உள்ளடக்கம் வலுவாக இல்லாவிட்டால் எந்த முயற்சியும் விரயமே

 “நல்ல ஆளுமையே நாட்டின் தோற்றத்தை மேம்படுத்துவதற்குச் சிறந்த, குறைந்த செலவைக் கொண்ட வழியாகும். நாட்டுக்கு அவமானத்தைத் தரக் கூடிய பல விஷயங்கள் இருக்கும் போது நமது தோற்றத்தை மேம்படுத்த பெரும் பணத்தைச் செலவு செய்வதில் எந்த நன்மையுமில்லை.”

 

 

நாட்டின் தோற்றத்தை மேம்படுத்த எப்பிசி-க்கு 84 மில்லியன் ரிங்கிட் கொடுக்கப்பட்டது

டாக்ஸ்: மலேசியாவின் தோற்றத்தை உயர்த்த பிஎன்/அம்னோ அரசாங்கம் மில்லியன் கணக்கில் பணம் கொடுக்கலாம். ஆனால் நமது அமைச்சர்கள் ஒரு நொடியில் மலேசியாவின் தோற்றத்துக்குக் களங்கத்தைக் கொண்டு வந்து விடுகின்றனர்.

பெர்சே 1.0, 2., மாட்டுத் தலை ஊர்வலம், தேவாலயத்திற்கு எரியூட்டப்பட்ட சம்பவம், குதப்புணர்ச்சி வழக்கு ll, டத்தோ மூவர், ஸ்கோர்ப்பியோன் பேரம், அல்தான்துயா, குகன், தியோ பெங் ஹாக்,               அல் ஜாஸிரா மீது இப்ராஹிம் அலி ஆகியவற்றை நினைவு கூர்ந்தால் போதும்.

பென்-ஹாசி: அந்த 94 மில்லியன் ரிங்கிட்டைக் கொண்டு எத்தனை பள்ளிக்கூடங்களைக் கட்ட  முடியும் என்பதை எண்ணிப் பாருங்கள். பிஎன் அரசாங்கம் மலேசியாவின் தோற்றத்தைப் பற்றி அக்கறை கொள்ளவில்லை. மாறாக வெளிநாடுகளில் தனது தோற்றத்தை மேம்படுத்திக் கொள்ளவே அது  முயலுகிறது.

போலீஸ், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம், மலேசியப் பல்லூடக, தொடர்பு ஆணையம், தேர்தல் ஆணையம் போன்ற அனைத்து பிஎன் அரசாங்க அமைப்புக்களும் நேர்மாறாக நடந்து கொள்கின்றன.

அவை நாட்டுக்கு அவமானத்தைக் கொண்டு வரும் காரியங்களையே செய்து கொண்டிருக்கின்றன. உதாரணத்துக்கு, பெர்சே 2.0 பேரணியின் போது அமைதியாகச் சென்ற ஆர்ப்பாட்டக்காரர்கள்  மீது இரசாயனம் கலந்த நீரை பாய்ச்சியது. தேர்தல் ஆணையம் சட்ட விரோதக் குடியேற்றக்காரர்களை வாக்காளர்களாகப் பதிவு செய்வது, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் சந்தேகத்துக்குரிய நபர்களை கட்டிடத்திற்கு வெளியே “தள்ளுவது”, இணைய சுதந்திரத்தை ஒடுக்க பிஎன் அரசாங்கத்துக்காக மலேசியப் பல்லூடக, தொடர்பு ஆணையம் பாடுபடுவது ஆகியவற்றைக் கூறலாம்.

தனது தோற்றத்தை உயர்த்திக் கொள்வதற்கு பிஎன், எப்பிசி-யை நியமிக்கலாம். ஆனால் அதே நேரத்தில் தனது அமைப்புக்கள் எல்லாவற்றையும் “பாழ்படுத்த” அனுமதிப்பது தவறாகும்.  தாமரை இலையில் தண்ணீரைப் போன்று எதுவும் ஒட்டப் போவதில்லை.

ஸ்விபெண்டர்: நல்ல ஆளுமையே நாட்டின் தோற்றத்தை மேம்படுத்துவதற்குச் சிறந்த, குறைந்த செலவைக் கொண்ட வழியாகும். நாட்டுக்கு அவமானத்தைத் தரக் கூடிய பல விஷயங்கள் இருக்கும் போது நமது தோற்றத்தை மேம்படுத்த பெரும் பணத்தைச் செலவு செய்வதில் எந்த நன்மையுமில்லை.

ஊழல், நமது நீதிமன்றங்கள், மோசடிகள், தாறுமாறான கொள்கைகள், சமய வெறி, எதிர்த்தரப்பு அரசியல்வாதிகளை ஒடுக்குவது ஆகியவற்றால் நமக்கு இப்போது தவறான விளம்பரம் கிடைத்து வருகிறது. 

அம்னோ வழி நடத்தும் அரசாங்கத்தின் ஆளுமை மோசமாக இருப்பதால் எவ்வளவு பணம் செலவு செய்தாலும் நமது தோற்றத்தை தூய்மைப்படுத்த முடியாது.

TAGS: