ஹிண்ட்ராப்: இனவாதம், தடுப்புக் காவல் மரணங்கள் “எதிர்கால ஒப்பந்தம்”

hindrafஇந்தியர் நலன்கள் சம்பந்தப்பட்ட ஹிண்ட்ராப் பெருந்திட்டத்தில் மனித உரிமைகள் தொடர்பிலான முக்கிய  அம்சங்கள், அந்த அமைப்பு பிஎன் உடன் செய்து கொண்ட ‘புதிய உடன்பாட்டில்’ விடுபட்டிருந்தன.

அவை எதிர்கால விவாதங்களுக்காக தள்ளி வைக்கப்பட்டதாக ஹிண்ட்ராப் தேசிய ஆலோசகர் என் கணேசன்  மலேசியாகினியிடம் கூறினார்.

“எதிர்கால உடன்பாடுகளில் நாங்கள் அவை குறித்து தொடர்ந்து கோரிக்கை விடுப்போம்,” என்றார் அவர்.

இந்தியர்களுக்குச் சிறந்த பொருளாதார வாய்ப்புக்களையும் சலுகைகளையும் பெறுவதற்காக நாங்கள் ஆளும்
கூட்டணியுடன் நடத்தப்பட்ட பேச்சுக்களின் போது இனவாதம், தடுப்புக் காவல் மரணங்கள் போன்ற
விஷயங்களை விட்டுக் கொடுக்க வேண்டியிருந்தது என்றும் கணேசன் சொன்னார்.

மலேசிய இந்தியர்களுக்கான ஹிண்ட்ராப்-பிஎன் புரிந்துணர்வு பத்திரம் இந்தியத் தலைவர்களுக்கு மேலும் பல
சிறப்பு நியமனங்கள், பிரதமர் அலுவலகத்தில் புதிய பிரிவு, இந்தியர் நலனுக்குக் கூடுதலான நிதி ஆகியவற்றுக்கு  வாக்குறுதி அளிக்கிறது.

“அந்தத் திட்டங்கள் அனைத்தும் ஹிண்ட்ராப் பெருந்திட்டம், பிஎன் தேர்தல் கொள்கை அறிக்கை ஆகியவற்றின்  அடிப்படையில் வரையப்பட்டவை,” என ஹிண்ட்ராப் வெளியிட்ட விளம்பரம் கூறியது.

அந்த விளம்பரம் தமிழ் நேசன் ஞாயிறு பதிப்பில் வெளியானது. அதன் ஆங்கில மொழி பெயர்ப்பு
மலேசியாகினியில் நேற்று விளம்பரமாக வெளியானது.

பராமரிப்பு அரசாங்கப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கையெழுத்திட்ட அந்த ஒப்பந்தத்தின் விவரங்கள் குறித்த
கேள்விகளுக்கு பதில் அளிப்பதற்காக அந்த விளம்பரங்கள் கொடுக்கப்பட்டதாக கணேசன் சொன்னார்.

பெர்க்காசாவின் இப்ராஹிம் அலி, சுல்கிப்லி நூர்டின் போன்ற பிஎன் -னுக்கு நட்புறவான வேட்பாளர்கள்
குறித்துக் கேட்கப்பட்ட போது கணேசன் கருத்துச் சொல்ல மறுத்து விட்டார்.

TAGS: