பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலி எல்லா ஊகங்களையும் மறுத்து தாம் தொடர்ந்து கட்சியில் இருக்கப் போவதாக அறிவித்துள்ளார்.
கோம்பாக் எம்பி-யாகவும் புக்கிட் அந்தாரா பாங்சா சட்டமன்ற உறுப்பினராகவும் தம்மைத் தேர்வு செய்த மக்களுடைய நம்பிக்கைக்கு தாம் துரோகம் செய்யப் போவதில்லை என்றும் அவர் சொன்னார்.
“தொடர்ந்து கனவு காணுங்கள். தேர்வு செய்யப்பட்ட துணைத் தலைவர் பொறுப்பிலிருந்து விலகும் எண்ணம் எனக்கு இல்லை.”
“அடுத்ததாக, மிக முக்கியமாக தங்களது எம்பி-யாகவும் மாநிலச் சட்டமன்ற உறுப்பினராகவும் என்னைத் தேர்வு செய்த மக்களுடைய நம்பிக்கைக்குத் துரோகம் செய்ய மாட்டேன்,” என அஸ்மின் சொன்னார்.
சிலாங்கூர் மந்திரி புசார் பதவியை தாம் நாடுவதாக சொல்லப்படுவது முற்றிலும் தவறானது எனக் குறிப்பிட்ட அவர், கட்சியின் இணக்கம் இல்லாமல் அந்தப் பதவி குறித்த முடிவு எடுக்கப்படுவதாக சிலாங்கூர் பிகேஆர் தலைமைத்துவம் கவலை அடைந்துள்ளது என்று மட்டும் அவர் கூறிக் கொண்டார்.
தேர்தலுக்கு முன்னும் இப்படித்தான் பல குழப்பங்கள் ,இன்னும் நீங்கள்
பண்படவில்லையா ?
பி கே ஆர் கட்சியில் அறிக்கை விடுமுன் கட்சியின் நலன் பற்றி நீங்கள்
எல்லாம் கவலைப்படுவதில்லையா ?
உங்கள் விருப்பு வெறுப்பை ஒதுக்கிவிட்டு கட்சியின் நலன் பேணுங்கள் !!!
மக்கள் பார்ப்பது கட்சியை …பிறகு தான் மற்றவர் .
இருக்கும் சூழலில் உங்கள் நலனை வீசி விட்டு கட்சிக்கு நேர்ந்திருக்கும் சேதத்தை மீட்க வழிகாணுங்கள் .
உன்னை பார்த்து எவனும் ஒட்டு போடவில்லை ,கட்சியை பார்த்து போடப்பட்டது bn அல்லது pkr
கட்சி நலன் கருதி செயல் படுங்கள் .உங்கள் மீது கட்சியின் ஆலோசகர் நல்ல அபிபிராயம் வைத்துள்ளார் .
இது ஒரு பிரச்சனையாகவே வந்திருக்கக் கூடாது. காலித் ஒரு சிறந்த முதலமைச்சர் என்று பெயர் எடுத்திருக்கிறார். சட்டமன்றத்தில் அவர் 3/2 பங்கு வெற்றியையும் கொண்டு வந்திருக்கிறார். இந்தியர்களைப் பொருத்தவரை அவர் ஒரு சிறந்த முதலமைச்சர். அவருடைய சாதனைகள் தொடர வேண்டும்.
இப்போதைக்கு இவன் கூறும் சமாதானம் இது. ஆனால் உண்மை விரைவில் தெரிய வரும். பாரிசானுடன் இவன் இன்னும் பேரம் பேசி முடிக்கவில்லை. தொடர்கிறது, எனவே, இவன் கட்சி மாறப்போவதும் உறுதி.