தாய்லாந்தின் தென்பகுதியில் பட்டாணி என்னும் கிராமத்தில் ஒரு ஆயுததாரி துப்பாக்கிப் பிரயோகம் செய்ததில் 3 வயது சிறுவன் ஒருவன் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
கிராமக் கடை ஒன்றின் முன்பாக எழுந்தமானமாக துப்பாக்கிப் பிரயோகம் செய்த அந்த துப்பாக்கிதாரி, பின்னர் அங்கிருந்து மோட்டார் சைக்கிள் ஒன்றில் தப்பி ஓடியதாக உள்ளூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இறந்தவர்களில் பெரும்பாலானோர் பௌத்தர்களாவர்.
தாய்லாந்து அரசாங்கத்துக்கும், முஸ்லிம் பிரிவினைவாதிகளுக்கும் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தை ஒரு முடக்க நிலையை எட்டியதை அடுத்து இரு நாட்களில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
முஸ்லிம்களை பெரும்பான்மையாகக் கொண்ட தாய்லாந்தின் தெற்கு மாகாணத்தில் 2004 ஆம் ஆண்டு கிளர்ச்சி ஆரம்பித்தது முதல் ஏற்பட்ட வன்செயல்களில் 5000க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.