புதிய அமைச்சரவையில் வேதமூர்த்தி, கைரி, பால் லவ்; எம்சிஎவுக்கு இடம் இல்லை

New cabinetஇன்று மாலை பிரதமர் நஜிப் ரசக் அவரது “உருமாற்றம் அமைச்சரவை” உறுப்பினர்களை அறிவித்தார். அதில் பதிவு செய்யப்பட்டுள்ள ஹிண்ட்ராப்பின் பி.வேதமூர்த்தி பிரதமர் துறையில் துணை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அந்த அமைச்சரவையில் ஜமாலுடின் கைரி விளையாட்டு மற்று இளைஞர் துறை அமைச்சராக்கப்பட்டுள்ளார்.

கெராக்கான் மற்றும் மசீச கட்சிகளிலிருந்து எவரும் அமைச்சரவையில் சேர்க்கப்படவில்லை. ஆனால், அவர்களுக்கான கதவு இன்னும் திறந்து இருப்பதாக பிரதமர் கூறினார்.

வியப்பளிக்கும் இன்னொரு நியமனம் டிரான்ஸ்பேரண்சி இண்டர்நேசனல்-மலேசியா அமைப்பின் தலைவர் பால் லவ் ஆகும். இவர் பிரதமர் துறையில் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மசீசவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள போக்குவரத்து அமைச்சு ஹிசாமுடின் ஹுசெய்னுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சும் உயர்கல்வி அமைச்சும் ஒன்றாக்கப்பட்டுள்ளன.

நஜிப் அவரது அமைச்சரவை பட்டியலை இன்று மாலை மணி 5.00 க்கு அவரது அலுவலகத்தில் வெளியிட்டார்.

முழு பட்டியல்:

பிரதமர், நிதி அமைச்சர்: நஜிப் ரசாக்.

துணைப் பிரதமர், கல்வி அமைச்சர் I : முகைதின் யாசின்

பிரதமர் துறை அமைச்சர்கள்: ஜமில் கிர் பஹாரும், இட்ரீஸ் ஜாலா, அப்துல் வாஹிட் ஒமார், ஜோசப் குருப், நேன்சி சூக்ரி, ஜோசப் எந்துலு, பால் லவ் மற்றும் ஷாஹிடான் காசிம்.

துணை அமைச்சர்கள்: பி. வேதமூர்த்தி , ரசாலி இப்ராகிம்.

நிதி II : அஹமட் ஹுஸ்னி ஹனட்ஸ்லா. துணை அமைச்சர்: அஹமட் மாஸ்லான்.

கல்வி II: இட்ரீஸ் ஜூசோ. துணை அமைச்சர்கள்: மேரி யாப்; பி.கமலநாதன்.

தற்காப்பு ஹிசாமுடின் ஹுசேன். துணை அமைச்சர்: அப்துல் பாக்ரி

போக்குவரத்து (இடைக்காலம்): ஹிசாமுடின் ஹுசேன். துணை அமைச்சர்: அப்துல் அசிஸ் கப்ராவி.

உள்துறை: அஹமட் ஸாஹிட் ஹமிடி. துணை அமைச்சர்: வான் ஜுனைடா துவாங்கு ஜாப்பார்.

பொதுப்பணி: ஃபாதில்லா யூசுப். துணை அமைச்சர்: ரோஸ்னா அப்துல் ரஷிட் சிர்லின்.

அனைத்துலைஅ வாணிபம் & தொழில்துறை: முஸ்தாபா முகமட். துணை அமைச்சர்: ஹமிம் சமுரி.

வெளிவிவகாரம்: அனிப்பா அமான். துணை அமைச்சர்: ஹம்சா ஜைனுடின்.

உள்ளூர் வர்த்தகம், கூட்டுறவு மற்றும் பயனீட்டாளர் விவகாரம்: ஹசான் மாலெக். துணை அமைச்சர்: அஹமட் பஷா முகமட் ஹனிப்பா (செனட்டர்).

தொடர்புத்துறை & பல்லூடகம்: அஹமட் சாபெரி சீக். துணை அமைச்சர்: ஜய்லானி ஜொகாரி.

மனிதவளம்: ரிச்சட் ரியோட். துணை அமைச்சர்: இஸ்மாயில் அப்துல் முத்தாலிப்.

கிராம மற்றும் வட்டார மேம்பாடு: ஷாப்பி அப்டல். துணை அமைச்சர்: அலெக்சாண்டர் லிங்கி.

நகர்புற நல்வாழ்வு, வீடு மற்றும் உள்ளூராட்சி: அப்துல் ரஹ்மான் டாலான், துணை அமைச்சர்: ஹலிமா முகமட் சாடிக்.

இளைஞர் மற்றும் விளையாட்டு துறை: கைரி ஜமாலுடின். துணை அமைச்சர்: சரவணன் முருகன்.

சுகாதாரம்: டாக்டர் எஸ். சுப்ரமணியம். துணை அமைச்சர்: ஹில்மி யஹயா.

கூட்டரசுப் பிரதேசம்: தெங்கு அட்னான் தெங்கு மான்சூர். துணை அமைச்சார்: டாக்டர் லோக பாலா மோகன் (செனட்டர்).

தோட்டத்தொழில் மற்றும் பொருள்கள்: டக்ளஸ் உக்கா எம்பாஸ். துணை அமைச்சர்: நோரியா காஸ்நோன்.

எரிபொருள், நீர்வளம் மற்றும் பசுமை தொழில்நுட்பம்: மேக்ஸிமஸ் ஓங்கிலி. துணை அமைச்சர்: மாட்ஸிர் காலிட்.

விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்துறை: இஸ்மாயில் சாப்ரி யாக்கோப். துணை அமைச்சர்: தஜுடின் அப்துல் ரஹ்மான்.

சுற்றுப்பயணம் மற்றும் பண்பாடு: நஸ்ரி அப்துல் அசிஸ். துணை அமைச்சர்: ஜோசப் சாலாங் காண்டும்.

அறிவியல், தொழில் நுட்பம் மற்றும் புத்தாக்கம்: எவோன் எபின். துணை அமைச்சர்: அபு பக்கார் முகமட் டியா.

இயற்கைவளம் மற்றும் சுற்றுச்சூழல்: ஜி. பழனிவேல். துணை அமைச்சர்: ஜேம்ஸ் டாவோஸ் மமிட்.

மகளிர், குடும்பம் மற்றும் சமுக மேம்பாடு: ரொஹானி அப்துல் கரிம். துணை அமைச்சர்: அசிஸ்ஸா முகமட் டுன்.

TAGS: