‘பக்காத்தானுக்கு அதிகமான வாக்குகள் கிடைக்கலாம் ஆனால், இடங்கள் கிடைக்காது’

anwarஉங்கள் கருத்து : “தேர்தல் மோசடிகள், ரொக்க அன்பளிப்புக்கள், அச்சுறுத்தல் ஆகியவை குறையாத வரையில் அந்த  ஆய்வுகளில் எந்த அர்த்தமும் இல்லை.”

43 விழுக்காட்டினர் அன்வாரை ஆதரிக்கின்றனர், நஜிப்புக்கு 39 விழுக்காடு

ஜிமினி கிரிக்கெட்: ஆய்வில் சம்பந்தப்பட்ட மலாய்க்காரர்களிடையே நஜிப் பற்றிய மதிப்பீடு 18 புள்ளிகள் குறைந்துள்ளன. அன்வார் பற்றிய மதிப்பிபீடு 39 விழுக்காடு கூடியுள்ளதாக மலாயாப் பல்கலைக்கழக  ஜனநாயக, தேர்தல் ஆய்வு மய்யம் நடத்திய ஆய்வு காட்டியுள்ளது.

அந்த ஆய்வு ஏப்ரல் தொடக்கத்தில் எடுக்கப்பட்டதையும் தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரம் இருப்பதையும் கருத்தில் கொண்டால் மே 5 வரை நஜிப்புக்கான மலாய் ஆதரவு குறையும். அன்வாருக்குக் கூடும்.

பக்காத்தான் ராக்யாட்டுக்கு சீனர் ஆதரவு தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. மதில் மேல் பூனையாக இருந்தவர்கள் கூட இப்போது பக்காத்தானுக்கு ஆதரவாக மாறியுள்ளனர். அதற்கு சங்கப் பதிவதிகாரி நடத்திய நாடகமாகும்.

ஷா அலாம் பிஎன் வேட்பாளராக பெர்க்காசா தலைவர் சுல்கிப்லி நூர்டின் பெயர் குறிப்பிடப்பட்ட பின்னர் இந்தியர் ஆதரவை அந்த ஆய்வு கொண்டிருக்கவில்லை. என்றாலும் இந்தியர்களும் பிஎன் -னைக் கைவிட்டு விட்டு பக்காத்தானுக்கு மாறுகின்றனர் என உறுதியாக நம்பலாம்.

தேர்தலுக்கு முந்திய இந்த வாரத்தில் எல்லா இனங்களையும் தன் பக்கம் கவருவதில் பக்காத்தான் வெற்றி பெற்றுள்ளது எனத் துணிந்து கூறலாம்.

புத்திசாலி வாக்காளர்: தேர்தல் மோசடிகள், ரொக்க அன்பளிப்புக்கள், அச்சுறுத்தல் ஆகியவை குறையாத வரையில் அந்த ஆய்வுகளில் எந்த அர்த்தமும் இல்லை.

அந்த ஆய்வு இல்லாவிட்டாலும் கூட எதிர்க்கட்சிகள் சமூக ஊடகங்களில் நிகழும் போரில் முன்னணியில் இருப்பதை யாரும் மறுக்க முடியாது. பிஎன் எந்திரம் முக்கிய நாளேடுகளில் மட்டும் கவனம் செலுத்துகின்றது.

செராமாக்களில் கூடும் மக்கள் எண்ணிக்கை ஒர் அறிகுறியாக இருந்தாலும் தேர்தல் தினத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.

கிம் குவேக்: அந்த ஆய்வு தேர்தல் நெருங்க நெருங்க பிஎன் -னுக்கு மக்கள் ஆதரவு சரிவதையும் எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவு கூடுவதையும் காட்டுகின்றது. 2008 பொதுத் தேர்தலுக்கு முன்னரும் இதே நிலை தான் காணப்பட்டது.

2008 தேர்தலை உதாரணமாக எடுத்துக் கொண்டால் பிரச்சாரம் முடியும் நாட்களில் அந்தப் போக்கு துரிதமடையும். அதனால் பெருத்த மாற்றங்கள் நிகழலாம்.

நியாயமானவன்: அந்த ஆய்வு உண்மை என்று எடுத்துக் கொண்டால் பக்காத்தான் அதிகாரத்துக்கு தெரிவு செய்யப்படலாம்.

அன்வாருக்கு தீங்கு செய்தவர்களுடைய மனதில் இப்போது என்ன ஒடிக் கொண்டிருக்கும் ? அவர்கள் இரவிலும் அடுத்த எட்டு நாட்களுக்கு இரவிலும் நிம்மதியாகத் தூங்க முடியுமா ?

அடையாளம் இல்லாதவன் #21828131: பிரச்சார காலம் எவ்வளவு அதிகமாக இருக்கிறதோ அந்த அளவுக்கு பிகேஆர்-க்கு நல்லது. ஆஸ்ட்ரோவில் பணம் செலுத்தப்பட்ட விளம்பரங்கள் உட்பட முக்கிய நாளேடுகளிலும் எல்லா தொலைக்காட்சி நிலையங்களிலும் ஆதிக்கம் செலுத்தி எல்லா துருப்புச்சீட்டுக்களையும் அம்னோ பயன்படுத்தி விட்டது. அவை இப்போது பிஎன் -னை திருப்பி அடிக்கத் தொடங்கியுள்ளன.

தேர்தல் நாளுக்குள் மக்கள் பிஎன் மீது மிகவும் வெறுப்படைந்து விடுவர். அவர்கள் பிஎன் ஆதரவாளர்களாக இருந்தால் கூட மனம் மாறி விடுவார்கள்.

ஆய்வு: மே 5ல் பிஎன் பக்காத்தானுக்கு இடையில் நெருக்கமான போட்டி

பெண்டர்: மக்கள் உணர்வு மிகவும் தெளிவானது. பிஎன் நேர்மையாக நடந்து கொண்டால் மட்டுமே நெருக்கமாக இருக்கும் என்ற அந்த ஆய்வு முடிவு செல்லத்தக்கதாக இருக்கும். உண்மையில் பிஎன் நேர்மையாக நடந்து கொள்ளப் போவதில்லை.

வேட்டைக்காரன்: பக்காத்தான் பிஎன் -னைக் காட்டிலும் முன்னணியில் இருப்பதாக தோன்றுகிறது. பக்காத்தான்  செராமாக்களில் கூடும் மக்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.

கீ துவான் சாய்: சபா, சரவாக் மக்கள் அந்த ஆய்வில் சம்பந்தப்படவில்லை என்றால் அந்த ஆய்வு பயனற்றது.

தீவகற்ப மலேசிய வாக்காளர்களை மட்டும் கருத்தில் கொண்டது என்றால் அது பக்கத்தானுக்கு நல்லதல்ல. காரணம் பிஎன் -னுக்கும் அதற்கும் உள்ள வேறுபாடு ஐந்து விழுக்காடு தான். 2008ல் தீவகற்பத்தில் பக்காத்தானுக்கு பிஎன் -னைக் காட்டிலும் அதிகமான வாக்குகள் கிடைத்தன.

தெளிந்த நீர்: என்னுடைய அச்சம் இது தான். அடுத்த தரப்பு மோசடியில் ஈடுபட்டாலும் பக்காத்தானுக்கு அதிகமான வாக்குகள் கிடைக்கலாம் ஆனால் அடுத்த அரசாங்கத்தை அமைப்பதற்குப் போதுமான இடங்கள் கிடைக்காது.

அதனை அடுத்து மக்கள் செல்வாக்கு இல்லாத அரசாங்கம் தனது விருப்பங்களை மக்கள் மீது திணிக்கும் அரசியல் பயங்கரக்கனவு தொடங்கும்.

TAGS: