்தைக் கைப்பற்றி விடும் என்ற அச்சமும் அவரைச் சூழ்ந்துள்ளது.

பெர்க்காசா தலைவர்களுக்கு மகாதீர் அளிக்கும் ஆதரவு அம்னோ வேட்பாளர்களுக்கான மலாய் ஆதரவை
அதிகரிக்கும் என அம்னோ தலைவர்கள் எண்ணுவது தவறு.

இன்றைய மலாய் சமூகம் அறிவாற்றலைப் பெற்றது. விழிப்புடன் உள்ளது. அம்னோ அதனை தொடர்ந்து
ஏமாற்றிக் கொண்டே இருக்க முடியாது. மகாதீருடைய தந்திரங்கள் திருப்பி அடிக்கும்.

அடையாளம் இல்லாதவன்#52720663: 22 ஆண்டுகளுக்கு மலேசியாவை ஆட்சி செய்த பின்னரும் அவர்
இன்னும் இனம், இனம், இனம் என்ற வார்த்தைகளையே சொல்லிக் கொண்டிருக்கிறார்.

பி தேவ் ஆனந்த் பிள்ளை: டாக்டர் மகாதீர் முகமட் அவர்களே, மலாய் சலுகைகள் குறித்து கேள்வி
எழுப்பப்படவே இல்லை. ஏனெனில் அது நமது அரசமைப்பில் எழுதப்பட்டுள்ளது.

இந்த நாட்டை உருவாக்கிய மற்றவர்களுக்கும் நியாயம் கிடைக்க வேண்டும். வளப்பத்தில் நியாயமான பங்கு
வேண்டும் என்பது தான் கோரிக்கையே.

சீ3: அந்த இன வெறியருக்கு ‘அவர்கள் எப்போதும் எங்களுக்கு எதிரானவர்கள்’ தான். சீனர்கள் என்ன செய்ய
வேண்டும் என அவர் விரும்புகிறார் ? அவர்களுடைய பண்பாட்டையும் மொழியையும் விட்டு விட்டு ‘ஒன்றாகக்  கலப்பதற்காக’ முஸ்லிமாகச் சொல்கிறாரா ? அதுவும் உலக அளவில் செல்வாக்கைப் பெற்றுள்ள சீனாவுடன்  இணங்கிப் போக உலகின் மற்ற பகுதிகள் மண்டரின் மொழியைக் கற்கும் வேளையில் !

அவருடைய குறுகிய புத்தியை அது காட்டுகிறது. பிளவுபடுத்தும் அரசியல் மூலம் தம்மையும் தமது
செல்வத்தையும் பாதுகாக்க முயலும் சுயநல இனவாதி என்பதைத் தவிர வேறு ஒன்றுமில்லை. நேரம் முடிந்து  விட்டது டாக்டர்.

எல்கேடி: டாக்டர் மகாதீர் நீண்ட நாள் உயிர் வாழ்ந்து தமது பெயர் முற்றாக சீரழிந்து அவரது சித்தாந்தம் சுக்கு நூறாவதைக் வதைக் காண வேண்டும் என  நான் விரும்புகிறேன்.

 

TAGS: