கெராக்கான் கட்சித் தலைவர் கோ சூ கூன் -னும் தலைமைச் செயலாளர் தெங் சாங் இயாவ் -வும் அடுத்த வாரம் தங்கள் கட்சிப் பதவிகளிலிருந்து விலகிக் கொள்கின்றனர்.
கோலாலம்பூரில் இன்று கட்சித் தலைமையகத்தில் சக கெராக்கான் தலைவர்களை சந்தித்த பின்னர் கோ அந்தத் தகவலை அறிவித்தார்.
13வது பொதுத் தேர்தலில் கெராக்கான் மோசமான அடைவு நிலையைப் பெற்றதற்குப் பொறுப்பேற்று தாங்கள் பதவி துறப்பதாக அவர் மேலும் சொன்னார்.
கட்சியின் தேர்தல் நடைமுறை தொடங்கும் ஜுன் மாதம் வரையில் துணைத் தலைவர் சாங் கோ யூன் இடைக்காலத் தலைவராக செயல்படுவார்.
மசீச-வைப் போன்று கெராக்கானும் கூட்டரசு அமைச்சரவையில் எந்தப் பதவிகளையும் ஏற்றுக் கொள்ளாது என்றும் கோ கூறினார். என்றாலும் அதற்குப் பதில் மாநிலத் தலைமைத்துவப் பதவிகளை கெராக்கான் ஏற்றுக் கொள்ளும் என்றார் அவர்.
சீனர்களின் ஒற்றுமைக்கு ஒரு அளவே இல்லை .சீனர்கள் என்ற போதும் ஹாக்க , ஹோகிஎன் , கண்தொனுஸ் போன்ற இனத்தை செர்தவர்களும் மதித்து தங்கள் தாய் மொழியை பள்ளியில் ஒரு பாடமாக கற்றுகொடுபதிலும் சரி ,தொலைகாட்சி நிகழ்சிகளிலும் எல்லா சீன தாய்மொழி நிகழ்சிகளுக்கும் ஒளிபரப்புவதிலும் சரி சீனர்களை போல வராது . தெரு ஆர்பாடங்களிலும் ஒருவரின் உருவபோம்பையை எரிப்பதிலும் சரி நம்மை போல இல்லை அவர்கள் . அமைதியான முறையிலே அவர்கள் எதிர்ப்பை வெளிபடுத்தினார் . MI C காரார்களும் சீனர்களை முன் உதாரணமாக கொண்டால் நல்லது
பாவம் கோகிலன் பிள்ளை! சீனன் பல்டி அடிப்பான் என்று தெரியாது.
சினன்
பிள்ளைக்கு
வாய்பு கொடுப்பான் பாவம் சின்ன குழந்தை ஜதி சின்னதை விட்டு கொண்டால் இப்படி தன்.
இவர் மானமுள்ள தலைவர். ம இ காவின் தலைவன் மானம் போன தலைவன்.
கூஜா தூக்கி போவதும் சரிதான் .கேரகான் உருப்பட வழி பாருங்கள் .
உம்னோ காரான் கேவலமாக பேசிய பொழுதே bn னிலிருந்து; வெளியேறி இருந்தால் இந்தா மாதிரி நிலைமை ஏற்பட்டிருக்குமா?
மின்மினி சரியான கருத்தை சொன்னார் !