13வது பொதுத் தேர்தலில் பிஎன் இழப்புக்கு மசீச-விலும் கெராக்கானிலும் நிலவிய ‘உட்பூசலும்’ காரணம் என முன்னாள் தகவல், தொடர்பு, பண்பாட்டு அமைச்சர் ராயிஸ் யாத்திம் கூறுகிறார்.
“உண்மையாகச் சொன்னால் பாரிசான் நேசனல் இழப்புக்கு மசீச-வும் கெராக்கானும் ஒரு பகுதி காரணம்,” என அவர் சொன்னார்.
“உட்பூசல், புரிந்துணர்வு இல்லாதது, கூட்டு நிலை இல்லாதது ஆகியவை காரணமாக பாரிசான் நேசனல் பல இடங்களை தனது எதிரிகளிடம் இழக்க நேர்ந்தது,” என ராயிஸ் நேற்றிரவு கோலா கிளாவாங்கில் ஜெலுபு மாவட்ட மன்ற மண்டபத்தில் நிகழ்ந்த நன்றி தெரிவிக்கும் நிகழ்வுக்குப் பின்னர் நிருபர்களிடம் பேசினார்.
அண்மைய தேர்தலில் ஜெலுபுவில் பிஎன் வெற்றி அடைந்ததைக் கொண்டாடும் வகையில் அந்த நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அமைச்சரவையில் பதவிகளை ஏற்றுக் கொள்வதில்லை என்பது போன்ற மேலோட்டமான முடிவுகளை மசீச எடுத்திருக்கக் கூடாது என்றும் ராயிஸ் கருதுகிறார்.
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் புதிய கூட்டரசு அரசாங்கத்தை அமைக்கும் போதும் மாநில அளவிலும் ஆட்சி மன்றங்கள் அமைக்கப்படும் போதும் மசீச அந்த முடிவை அறிவித்திருக்கக் கூடாது என்றார் அவர்.
“கலந்தாய்வுகள் நடத்தப்பட வேண்டும். ஆனால் அது தொடக்கத்திலிருந்தே நிராகரித்து வந்துள்ளனர். அந்த போக்கு சந்தேகத்தை அளிக்கிறது.”
அண்மைய தேர்தலில் மோசமான அடைவு நிலையைப் பெற்றதால் எந்த அரசாங்கப் பதவிகளையும் ஏற்கப் போவதில்லை என மசீச அறிவித்துள்ளது. அது தான் போட்டியிட்ட 37 நாடாளுமன்றத் தொகுதிகளில் 7ல்
மட்டுமே வெற்றி பெற்றது. போட்டியிட்ட 90 சட்டமன்றத் தொகுதிகளில் 11ஐ மட்டுமே பிடித்தது.
கெராக்கான் தான் போட்டியிட்ட 11 நாடாளுமன்றத் தொகுதிகளில் ஒன்றிலும் 31 சட்டமன்றத் தொகுதிகளில் மூன்றிலும் மட்டுமே வெற்றி பெற்றது.
மசீச தனது நிலையை அறிவிக்கும் முன்னர் பிரதமருடன் ஆலோசனை நடத்தியிருக்க வேண்டும் என்றும் ராயிஸ் கருதுகிறார்.
மசீச தலைவர் சுவா சொய் லெக் அமைச்சரவையில் சேருவது பரிசீலிப்பார் என அவர் நம்புகிறார். மசீச பேராளர்கள் அமைச்சரவையில் இல்லாவிட்டால் இந்த நாட்டின் ஒற்றுமையும் சமூக அமைப்பும் சீர்குலையக் கூடிய நிலை ஏற்படும் என அவர் எண்ணுகிறார்.
“மசீச வழியாகவோ அல்லது வேறு எந்த வழியாகவோ சீன சமூகம் அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் பெற்றிருக்க வேண்டும். அது போன்று இந்திய சமூகமும் சபா, சரவாக்கில் உள்ள சிறுபான்மை சமூகங்களும் அமைச்சரவையில் இருக்க வேண்டும். பிஎன் அதனை பின்பற்றி வருகின்றது. நாம் அந்தப் பொறுப்பிலிருந்து விலக முடியாது,” என்றார் ராயிஸ்.
பெர்னாமா
திருடும் போது எல்லாரும் சேர்ந்து திருடுகிறீர்கள். அகப்படும் போது சீனக் கட்சிகளை மட்டும் குறை சொல்லுகிறீர்கள். நீங்கள் தொடர்ந்து இந்த மலேசிய அரசியலில் பேர் போட வேண்டுமென்றால் திருட்டை குறைத்து சேவையைக் கூட்டுங்கள்.
இவனே ஒரு டொக்கு மன்னன் ,இவன் பேசுறானா
தம்பி ராயிஸ் அவர்களே…உ ண்மை என்ன தெரியுமா? பாரிசானில் உங்கள் அம்னோ தான் ‘பெரிய அண்ணன்’. இந்த பெரிய அண்ணன் இருக்கும்போது மற்ற யாரும் பேசக்கூடாது, கருத்தும் சொல்லக்கூடாது. அது அம்னோவுக்குப் பிடிக்காது. இதே நிலை தான் 12-வது மற்றும் 13-வது பொதுத் தேர்தலிலும். தேர்தல் வேட்பாளரைத் தேர்வு செய்வது முதல் அனைத்து விஷயத்திலும் அம்னோ தன் மூக்கை நுழைத்ததன் விளைவு இது. எனவே, இப்போது இந்த தோல்விக்கு அம்னோ முழுப் பொறுப்பும் ஏற்றுக் கொள்ள வேண்டுமே தவிர மற்றவர்களை குறை கூறுவது கூடாது. அம்னோ தன் பெரிய அண்னன் கொளகையைக் கைவிடாவிட்டால் அம்னோ பிளவு படும். காரணம் அம்னோவில் இன்னும் சில நல்லவர்களும் சிந்திக்கத் தெரிந்தவர்களும் இருக்கிறார்கள்.
இப்படி எல்லாம் நடக்கும் என்று தானே நீர் போட்டி போடவில்லை
ஐயா ரைஸ்! சீனர்கள் கண் விளிதுக்கொண்டனர். நாங்கள் தான் நாதி அற்றவர்களாக ஆகிவிட்டோமே..எங்கள் குரல் தான் யார் காதிலும் கேட்க வில்லையே….
அட மடயனுங்க்களா. என்னைக்குடா மத்தவனுங்க்களே குறை சொல்லிக்கிட்டே இருப்பீங்க. ஒங்க முதுகை கொஞ்சம் பாருங்க. அது நாறிப் பொய் இருக்குது. நாற்றம் அங்க இருத்துதான் வருது.
ராயிஸ் யாடீம் தன் முதுகில் உள்ள அழுக்கை முதலில் போக்க வேண்டும் .பிறகு மற்றவரை குறை கூறலாம் .
டேய் மடையா நீ போட்டிப் போட்டா மண்ண வாயில போட வேண்டியிருக்கும். இப்ப பிஎன் வெற்றிக் கொண்டாட்டம் யாரு பனத்துல.
Mr.Rais Yatim, BN தோல்விக்கு முழு காரணமே UMNO தான் …..இன வெறியான வார்த்தைகளை விடுதல் ,இனவெறியன் zulkifle nordin kku சீட் கொடுத்தது யாரு? UMNO தானே….அப்படி இருக்கும் எப்படி மற்ற கூட்டணி கட்சிகள் மீது பழி போடலாம்.BN தொழ்விக்கு UMNO தான் முழு காரணம்….ஆகா UMNO kena tutup kedai lah…………..
மற்ற கட்சிகளை குறை கூருவதை நிறுத்தி விட்டு, இந்த பின் அரசாங்கம் இந்திய சீனா மக்களின் உள்ள குமுறலுக்கு செவி சாய்க்க வேண்டும்.
திருட்டு ஓட்டில் ஆட்சியை பிடித்து விட்டு வசனம் பேசுகிறான் இந்த அம்னோ “Rapist”