வாக்காளர் பட்டியலை சோதிக்க பூதக் கண்ணாடியை இசி பயன்படுத்த வேண்டும்

ec“மே 5ம் தேதி வாக்குச் சீட்டு கொடுக்கப்படுவதற்கு முன்னர் ஒவ்வொரு வாக்காளரும் பூதக்கண்ணாடியைக்  கொண்டு சோதனை செய்யப்படுவார் என தேர்தல் ஆணையம் (இசி) சொல்ல வருகின்றதா ?”

‘அழியா மையின் கறைகளைப் பூதக்கண்ணாடியில் பார்க்க முடியும்’

பிஆர் ஆதரவாளன்: அழியா மையின் கறைகள் இருக்கும் என்றும் அவற்றை பூதக்கண்ணாடியில் பார்க்க முடியும் என தேர்தல் ஆணையம் சொல்கிறது. ஆகவே ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கும் பூதக்கண்ணாடிகள்
கொடுக்கப்படும் என்பதே அதன் அர்த்தமாகும்.

அடையாளம் இல்லாதவன்#78379017:மே 5ம் தேதி வாக்குச் சீட்டு கொடுக்கப்படுவதற்கு முன்னர் ஒவ்வொரு   வாக்காளரும் பூதக்கண்ணாடியைக் கொண்டு சோதனை செய்யப்படுவார் என தேர்தல் ஆணையம் (இசி)   சொல்ல வருகின்றதா ?

அடையாளம் இல்லாதவன்#85701391: இசி செயலாளர் அவர்களே, பூதக்கண்ணாடிகளை வழங்குவது மிக நல்ல  யோசனை. அந்த பூதக்கண்ணாடிகளை மிக அதிக விலைக்கு இசி, சேவகர் நிறுவனம் ஒன்றிடமிருந்து வாங்கப்  போவது இது தான் கடைசி முறையாக இருக்கும்.

பூதக்கண்ணாடிகளை 24 மணி நேரத்துக்குள் விமானத்தில் கொண்டு வரப்பட வேண்டியிருப்பதால் அதிக விலை கோர  வேண்டியுள்ளதாக விலைக் குறிப்புச் சிட்டையில் பூதக்கண்ணாடி விநியோகிப்பாளரை எழுதச் சொல்லவும்.

அத்துடன் பூதக்கண்ணாடியில் விரல்களைச் சோதனை செய்யும் ஊழியர்கள் 2020 பார்வையைக்
கொண்டவர்களாக இருப்பதையும் இசி செயலாளர் உறுதி செய்து கொள்ள வேண்டும்.

பழையவன்: அந்த மனிதர் என்ன தான் சொல்ல வருகிறார் ? பூதக் கண்ணாடியில் பல விஷயங்களைப் பார்க்க
முடியும். கொலைகாரர்களைப் பிடிப்பதற்கு அது ஒரு வழியாகும். அதற்கும் அழியா மை அழிக்கப்பட முடியும்
என்பதற்கும் என்ன சம்பந்தம் ?

காரணம்: இசி முதலில் வாக்காளர் பட்டியலை சோதிக்க பூதக் கண்ணாடியைப் பயன்படுத்த வேண்டும்.
வாக்காளர்களுடைய கைவிரல்களை அல்ல.

குவிக்னோபாண்ட்: பலர் சந்தேகம் தெரிவித்துள்ளதால் அழியா மையைத் தேர்தலில் பயன்படுத்த முடியாது என  இசி அறிவிக்கும் என நான் எதிர்பார்க்கிறேன்.

அடுத்து என்ன பழைய நிலைமை தான். டாத்தாரன் மெர்தேக்காவில் ஒரு மில்லியன் மக்கள் கூடுவது இனிமேல்  முடியாது. “திரும்பத் திரும்ப வாக்களிப்பவர்கள் வரவேற்கப்படுகின்றனர்” எனக் கூறும் விளம்பரப் பலகைகளை  எல்லா வாக்குச் சாவடிகளிலும் இசி வைக்கலாம்.

இந்திய தீர்க்கதரிசி: உலகில் உள்ள எல்லா பூதக்கண்ணாடிகளும் கூட ஒர் அப்பட்டமான பொய்யை மறைக்க
முடியாது.

 

 

TAGS: