‘பெரும் எண்ணிக்கையில் வாக்களிப்பதே சட்ட விரோத வாக்காளர்கள் ஏற்படுத்தும் பாதிப்பைக் குறைப்பதற்கு ஒரே வழி’

voteஉங்கள் கருத்து : “இசி அம்னோவுக்காக வேலை செய்கிறது என்பது நிச்சயம். இல்லை என்றால் இவ்வளவு தில்லுமுல்லுகள்  எப்படி நடக்க முடியும் ? அடையாளக் கார்டு திட்டமும் எப்படி நிறைவேற்றப்பட முடியும் ?”

பிகேஆர்: சந்தேகத்துக்குரிய வாக்காளர்களை விமானத்தில் கொண்டு வருவதில் பிரதமர் அலுவலகம் சம்பந்தப்பட்டுள்ளது

பெர்ட்தான்: எல்லாம் போதும், போதும். பக்காத்தான் ராக்யாட் தலைவர் அன்வார் இப்ராஹிம் மட்டுமின்றி  மலேசியர்களாகிய நாங்களும் கூட தேர்தல் (இசி)ஆணைய அதிகாரிகள் , அரசாங்க ஊழியர்கள், ஏர்  ஏசியாவிலும் எம்ஏஎஸ்-ஸிலும் உள்ள முதுநிலை அதிகாரிகள், பிஎன் உறுப்பினர்கள் ஆகியோருடைய  நடவடிக்கைகள் குறித்து ஆத்திரமடைந்துள்ளோம். அவர்கள் மக்களிடமிருந்து தேர்தலைத் திருட  முயலுகின்றனர்.

மலேசியர்களிடமிருந்து இந்தத் தேர்தலை திருடுவதற்கு குடிமக்கள் அல்லாதாரை அனுமதிப்பது தேசத் துரோகமாகும்.

இறைவன் அல்ல: வாக்களித்தவர் விகிதம் 95 விழுக்காட்டுக்கு மேல் இருந்தால் தான் சட்ட விரோத வாக்காளர்கள் ஏற்படுத்தும் பாதிப்பைக் குறைக்க முடியும். (நாம் குறைக்கத் தான் முடியும். முற்றாக தடுக்க முடியாது) இது மாபெரும் பணியாக இருக்கும்.

இன்னொரு வழி இது தான்: மலாய்க்காரர்கள் விழித்துக் கொண்டு அவர்கள் உள்ளத்தில் அம்னோ பதிய வைக்க முயலும் இனவாத சித்தாந்தத்தை ஒதுக்கி விட்டு, அம்னோ/பிஎன் அரசாங்கம் இப்போது வெளிப்படையாக செய்து வருகின்ற சூறையாடலையும் ஊழலையும் சேவகர்களுக்கு உதவி செய்யும் போக்கையும் ஒழித்து நாட்டை மீண்டும் ஒளிமயமான சரியான பாதையில் வைக்க உதவ வேண்டும்.

இசி அம்னோவுக்காக வேலை செய்கிறது என்பது நிச்சயம். இல்லை என்றால் இவ்வளவு தில்லுமுல்லுகள் எப்படி நடக்க முடியும் ? அடையாளக் கார்டு திட்டமும் எப்படி நிறைவேற்றப்பட முடியும் ?

என் பெயர் ராம்லி: 1) பிஎன் அந்நிய வாக்காளர்களைக் கொண்டு வர வேண்டிய அவசியமே இல்லை. அதற்குத் தேவைப்பட்டால் உள்ளூரில் கிடைக்கும் அந்நியர்களைப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

2) பிஎன் முட்டாள் அல்ல. தேர்தலை உலக ஊடகங்கள் கண்காணித்துக் கொண்டிருக்கின்றன. வாக்களிப்பதற்காக அது அந்நியர்களை எளிதாகக் கொண்டு வர முடியாது.

3) அன்வாருடைய அறிக்கை இவ்வாறு தான் இருக்க வேண்டும் என எனக்குத் தோன்றுகிறது. “நான் தோற்று விட்டேன். இது தான் காரணம். அவருடைய 2008, 2013 தேர்தல் கொள்கை அறிக்கைகள் நடைமுறைக்கு ஏற்றவை அல்ல என்பதை அது காட்டுகின்றது.

பல இனம்: பராமரிப்பு அரசாங்கப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கிற்கு இது குறித்து எதுவும் தெரியாது என்றால் தேர்தலில் இத்தகைய சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் யார் மீதும் தேசத் துரோகத்திற்காக வழக்குத் தொடரப்படும் என அவர் தெளிவாக அறிவிக்க வேண்டும்.

ஜான் 3: இது மிகவும் கடுமையானது. பிஎன் கூட்டணியில் உள்ள மற்ற உறுப்புக் கட்சிகள் என்ன சொல்கின்றன  ? இது குறித்து என்ன செய்யப் போகின்றன  ஆவி வாக்காளர்கள் பெரும் எண்ணிக்கையில் விமானத்தில் கொண்டு வரப்படுவது உண்மை என்றால் அது பெரிய தேசத் துரோகமாகும். துரோகிகள் மக்களுடைய கோபத்தை எதிர்நோக்க வேண்டும்.

தாய்கோதாய்: ஆகவே அது இப்போது பெரிய தேசத் துரோகத்தைச் செய்கின்றது. ஜனநாயகத்தின் உயிர்நாடியான பொதுத் தேர்தலைக் கீழறுப்புச் செய்ய அது அந்நியக் கூலிகளைக் கொண்டு வருகின்றது.

உண்மையில் அது பல ஆண்டுகளாக இதனைத் தான் செய்து வருகின்றது. ஆனால் இப்போது அப்பட்டமாக செய்கின்றது. புத்ராஜெயாவிலிருந்து அது விழப் போவது நிச்சயம்.

என்ன நடக்கிறது: நேற்று விமான நிலையத்தில் நடந்ததைப் பார்த்து நானும் வருத்தமடைந்தேன். என் சகோதரருக்காக நான் அங்கு ஒரு மணி நேரம் இருந்தேன். அவர்களை சந்தேகத்துக்குரிய நபர்கள் வேன்களிலும் பஸ்களிலும் அழைத்துச் சென்றார்கள்.

அவர்கள் சந்தேகத்துக்குரிய வாக்காளர்களா என நான் எனக்குள் கேட்டுக் கொண்டேன். இந்த அப்பட்டமான மோசடியைத் தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

பொய்யர்களை வேரறுப்போம்: இன்னும் மனச்சாட்சியுள்ள அம்னோ உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் அம்னோவின் தீய தலைமைத்துவத்திடமிருந்து நாட்டைக் காப்பாற்ற எதிர்க்கட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டும்.

இல்லை என்றால் இந்த நாட்டின் அழிவுக்கு அவர்களும் உடந்தை எனக் கருதப்படுவர். அவர்கள் செய்யும் அந்த காரியம் ஆயுட்காலத்துக்கு அவர்களைச் சபித்து விடும்.

ஸ்விபெண்டர்: அந்த ஆதாரம் தேர்தலுக்கு முன்னதாக உலகம் முழுவதும் பரப்பப்பட வேண்டும். 13வது பொதுத் தேர்தலில் நடக்கும் மோசடிகளை உலகம் அறிய அது உதவும்.

இந்தத் தகவல் யுகத்தில் அது சிரமமல்ல. உலகம் அதனை அறியுமானால் முடிவு வரை அந்த மோசடியைத் தொடரும் துணிச்சல் நஜிப்புக்கும் இசி-க்கும் வருமா எனப் பார்ப்போம்.

அடையாளம் இல்லாதவன் #79199503: நஜிப் அவர்களே உங்கள் சக குடிமக்களுக்கு எப்படி இந்த அநீதியை இழைக்க முடியும் ?

 

TAGS: