தாய்மொழிப் பள்ளிக்கூடங்களை அகற்றச் சொல்வது தேச நிந்தனை இல்லையா ?

schoolsஉங்கள் கருத்து : “போலீஸ் தாங்கள் பாரபட்சம் காட்டுவதில்லை என்பதை மெய்பிக்க வேண்டும். மலேசியர்களுக்கு  நீங்கள் நியாயமானவர்கள் என்பதை உணர்த்துவதற்கு அது உதவும்”

முனைவர்: ஐக்கியத்துக்காக தாய்மொழிப் பள்ளிகளை அகற்றுங்கள்

கிள்ளான்வாசி: அந்த Universiti Teknologi Mara (UiTM) இணை வேந்தர் அப்துல் ரஹ்மான் அர்ஷாட்
எல்லா மாணவர்களுக்கும் ஒரே மாதிரியான பல்கலைக்கழகத்துக்கு முந்திய தேர்வுகளை அரசாங்கம் வைக்க வேண்டும் என யோசனை கூறினால், இனவாத ஆசிரியர்கள் யாரும் இல்லாமல் இருப்பதை உறுதி செய்தால், எல்லா மாணவர்களையும் நியாயமாக நடத்தினால், போதுமான ஆதரவுடன் தாய்மொழிகள் போதிக்கப்படுவதற்கு அனுமதித்தால், UiTM பயிற்சிகளுக்கு மலாய்க்காரர் அல்லாத மாணவர்களையும் அனுமதித்தால் அவர் சொல்வது சரியாக இருக்கும். நாம் அதனை அடையவும் முடியும்.

அந்த நடவடிக்கைகளை எடுத்தால் நாட்டு நிர்மாணிப்புக்கான உண்மையான முயற்சிகளாக அப்துல்
ரஹ்மான் யோசனை கருதப்படும். அவர் முதலில் UiTM-ல் அதனை தொடங்க வேண்டும்.

பெர்ட் தான்: சட்டம் மிகத் தெளிவாக இருக்கிறது. முந்திய வழக்குகளும் நடந்துள்ளன. மெலான்
அப்துல்லா x அரசு வழக்குரைஞர் வழக்கில் ‘Hapuskan Sekolah Beraliran Tamil atau China di-Negeri
ini’ என்னும் தலைப்பில் எழுதிய தலையங்கத்துக்காக உத்துசான் மலேசியா குற்றவாளி என்றும் மார்
கோடிங் x அரசு வழக்குரைஞர் வழக்கில் சீன, தமிழ் தொடக்கப்பள்ளிகள் மூடப்பட வேண்டும் என
1978 அக்டோபர் மாதம் பேசியதற்காக அந்த சபா எம்பி குற்றவாளி என்றும் தீர்ப்பளிக்கப்பட்டது
(ஆதாரம் லிம் கிட் சியாங் வலைப்பதிவு 2008 டிசம்பர் 2)

மலாய் மொழியை போதானா மொழியாகப் பயன்படுத்தும் ஒரே கல்வி முறைக்குச் சாதகமாக சீன தமிழ் தாய்மொழிப் பள்ளிகள் அகற்றப்பட வேண்டும் என அப்துல் ரஹ்மான் கேட்டுக் கொண்டது பிஎன் சபா எம்பி மார்க் கோடிங்-கும் உத்துசானும் கேட்டுக் கொண்டது போல் இல்லையா ?

போலீஸ் தாங்கள் பாரபட்சம் காட்டுவதில்லை என்பதை மெய்பிக்க வேண்டும். மலேசியர்களுக்கு நீங்கள் நியாயமானவர்கள் என்பதை உணர்த்துவதற்கு அது உதவும்.

அப்துல் ரஹ்மான் அம்னோ ஆதரவாளராக இருந்தாலும் சட்டத்தை மீறுகின்றவர்கள் எந்த அரசியல்
சார்புடையவர்களாக இருந்தாலும் சட்டம் வேறுபாடு காட்டுவதில்லை என்பதை போலீஸ் மெய்பிக்க
வேண்டும்.

குவினோபாண்ட்: அதில் எந்தச் சந்தேகமும் இல்லை. மே 13க்கு முன்னதாக இனப் பதற்றத்தைத் தூண்டி விட அவர்கள் அதே விஷயங்களைத் தான் பயன்படுத்தினார்கள். அடுத்து மலேசியாவின் சமூக வடிவமைப்பை பாதுகாக்கும் பொருட்டு சொஸ்மா என்ற பாதுகாப்பு குற்றங்கள் சட்டத்தின் கீழ்
எதிர்த்தரப்பை ஒடுக்குவார்.

மலேசியர்கள் முட்டாள்கள் என எண்ணிக் கொண்டு, (அம்னோ அப்படித் தான் நம்புகின்றது) அதே
தந்திரத்தைக் கையாள முயலும். (2008ல் அது அதில் தோல்வி கண்டது)

இந்த நேரத்தில் டோங் ஜோங் போன்ற சீனக் கல்வி அமைப்புக்கள் அதிகம் பேசாமல் இருப்பது
நல்லது. நகர்ப்புற மக்கள் பிஎன் -னுக்கு எதிராக வாக்களித்தனர். ஆகவே கல்வி முறையை குறை
சொல்ல வேண்டாம் என்று மட்டும் அவை சொன்னால் போதும்.

அத்துடன் பல்வேறு போதானா மொழிகள் நிலைத்திருக்க அனுமதிக்கும் பக்காத்தான் ராக்யாட் தேர்தல் கொள்கை அறிக்கையை தான் ஏற்றுக் கொள்வதாகவும் மலேசிய பாடத் திட்டத்தை தங்கள்
பின்பற்றுவதால் நிதி உதவி பெறுவதாகவும் டோங் ஜோங் கூற வேண்டும்.

அவ்வாறு சொன்னால் நீங்கள் அவர்களை மீறுவதாக அவர்கள் சொல்ல முடியாது. நீங்கள் ஜனநாயக
முறையில் அமைந்த தேர்வைத் தாங்கள் பயன்படுத்தியதாக சொல்ல வேண்டும். உலகில் சிறந்த
ஜனநாயகத்தை நாம் பெற்றுள்ளதாக நஜிப் சொல்லவில்லையா ?

புரோர்ட்: தேசியப் பள்ளிகளில் கல்வித் தரம் மோசமாக இருப்பதால் பெற்றோர்கள் தாய்மொழிப்
பள்ளிகளுக்கு தங்கள் பிள்ளைகளை அனுப்புகின்றனர். தாய்மொழிப் பள்ளிகள் அவர்களுடைய
மொழிகளையும் பண்பாட்டையும் பாதுகாக்கின்றன. அத்துடன் தங்கள் மாணவர்களுக்கு நன்மை
அளிக்கும் வகையில் பாடத்திட்டத்தை பயன்படுத்திக் கொள்கின்றன.

முகமட் காமிஸ் மஸ்லான்: எல்லா மாணவர்களுக் ஒரே வகுப்பறையில் கல்வி கற்கட்டும். ஒரே உணவு விடுதியில் சாப்பிடட்டும். ஒரே திடலில் விளையாடட்டும். அப்போது தான் தேசிய ஒற்றுமை
ஒருங்கிணைப்பு ஏற்படும். என்கிறார் அப்துல் ரஹ்மான். நாம் அதனை முதலில் UiTM-ல் தொடங்கலாம்.

TAGS: