நஜிப் இஸ்தானா நெகாராவில் பிரதமராகப் பதவி உறுதி மொழி எடுத்துக் கொண்டார்

najibநஜிப் அப்துல் ரசாக் இஸ்தானா நெகாராவில் உள்ள பாலாய் ரோங் ஸ்ரீ-யில் யாங் டி பெர்துவான் அகோங் துவாங்கு அப்துல் ஹலிம் முவாட்ஸாம் ஷா முன்னிலையில் இன்று மாலை மணி 4.07க்கு பிரதமராக பதவி உறுதி மொழி எடுத்துக் கொண்டார்.

அந்தச் சடங்கின் போது ராஜா பரமைசுரி அகோங் துவாங்கு ஹாஜ்ஜா ஹாமினாவும் உடன் இருந்தார்.

59 வயதான நஜிப் தமது மனைவி ரோஸ்மாவுடன் இஸ்தானா நெகாராவுக்குச் சென்றிருந்தார்.

நஜிப்பின் தந்தையார் அப்துல் ரசாக் ஹுசேன், நாட்டின் இரண்டாவது பிரதமராக இதே மாமன்னர் முன்னிலையில் 1970ம் ஆண்டு பதவி உறுதி மொழி எடுத்துக் கொண்டார்.

நேற்றைய பொதுத் தேர்தலில் மொத்தமுள்ள 222 நாடாளுமன்ற இடங்களில் பிஎன் 133ஐ வென்று அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொண்டது. அதனால் அது புதிய கூட்டரசு அரசாங்கத்தை அமைக்கிறது.

அந்தச் சடங்கில் முன்னாள் பிரதமர் அப்துல்லா அகமட் படாவி, பிஎன் உறுப்புக் கட்சிகளின் தலைவர்கள் ஆகியோரும் கலந்து கொண்டார்கள்.

-பெர்னாமா

TAGS: