‘இனம், வன்முறை, செக்ஸ் ஆகியவற்றை புறந்தள்ள வேண்டிய நேரம் இது’

LKSஉங்கள் கருத்து : “எல்லா ஆயுதங்களும் பலனளிக்காமல் போகும் போது மலாய்க்காரர்களுக்கு அச்சத்தை மூட்ட அம்னோ  வன்முறை, இனக் கலவரங்கள் என்ற மருட்டலை அவிழ்த்து விடும்”

ஜோகூரில் மே 13 கலவரங்கள், இன அட்டை பயன்படுத்தப்படுகின்றன

மிலோசெவிச்: அம்னோ இனவாதத்தை அவிழ்த்து விட்டிருப்பது இன அடிப்படையில் அமைந்த நொடித்துப் போன ஆளுமையின் கடைசிக் கட்டமாகும்.

அம்னோ ஊழலும் உணர்ச்சியைத் தூண்டும் சொற்களும் அதற்கு தேர்தலில் வெற்றியைத் தரலாம். ஆனால்
அந்த ஆட்டம் தொடர முடியாது. நமது சமுதாயத்துக்குப் புதிய வழிமுறை தேவை. ஆனால் நடப்பு அரசியல் பிரதிநிதித்துவ முறை அதற்கு இடமளிக்காது.

நடைமுறைக்கு ஏற்ற பொருத்தமான பொருளாதார, சித்தாந்த வடிவமைப்பை சமூகம் உருவாக்க வேண்டுமானால் இனம், சமயம் ஆகியவற்றைக் கடந்து செல்ல வேண்டும். அப்போது தான் பெரும்பான்மையாக உள்ள மலாய்க்காரர்களுக்கும் நன்மை கிடைக்கும்.

அறியாமை, அச்சம் ஆகியவற்றின் மூலம் அம்னோ வெற்றி பெற்றாலும் அது பழைய அரசியல் முறையைத் தொடர்ந்து நடத்த முடியாது.

ஹும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்: டிஏபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங், பிரச்சாரத்தின் போது இனவாத அரசியலைப் பின்பற்றுவதாக நடப்பு ஜோகூர் மந்திரி புசார் அப்துல் கனி ஒஸ்மான் சொல்கிறார். அவர் தமது கட்சியைத் திரும்பிப் பார்க்க வேண்டும்.

பென்: கேலாங் பாத்தா சீனர் தொகுதி. அங்கு முந்திய தேர்தலில் மசீச வென்றது. கிட் சியாங் சீனர் தொகுதியில் போட்டியிடுகிறார். அதனால் அவர் இனவாத உணர்வுகளைத் தூண்டவே இல்லை.

அப்துல் கனியை கேலாங் பாத்தாவுக்கு அனுப்பிய அம்னோ தான் இனவாதி. ஏனெனில் மலாய் வாக்குகளை எதிர்க்கட்சியிடமிருந்து இழுக்க அம்னோ முயலுகின்றது.

அடையாளம் இல்லாதவன்#01962907: அம்னோ சொல்லும் பித்னா (அவதூறு) படி சீனர் பெரும்பான்மையாக உள்ள ஒர் இடத்தில் ஆதரவைப் பெற லிட் சியாங் இனவாதத்தைப் பயன்படுத்துகிறார்.

மலாய் பெரும்பான்மை இடங்களில் ஆதரவு திரட்ட பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கும் துணைப் பிரதமர் முஹைடின் யாசினும் என்ன செய்கின்றனர் ?

எல்ஜேசி: நான் பக்காத்தானை ஆதரிக்கிறேன். கிட் சியாங் அம்னோ மலாய்க்காரர்களுக்கு அவர்களுடைய
கோட்டையில் சவால் விடுக்க ஜோகூருக்கு சென்றதால் இந்த இனவாதப் போர் மூண்டது என நான் சொல்கிறேன்.

மே 13க்கு மலாய்க்காரர்கள் மட்டும் காரணமல்ல. சீனர்களுக்கும் பங்கு உண்டு. மலாய்க்காரர்கள் பாகுபாடு காட்டுவதாக சீனர்கள் எப்போதும் கூச்சல் போடுகின்றனர். ஆனால் தனியார் துறையில் நடக்கும் பாகுபாட்டை யாரும் கவனிப்பதே இல்லை.

சீனர்கள் நடத்தும் நிறுவனங்களில் முதுநிலை பதவிகளில் வேலை செய்ய எத்தனை சீனர் அல்லாதாருக்கு வாய்ப்புக் கிடைத்துள்ளது ? நீங்கள் பினாங்கிற்குச் சென்று ஒர் அடுக்கு மாடி ஆடம்பர வீட்டை வாடகைக்கு எடுக்க முயற்சி செய்யுங்கள். ‘சீனர்களுக்கு மட்டும்’ என்ற விளம்பரங்களைக் கண்டு நீங்கள் வெறுப்படைவீர்கள்.

இந்த நாட்டில் இன வெறி கூடுவதற்கு தாங்களும் காரணம் என்பதை சீனர்கள் ஒப்புக் கொள்ள வேண்டும். சீனர்கள் மாற்றத்தை விரும்பினால் முதலில் நீங்கள் மாற வேண்டும்.

நான் சீனர்களை வெறுப்பவன் அல்ல. உங்கள் கடின உழைப்பையும் மலேசிய பொருளாதார வெற்றிக்கு நீங்கள் ஆற்றியுள்ள பங்கையும் நான் பாராட்டுகிறேன், உண்மையைச் சொல்லத் தான் வேண்டும்.

நம்பாதவன்: எல்ஜேசி சொல்வதை நான் ஒப்புக் கொள்கிறேன். அனைத்து மக்களும் இன உணர்வுகளைக் கொண்டுள்ளனர். அதனால் இனப் பாகுபாடு எதிர்ப்புச் சட்டத்தை நாம் வரைய வேண்டும்.

பி தேவ் ஆனந்த் பிள்ளை: உண்மைகள் எப்போதும் திரிக்கப்படுகின்றன. லண்டன் பழஞ்சுவடிக் காப்பகத்துக்கு சென்று பாருங்கள். 1969 மே 13ம் தேதி கிட் சியாங் சபாவில் இருந்தது தெரிய வரும்.

அன்ஸ்பின்: 1969 இனக் கலவரங்களினால் பாதிக்கப்படாத சில மாநிலங்களில் ஜோகூரும் ஒன்றாகும். எல்லா இனங்களும் குறிப்பாக கிராமங்களில் ஒற்றுமையாக இருந்தது அதற்குக் காரணம்.

அப்படி இருக்கும் போது பிஎன் மே 13ஐ ஜோகூரில் பயன்படுத்த ஏன் முடிவு செய்தது ? தனது ‘நிரந்தர வைப்புத் தொகை” மாநிலத்தில் சில தொகுதிகளை இழக்க வேண்டியிருக்கும் என்ற அச்சம் அதற்கு ஏற்பட்டுள்ளதா ?

ஜிமினி கிரிக்கெட்: எல்லா ஆயுதங்களும் பலனளிக்காமல் போகும் போது மலாய்க்காரர்களுக்கு அச்சத்தை
மூட்ட அம்னோ வன்முறை, இனக் கலவரங்கள் என்ற மருட்டலை அவிழ்த்து விடும். மலாய்க்காரர்களுடைய
உரிமைகள், நிலம், வாழ்வாதாரம் ஆகியவற்றை பறிக்க சீனர்கள் முயலுகின்றனர் என்ற தோற்றத்தை அது ஏற்படுத்தும்.

அந்தப் பொய்களை முறியடிக்க மசீச என்ன செய்கின்றது ? எதுவும் செய்வதில்லை. அந்தப் பொய்களுக்கு உடந்தையாக இருப்பதுடன் அவற்றை பரப்புவதற்கும் மசீச உதவுகின்றது.

பாஹாத்தியான்: மக்கள் குறிப்பாக மலாய் வாக்காளர்கள் அம்னோ/பிஎன் தீய தந்திரங்களுக்கு பலியாக மாட்டார்கள் என நான் நம்புகிறேன்.

கேஎஸ்என்: மே 13, இனவாதம் ஆகியவற்றைத் தவிர வாக்காளர்களிடம் விற்பதற்கு அம்னோவிடம் ஏதும் இல்லை. நல்ல ஆளுமை, நேர்மையான வெளிப்படையான தலைவர்கள் என்ற மூலதனமே அதனிடம் இல்லை.

அதனால் அது மோசமாக தாழ்ந்து விட்டது, உண்மையில் வெறுப்பைத் தருகின்றது. ஆனால் வாக்காளர்கள்
அவர்கள் தரும் குப்பைகளைக் கொள்முதல் செய்யத் தயாராக இல்லை.

TAGS: