பிஎன்னில் சேரப்போவதில்லை: டிஏபி திட்டவட்டம்

1 kuan engதேர்தலில் படுதோல்வி கண்டதால்  அமைச்சரவை பதவி ஏற்கப்போவதில்லை என்று மசீச கூறியிருப்பதால் டிஏபி பிஎன்னில் சேர வேண்டும் என்று கூறப்பட்டிருக்கும் ஆலோசனைகளை அக்கட்சி நிராகரித்தது.

அது பக்காத்தானின் ஒற்றுமையை உடைக்க பிஎன் கையாளும் ஒரு தந்திரம் என்று டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் கூறினார்.

1 kuan eng1“பதவிக்காக பிஎன்னில் சேரும் எண்ணம் டிஏபிக்குக் கிடையாது. அப்படி நினைத்திருந்தால் கடந்த 40 ஆண்டுகளில் எப்போதோ அதைச் செய்திருப்போம்”, என்று அவர் ஓர் அறிக்கையில் குறிப்பிட்டார்.

“பிஎன்னில் சேர்வதை மறுத்து நியாயமான, சுதந்திரமான, ஜனநாயக மலேசியா என்ற கொள்கையை விடாது கடைப்பிடித்து வந்திருக்கிறோம்.

“டிஏபி தலைவர்கள் பதவிகளையும் சலுகைகளையும் மறுத்து வந்ததோடு. உரிமைகளை இழந்தவர்களாக சிறைகளில் தடுத்து  வைக்கப்பட்டிருக்கிறார்கள்”, என்றாரவர்.

‘அது பக்காத்தானை உடைக்கும் நோக்கம் கொண்டது’

“மசீச எம்பி ஒருவரும் இனவாத முன்னாள்-அம்னோ அமைச்சர் ஒருவரும்  டிஏபி பிஎன்னில் சேர வேண்டும் என்ற  ஆலோசனையை முன்வைத்திருக்கிறார்கள். இது தேர்தல் சீரமைப்புக்காக பக்காத்தான் நடத்தும் போராட்டத்தையும் பக்காத்தானின் ஒற்றுமையையும் சிதறடிக்கும் நோக்கம் கொண்டது”, என்று பாகான் எம்பியுமான லிம் கூறினார்.

பிஎன் ஒத்துழைப்பை விரும்பினால் பக்காத்தானுடன்தான் பேச வேண்டுமே தவிர, கட்சிகளிடம் தனிப்பட்ட முறையில் பேசக்கூடாது.

தேர்தல் சீரமைப்புகளை நடைமுறைப்படுத்துவதில் பிஎன்னுடன் ஒத்துழைக்க பக்காத்தான் தயராக உள்ளது என்றும் அவர் சொன்னார்.

TAGS: