பிஎன் இழப்புக்கு அம்னோ மீது மட்டுமே பழி போட வேண்டும்

umnoஉங்கள் கருத்து : “பிஎன் இழப்புக்கு ஊழல், இனவாதம், அநியாயம் ஆகியவை முக்கியக் காரணம் என்பதை அம்னோ ஒப்புக்  கொள்வதற்காக நான் இன்னும் காத்துக் கொண்டிருக்கிறேன்”

ராயிஸ்: பிஎன் இழப்புக்கு மசீச-வும் கெராக்கானும் பகுதி காரணம்

கமலப்பன்ஸ்: மசீச, கெராக்கான், மஇகா ஆகியவற்றின் அடைவு நிலை மோசமானதற்கு அம்னோ 99  விழுக்காடு காரணம் என நான் எண்ணுகிறேன்.

பெர்க்காசா தலைவர்கள் சுல்கிப்லி நூர்டின், இப்ராஹிம் அலி ஆகியோர் தேர்தலில் நிறுத்தப்பட்டது, மசீச இடங்கள் கடத்தப்பட்டது, முன்னால் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட்டின் இனவாத பேச்சுகள், மாட்டு கொண்டோ ஊழல், ‘என்ன விலை கொடுத்தாவது’ என்னும் உரைகள், பணத்தையும் உணவுப் பொருளையும் அன்பளிப்பாக வாக்காளர்களுக்கு வீசுவது, ஆணவம் இன்னும் பல விஷயங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.

கறுப்பு மம்பா: மசீச, கெராக்கான் மீது பழி போடக் கூடாது. முழுப் பழியையும் அம்னோவே ஏற்க வேண்டும். பிரஜைகளுடைய கோபத்தையும் அது தான் ஏற்க வேண்டும்.

அம்னோவின் இனவாதத் தன்மையும் நடவடிக்கைகளும் அது இனியும் ஆட்சி புரிவதற்குத் தகுதியற்றதாக்கி விட்டது. அம்னோ அடாவடித்தனம் மக்கள் அதனை வெறுக்கத் தூண்டியுள்ளது. அம்னோவின் ஊழல்கள் அதனை மக்களிடமிருந்து விலகி நிற்கச் செய்து விட்டது. நண்பர்களுக்கு உதவும் அம்னோ போக்கு மலாய்க்காரர்களை அதனிடமிருந்து பிரித்து விட்டது.

அம்னோ மசீச-வையும் கெராக்கானையும் மற்ற 11 கூட்டணிக் கட்சிகளையும் அடிமைகளாக்கி விட்டது. வெறும்  அலங்காரப் பொம்மைகளாக்கி விட்டது. அம்னோவைக் காப்பாற்ற வேண்டுமானால் அது பல இனத் தன்மையைப் பெற வேண்டும்.

சுஸாகேஸ்: உங்களைப் போன்ற காலாவதியான அரசியல்வாதிகள் கோமாளித்தனத்தின் மூலம் எங்களுக்கு தொடர்ந்து நகைச்சுவைகளை வழங்கி வருகின்றீர்கள். அம்னோ இன்னும் பாடம் கற்றுக் கொள்ளவில்லை எனத்  தோன்றுகின்றது.

பால் வாரென்: ராயிஸ் சொல்வதை நான் ஒப்புக் கொள்கிறேன். மலாய்க்காரர் அல்லாதாரையும்
கிறிஸ்துவர்களையும் அம்னோ, உத்துசான், பெர்க்காசா ஆகியவை தாக்கிப் பேசிய போது அதனைக் கண்டிக்க மசீச-வுக்கும் கெராக்கானுக்கும் துணிச்சல் இல்லை. மறைமுகமாக அவை அம்னோவை ஆதரிப்பதாகத் தெரிந்தது.

அதனால் அவற்றின் ஆதரவாளர்கள் அதனைக் கைகழுவி விட்டனர். அவை அம்னோ சம பங்காளியாக இல்லை. சேவகர்களைப் போன்று இருந்தன.

தனா55: அம்னோ மோசமான அடைவு நிலையைப் பெற்றது. ஆனால் பெருத்த சேதம் மசீச-வுக்கும்
கெராக்கானுக்கும் ஏற்பட்டது. தங்கள் கட்சிகளில் என்ன கோளாறு என்பதையும் அதனைப் போக்க என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதையும் பிஎன் தலைவர்கள் இன்னும் ஆய்வு செய்யவில்லை.

தாங்கள் மக்களை நோக்கமாகக் கொண்டவர்கள் என்ற எண்ணத்தை அவர்கள் உருவாக்க முயலுகின்றனர். ஆனால் உண்மையில் அவர்கள் அப்படி இல்லை. அவர்களுக்கு 13வது தேர்தலில் அடி விழுந்தது. மக்களுக்கு அது மகிழ்ச்சியை தந்துள்ளது.

டூட்: தங்களுடைய தீவிரவாதம், இனவாதம், மேலாண்மை சிந்தனை ஆகியவை பிஎன் கூட்டணியில் மற்ற சேவகர் கட்சிகளை மக்கள் கைவிட்டதற்கு முக்கியக் காரணம் என்பதை அம்னோ/பிஎன் இன்னும் உணராமல் இருப்பது தான் மிகவும் வேடிக்கை.

பல இனம்: பிஎன் இழப்புக்கு ஊழல், இனவாதம், அநியாயம் ஆகியவை முக்கியக் காரணம் என்பதை
அம்னோ ஒப்புக் கொள்வதற்காக நான் இன்னும் காத்துக் கொண்டிருக்கிறேன்.

அப்பாச்சே: பழி போடும் படலம் தொடங்கி விட்டது. அடுத்த பொதுத் தேர்தலில் அம்னோ எல்லா 222
நாடாளுமன்றத் தொகுதிகளிலும் 565 சட்டமன்றத் தொகுதிகளிலும் போட்டியிட வேண்டும்.

அனாக் பூயூ: மஇகா, மசீச, கெராக்கான் ஆகியவை அமைச்சரவையில் இருக்க வேண்டும் என அம்னோ இன்னும் விரும்புகிறது. இல்லை என்றால் யார் மீது பழி போட முடியும். அம்னோவுக்கு ‘குத்தும் பைகளாக’ (punching bags ) தொடரும் மஇகா, மசீச, கெராக்கான் ஆகியவற்றுக்கு என் வாழ்த்துக்கள்.

TAGS: