தாய்மொழிப் பள்ளிகளை மூட வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பில் பிரதமர் ‘பதில் அளிக்க வேண்டும்’

schoolsதேசிய ஒற்றுமைக்காக தாய்மொழிப் பள்ளிக்கூடங்களை அகற்ற வேண்டும் என முனைவர் ஒருவர் தெரிவித்த  யோசனை மீதான தமது நிலையை பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் தெளிவுபடுத்த வேண்டும் என 25 சிவில் சமூக  அமைப்புக்களை அங்கமாக கொண்ட Gabungan Bertindak Malaysia என்னும் கூட்டமைப்பு கேட்டுக்  கொண்டுள்ளது.

“பிரதமர் பதில் சொல்ல வேண்டும். அவர் தெளிவான அறிக்கையை வெளியிட வேண்டும்,” என அந்த
கூட்டமைப்பின் பேச்சாளர் ஜைட் கமாருதின் இன்று கோலாலம்பூரில் நிருபர்களிடம் கூறினார்.

அந்தக் கோரிக்கை, மே 5 நடந்த 13வது பொதுத் தேர்தலில் பிஎன் அடைவு நிலை மோசமாக இருந்ததற்கு
‘சீனர் சுனாமி’ காரணம் என நஜிப் சொன்னதற்கு மறுமொழியாகத் தெரிவதால் நஜிப் தமது நிலையைத்
தெளிவுபடுத்துவது மிக முக்கியம் என ஜைட் மேலும் சொன்னார்.