வாக்களிப்பு நடைமுறைக்கு உதவியாக சட்டப்பூர்வ வாக்காளர்களை விமானத்தில் கொண்டு வருவதாகவும் பிகேஆர் சொல்வது போல சட்ட விரோத வாக்காளர்கள் அல்ல எனத் தான் சொல்வதற்கு பிஎன் ஆதாரத்தைக் காட்ட வேண்டும் என நடப்பு பிகேஆர் சுபாங் எம்பி ஆர் சிவராசா கேட்டுக் கொண்டுள்ளார்.
அந்த வாக்காளர்கள் சட்டப்பூர்வமானவர்கள் என்றும் அவர்களை கொண்டு வரும் வாடகை விமானங்களுக்கான கட்டணத்தை ‘பிஎன் நண்பர்கள்’ செலுத்துவதாகவும் பிஎன் தலைமைச் செயலாளர் தெங்கு அட்னான் தெங்கு மான்சோர் கூறியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
“அப்படி என்றால் அவர்கள் சட்டப்பூர்வ வாக்காளர்கள் என்பதற்கு எங்களுக்கு ஆதாரத்தைக் காட்டுங்கள். பெரும் எண்ணிக்கையில் அதுவும் எல்லோரும் கிழக்கு மலேசியாவிலிருந்து கோலாலம்பூருக்கு வரும் அவர்கள் யார் ? என சிவராசா இன்று நிருபர்கள் சந்திப்பில் கேள்வி எழுப்பினார்.
சபா, சரவாக்கிலிருந்து சந்தேகத்துக்குரிய வாக்காளர்களைக் கொண்டு வரும் நடவடிக்கை எனக் கூறப்படும் அந்த விவகாரம் மீது பிகேஆர் மேலும் தகவல்களைத் திரட்டி வருவதாகவும் அதிகமான ஆதாரங்களையும் ஆவணங்களையும் நாளை அது வெளியிடும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்நாட்டு சரித்திரத்தில் மிகவும் கறைபடிந்த, மோசமான தேர்தல் இதுதான் என்பது உறுதியாகிக்கொண்டிருக்கிறது.
எங்க இவனுங்களே காட்ட சொல்லுங்கே பாப்போம்…மழையாய் ஊத்தும்..இவனுங்க வாயை திறந்தாலே பொய் …அப்புறம் எப்படி ……..உண்மை எப்படியும் ஜெயிக்கும்…..கொஞ்சம் மெதுவாய் வரும் ஆனால் …
பின் பயந்து விட்டுது,
விமானதில் அழைத்து வரப்பட்ட இந்தா வாக்காளர்களால் bn நண்பர்களுக்கு என்ன ஆதாயம் கிடைக்கும்மென்று சொல்லுக்கோ. எதாவது பெரிய …பெரிய pro …….ஜேக் கொடுப்பதாக சொன்னிர்களோ.
அவர்கள் உண்மையிலே மலேசியா குடியுரிமை உள்ளவர்கள் என்றல்; அவர்களுக்கு அவர்களின் முதலாளிமார்களை kwsp செலுத்த சொல்லுங்கள். அவர்களின் தாய் நாட்டு குடியுறுமையை தடை செய்யுங்கள்.மலேசிய மக்கள் எல்லோருக்கும் ஒரு நாட்டு குடியுறுமை தான் இருக்க வேண்டும் என்று சட்டம் உள்ளதே.நீங்கள் இதையெல்லாம் செய்தால் அப்புறம் நீங்கள் சொல்வதை எல்லாம் நாங்கள் நம்புகிறோம்.
இந்த நாட்டு பிரஜைகள் தவிர அந்நிய பிரஜைகள் இந்த தேர்தலில் வாக்களிக்க மலேசியர்கள் ஆகிய நாம் வாய்பளிக்க கூடாது .நேர்மையான தேர்தல் மூலம் தேர்வு பெரும் கட்சிக்கே மக்கள் முன்னுருமை கொடுக்க வேண்டும் .
உன்னை பார்தால் pavamaga இருக்கிறது