சிலாங்கூர் மந்திரி புசார் நியமனம் தாமதமாவது மக்கள் நம்பிக்கையைப் பாதிக்கிறது

1 guanடிஏபி தலைமைச்  செயலாளர் லிம் குவான் எங்,  சிலாங்கூரில் புதிய அரசை விரைவாக அமைக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டிருக்கிறார். மற்ற மாநிலங்களில் புதிய அரசுகள் பதவியேற்று விட்டதை அவர் சுட்டிக்காட்டினார்.

எந்தக் கட்சியிலும் உள்தகராறு இருப்பது இயல்பே என்று குறிப்பிட்ட அவர், அது மாநில நிர்வாகத்தைப் பாதிக்கும் அளவுக்குச் சென்றுவிடக் கூடாது என்றார்.

“நாங்கள் சிலாங்கூர் எங்களை முந்திக் கொள்ளும் என்று நினைத்திருந்தோம். ஆனால், அங்கு ஒரு பிரச்னை. அதற்கு விரைவாக தீர்வுகாண வேண்டும்.

1 guan1“மந்திரி புசார் யார் என்பது அனைவராலும் முடிவு செய்யப்பட்ட பிறகு மேலும் தாமதமில்லாமல் எல்லாம் விரைவில் நடந்தேற வேண்டும். அதுதான் மக்களின் எதிர்பார்ப்பு, நம்பிக்கை”, என்றவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மாநில அரசு இன்னும் பதவியேற்காமல் இருப்பது குறித்து ஏமாற்றமடைவதாகக் கூறியவரிடம் இதனால் வாக்காளர்கள் பக்காத்தான் ரக்யாட்டைப் புறக்கணிக்கும் சாத்தியம் உண்டா என்று வினவப்பட்டதற்கு அப்படி நடவாது என்றார்.

மக்கள் தூய்மையான அரசு தேவை என்பதால்தான் பக்காத்தான் ரக்யாட்டுக்கு வாக்களித்தார்கள். அதை முந்திய மந்திரி புசார் அப்துல் காலிட் இப்ராகிம் வழங்கினார்.

அதனால்தான் டிஏபியும் அவர் அப்பணியினைத் தொடர்வதை ஆதரிக்கிறது என்று லிம் குறிப்பிட்டார்.

1 guan2பிகேஆரில் மந்திரி புசார் தேர்ந்தெடுக்கப்படும் நடைமுறையை அஸ்மின் அலி குறை கூறியிருப்பது பற்றிக் கருத்துரைக்க லிம் மறுத்தார். அது அவர்களின் உள்விவகாரம் என்றார்.

பக்காத்தானின் மூன்று உறுப்புக் கட்சிகளுமே காலிட் இரண்டாம் தவணைக்கு மந்திரி புசாராக பொறுப்பேற்தை ஆதரிக்கின்றன.

எனினும், அஸ்மின் நேற்று செய்தியாளர் கூட்டமொன்றைக் கூட்டி அதில்,  கட்சியில்  மந்திரி புசார் தேர்ந்தெடுக்கப்படும் நடைமுறையைக் குறைகூறியிருந்தார்.

TAGS: