கறுப்பு புதன் கிழமை கூட்டம் மக்கள் வெற்றி பெற்றதைக் காட்டுகின்றது

Blackஉங்கள் கருத்து : ‘நான் அங்கு இருந்தேன். பிஎன் மீதும் அதன் இனவாதப் போக்கு மீதும் வெறுப்புணர்வு அங்கு நிலவியது.  காலம் மாறுகின்றது’

13வது பொதுத் தேர்தலுக்குப் பிந்திய கூட்டத்தில் 120,000 பேர்

ஒடின்: அந்தப் பேரணியை நடத்துவதற்கான முடிவு கடைசி நேரத்தில் எடுக்கப்பட்டது. அதற்காக நல்ல ஏற்பாடுகளைச் செய்ய நேரமில்லை. கைது செய்யப்படலாம் என ஏற்பாட்டாளர்களும் பங்கேற்பாளர்களும்  மருட்டப்பட்டனர்.

ரொக்க அன்பளிப்புக்கள் கொடுக்கப்படவில்லை. இலவச உணவும் சுவை பானங்களும் இல்லை. பரிசுகளும் இல்லை. எதுவும் இல்லை. மழையும் பெய்து கொண்டிருந்தது. இருந்தும் எல்லா இனங்களையும் சார்ந்த 100,000க்கும் மேற்பட்ட மக்கள் மழையையும் போக்குவரத்து நெரிசலையும் பொருட்படுத்தாமல் அந்தப் பேரணியில் பங்கு கொள்ள வந்தனர்.

பேச்சற்றவன்: உண்மையில் அது பல இனப் பேரணியாகும். நகர்ப்ப்புற மலேசிய மக்களை அவர்கள்
பிரதிநிதித்தனர். 13வது பொதுத் தேர்தலில் சீனர் சுனாமி ஏற்பட்டது என்ற எண்ணம் நஜிப்புக்கு எங்கிருந்து வந்தது ?

நான் கிளானா அரங்கில் நின்று கொண்டிருந்தேன். நான் பல மலாய்க்காரர்களையும் இந்தியர்களையும் பார்த்தேன். நியாயமான, சுதந்திரமான தேர்தல்களுக்கும் சட்டப்பூர்வ அரசாங்கத்துக்கும் பல இளம் மலேசியர்கள் கோரிக்கை விடுத்தததையும் பார்த்தேன்.

பெர்ட் தான்: நான் அதிகாலை 2 மணிக்குத் தான் வீடு திரும்பினேன். கூட்டத்தினர் மிகவும் சீராக நடந்து கொண்டனர். மழை அங்கிருந்த பக்காத்தான் ராக்யாட் ஆதரவாளர்களுடைய உணர்வுகளை மங்கச் செய்யவில்லை. அவர்களில் பலர் இளைஞர்கள். அது எதிர்கால மலேசியாவுக்கு நல்ல சகுனமாகும்.

நமது இளைஞர்கள் அரசியல் குறித்து மாறுபட்ட போக்கைப் பின்பற்றவில்லை. அவர்களைக் கவர பக்காத்தான்  தலைவர்கள் அதிக நேரத்தைச் செலவு செய்ய வேண்டும். நாட்டின் எதிர்காலம் அவர்கள் கையில்.

அவர்கள் தீவிர அரசியலில் ஈடுபட வேண்டும் என்ற அவசியமில்லை. அவர்களுக்கு தலைமைத்துவப்
பயிற்சிகளை வழங்கலாம். அடுத்த தேர்தலுக்குத் தேவைப்படும் போது அவர்களது வளங்களைப் பயன்படுத்திக்  கொள்ளலாம்.

நாம் முன்னேற வேண்டும். அதற்கான வேலை இப்போது தொடங்க வேண்டும்.

197747_10151417910132043_496299850_nஸ்விபெண்டர்: ஊழல் நிறைந்த, ஏமாற்று வேலைகளில் ஈடுபடும், மக்களைப் பிளவுபடுத்தும் அம்னோ ஆதிக்கம்  பெற்ற அரசாங்கம் மலேசியர்களை ஐக்கியப்படுத்தியுள்ளது. வாழ்க்கையின் எல்லாப் பிரிவுகளையும் சார்ந்த பல  இன மக்கள் அங்கு இருந்தார்கள்.

எந்த ‘சீனர் சுனாமியை’ பற்றி நஜிப்புடன் அம்னோவும் உத்துசான் மலேசியாவும் பேசிக் கொண்டிருக்கின்றன ?

நாட்டை பாதித்துள்ள சீர்கேடுகளை மறைக்க  அவை மலேசியச் சீனர்கள் மீது பழி போடுகின்றன. அது உண்மையில்  மலேசியர்/நகர்ப்புற சுனாமி. அம்னோ ஆடுகின்ற இனவாத ஆட்டத்துக்கு விஷயம் தெரிந்த மலேசியர்கள்  இரையாக மாட்டார்கள்.

JT1E80: மக்களை ஒன்றுபடுத்த ஒரு விஷயம் இறுதியில் வந்து விட்டது. ஊழல் அரசாங்கத்தின் மீதான வெறுப்புணர்வு மக்களை ஒன்றுபடுத்தியுள்ளது.

மலேசியர்கள் என்பதற்கான அர்த்தம் இப்போது தான் தெரிகிறது. சட்டப்பூர்வமில்லாத அம்னோ/பிஎன்
அரசாங்கத்தை துரத்துவதற்கான நேரம் வந்து விட்டது.

நான்: நான் அங்கு இருந்தேன். பிஎன் மீதும் அதன் இனவாதப் போக்கு மீதும் வெறுப்புணர்வு அங்கு நிலவியது. காலம் மாறுகின்றது.

ஹாக்ஸ்: போக்குவரத்து மெதுவாக ஊர்ந்து கொண்டிருந்தது. நீங்கள் மோட்டார் சைக்கிளில் சென்றாலும் அதே  நிலை தான். அங்கு பல இன மக்களைப் பார்த்த போது மே 13 போன்ற இனப் பதற்றம் மீண்டும் ஏற்பட வழியே இல்லை.

கஞ்சில் கார் ஒன்றின் ஜன்னலில் தொங்கிக் கொண்டிருந்த பாஸ் கொடியை நடுத்தர வயது சீனர் ஒருவர் முத்தமிட்டதை நான் பார்த்தேன். அதே வேளையில் மலாய் இளைஞர்கள் டிஏபி கொடிகளை மோட்டார் சைக்கிள்களில் பறக்க விட்டிருந்தனர். தேர்தல் மோசடி காரணமாக பிஎன் கவிழப் போகிறது என நான் எண்ணுகிறேன்.

TAGS: