டிஏபி, பிஎன்னில் சேரும் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று கூறிய அதன் தலைவர் கர்பால் சிங், வேண்டுமானால் பக்காத்தானில் சேர்வது பற்றி பிஎன் ஆலோசிக்கலாம் என்று கிண்டலடித்தார்.
“அப்படி (பிஎன்னில் சேர) முடிவு செய்யப்பட்டால் டிஏபி-யைவிட்டு முதலில் வெளியேறுவது நானாகத்தான் இருப்பேன். நீங்கள் அனைவருமே நான் சொல்வதை ஒப்புக்கொள்வீர்கள் என்பது நிச்சயம்”. இன்று காலை டிஏபி-இன் தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்களின் கூட்டத்தைத் தொடக்கி வைத்து உரையாற்றியபோது கர்பால் இவ்வாறு கூறினார்.
எனினும், நாட்டில் அரசியல் முனைவாக்கம் (polarisation)நிகழாதிருக்க தேசிய நலன்கள் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் பிஎன்னுடன் இணைந்து பணியாற்றுவது பற்றி கட்சி “ஆழ்ந்து ஆராய வேண்டும்” என்றாரவர்.
“ஆனால் எது நல்லது என்று கேட்டால் பிஎன் பக்காத்தானில் சேர்வதுதான் நன்றாக இருக்கும் என்பேன்” என்றவர் குத்தலாகக் கூறினார்.
தேசிய நலன்கள் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் இணைந்து பணியாற்றுவது பற்றி கட்சி ஆழ்ந்து ஆராய வேண்டும் என்பது நல்ல விஷயம் தான். அம்னோ தரப்பு ஒப்புக்கொள்ளாதே! அவர்களுக்கு ஏது தேசியம்?
yb சார்…!அப்படி நடந்தால்?முதலில் முயிடினை மொட்டை போடா சொல்ல வேண்டும்….
சிங் இது கிங் .(பரவாயில்லையே நகைசுவை செய்கிறாரே )
கர்பால் கொஞ்சம் சிந்திக்க வேண்டும். பாரிசான் மாடு, பக்காத்தானில் இணைந்தால் பக்காத்தானையும் பிரித்து மேய்ந்து விடும். ம.சீசா வைப் பாருங்கள். ம.இ.கா வைப் பாருங்கள்…சீனர்களுக்கும் இந்தியர்களுக்கும் இத்தனைக் கட்சிகள் எப்படி வந்தன? எல்லாம் பாரிசானின் பிரித்தாளும் கொள்கையினால் தான். ஆனால் அவர்களின் அந்த கொள்கையே அவர்களுக்கு இப்போது ஆப்பு வைக்கத் தொடங்கிவிட்டது. அதுதான் சொந்தப் பணத்திலேயே சூன்யம் வைத்துக் கொள்வது என்பது.