மகாதீர் தாக்குதலை தொடங்கி விட்டார்

mahathir‘மகாதீர் நஜிப் மீது முதல் ஏவுகணையை எறிந்து விட்டார். நஜிப் விழும் வரை அடுத்தடுத்து ஏவுகணைகள்  வீசப்படும். அடுத்து முஹைடின் மேலே போவார்’

டாக்டர் மகாதீர்: நஜிப் பாக் லா-வைக் காட்டிலும் மோசமாகச் செய்வார் என நான் எதிர்பார்க்கவில்லை.

பெர்ட் தான்: அம்னோவில் குதிரை வியாபாரம் தொடங்கி விட்டது. இவ்வாண்டு இறுதியில் நிகழும் என
எதிர்ப்பார்க்கப்படும் அம்னோ தேர்தலில் தலைவர் பதவி என்ற மகுடத்தைப் பெறுவதற்கு புதிதாக  பொறுப்பேற்றுள்ள பிரதமர் நஜிப் ரசாக்கும் துணைப் பிரதமர் முஹைடின் யாசினும் அம்னோ ஜமீன்தார்களையும்  ‘சக்கரவர்த்தி’ (முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட்டையும் கவருவதற்கு சந்தையில் வியாபாரத்தைத்  தொடங்கி விட்டனர்.

மகாதீரும் தமது புதல்வரும் இப்போது கெடா மந்திரி புசாருமான முக்ரிஸை நல்ல நிலையில்
வைக்க-பெரும்பாலும் துணைத் தலைவராக நஜிப் அல்லது முஹைடினு-டன் இணைக்க சந்தையில்
நுழைந்துள்ளார். அப்போது தான் இளைய மகாதீர் வெகு முன்னுக்கு வர முடியும். அவரது தந்தைக்கு
இப்போது வயது 88 ஆகிறது.

இன்னும் எவ்வளவு ஆண்டுகளுக்கு மகாதீர் உயிரோடு இருக்கப் போகிறார் ? மகாதீர் அவர்களே நீங்கள்
இப்போது நடந்து கொள்ளும் முறையைப் பார்த்தால் உங்களுக்கு என்ன தான் பாரம்பரியம் இருந்தாலும்
வரலாறு உங்களை நன்றாக எழுதப் போவதில்லை. பிலிப்பீன்ஸ் அதிபர் பெர்டினாண்ட மார்கோஸ் போன
வழியில் தான் நீங்களும் செல்லப் போகின்றீர்கள்.

ஜோஆன்எச்: 13வது பொதுத் தேர்தலில் பிஎன் அடைவு நிலை மோசமானதற்கு மகாதீரே காரணம். அவர்
சீனர்களுக்கு எதிராக விஷத்தை கக்குகிறார். தப்பித்தும் கொள்கிறார்.

அவர் இரண்டு பெர்க்காசா தலைவர்களுக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்தது மலாய்க்காரர் அல்லாதார்
பிஎன் -னை வெளிப்படையாக நிராகரிக்க வழி வகுத்து விட்டது. நஜிப்பை வீழ்த்தி விட்டு தமது ஆளான
துணைப் பிரதமரை மேலே கொண்டு வருவது தான் மகாதீருடைய திட்டம்.

பின்னர் நாடு மீண்டும் மகாதீர் கட்டுக்குள் வந்து விடும். ஒரு வேளை நஜிப் மகாதீரைத் தோற்கடித்து முன்னாள்
பிரதமர் மீது குற்றச்சாட்டுக்களை சுமத்தவும் கூடும்.

போர்க் கினாபாலு: “அரசமைப்பின் படி அம்னோ ஆதரிக்கும் வரை அவர் அரசாங்கத் தலைவராக இருப்பார்,”
என மகாதீர் மேலும் சொன்னார்.

மலேசிய அரசியலில் மன்னராகத் திகழும் ஒருவருடைய வாயிலிருந்து வந்த வார்த்தைகளே அவை.
உண்மையில் பிஎன் இல்லை, கூட்டணியும் இல்லை என்ற உண்மை இப்போது வெளிச்சத்துக்கு வந்து விட்டது.  அது அம்னோ தான்.

மெங்சியாங்: மகாதீர் அவர்களே, பிஎன் -னுக்கு பிரச்சாரம் செய்த உங்களுக்கு நன்றி. உங்களால்
பக்காத்தானுக்கு கூடுதலாக சில நாடாளுமன்றத் தொகுதிகள் கிடைத்தன. குறிப்பாக கேலாங் பாத்தாவைச்
சொல்லலாம். எதிர்க்கட்சிகள் சொந்தமாக அந்த இடத்தை வென்றிருக்க முடியாது.

உங்கள் அருமை நண்பர் இப்ராஹிம் அலி பாசிர் மாஸ் நாடாளுமன்றத் தொகுதியில் தோல்வி அடைந்த
செய்தியைக் கேட்டு வருத்தமடைந்தேன். உங்களுக்கு சில இடங்களில் வெற்றி, சில இடங்களில் தோல்வி என
நான் நினைக்கிறேன்.

நஜிப் அப்துல்லாவைக் காட்டிலும் நன்றாகச் செய்வார் என நீங்கள் எண்ணியிருந்தீர்களா ? நீங்கள் மிக
சாதுர்யமான அரசியல்வாதி  என நான் எண்ணியிருந்தேன். நஜிப் உண்மையில் இந்தத் தேர்தலில் தோற்று
விடுவார் என நான் எதிர்பார்த்தேன். உண்மையும் அது தான்.

எம்  திட்டத்தை அமலாக்கிய உங்கள் காலடிகளை அவர் முத்தமிட வேண்டும். இல்லை என்றால் அவர்
எப்படி வெற்றி பெற்றிருப்பார் ?

Ano1nymous: மகாதீர் நஜிப் மீது முதல் ஏவுகணையை எறிந்து விட்டார். நஜிப் விழும் வரை அடுத்தடுத்து
ஏவுகணைகள் வீசப்படும். அடுத்து முஹைடின் மேலே போவார்.

முக்ரிஸ் கெடாவில் வலிமையைப் பெருக்குவார். அடுத்து அம்னோ துணைத் தலைவருக்கு போட்டியிடுவார்.
பின்னர் துணைப் பிரதமராகவும் பிரதமராகவும் இறுதியில் பிரதமராகவும் ஆவார். மக்கள் ஆத்திரமடைந்து
பிஎன் -னுக்கு எதிராக வாக்களிக்கச் செய்யும் பொருட்டு மகாதீர் சர்ச்சைக்குரிய பல அறிக்கைகளை
வெளியிட்டார். நஜிப் பெரிய வெற்றியை அடையாமல் வீழ்த்துவதற்கு எளிதாக இருக்கும் பொருட்டு அவர்
அதனைச் செய்தார்.

அவரது திட்டத்தின் படியே எல்லாம் நடக்கின்றன. நஜிப்புக்குப் பதில் முஹைடினையும் இறுதியில் முக்ரிஸையும்  பிரதமராகப் பெறுவதற்கும் மகாதீர் தத்துவம் நிலை பெறுவதற்கும் மலேசியர்கள் விரும்புகின்றனரா ?

முஹைடின் நஜிப்புக்கு அச்சமூட்டும் அம்சமாகும். பயங்கரக் கனவுகளைத் தவிர்க்க நாம் நஜிப்புக்கு
ஆதரவளிப்போம். கெடாவில் உள்ள அம்னோ தொகுதிகளில் முக்ரிஸ் வலிமை பெற அவரை அந்த மாநில
மந்திரி புசாராக்குமாறு மகாதீர் நஜிப்பை மருட்டியிருக்க வேண்டும்.

Boom Boom Pow!: பக்காத்தானுக்கு ஆதரவு அளித்த மலாய்க்காரர்களைப் பற்றி மகாதீர் இவ்வாறு
சொல்கிறார்: “அவர்கள் கல்வி கற்றவர்கள்”.

நன்கு சிந்திக்கத் தெரியாதவர்கள் எனக் கருதப்படும் கல்வி கற்காத மலாய்க்காரர்களே பிஎன் -னுக்கு
வாக்களித்தனர் என அவர் மறைமுகமாகச் சொல்ல வருகிறார். என்ன வேடிக்கை.

 

TAGS: