சாமிவேலு: மஇகா தொடர்ந்து இந்தியர்களுக்குச் சேவை செய்யும்

hindrafஹிண்ட்ராப் எனப்படும் இந்து உரிமை நடவடிக்கைக் குழுவின் பேராளர் பி வேதமூர்த்தி எதிர்பாராத வகையில் நியமனம் பெற்ற போதிலும் இந்திய சமூகத்தின் பராமரிப்பாளர் என்னும் தனது பணியைத் தொடரும் என முன்னாள் மஇகா தலைவர் எஸ் சாமிவேலு கூறியிருக்கிறார்.

“இந்திய சமூகத்தின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதாக தாம் அளித்த வாக்குறுதியை  ஹிண்ட்ராப் நிறைவேற்ற முடியுமா என்பதை நிரூபிப்பது இனி வேதமூர்த்தியைப் (ஹிண்ட்ராப் தலைவர்)  பொறுத்தது,” என அவர் சொன்னார்.

தற்போது வங்காள தேசத்தில் இருக்கும் அவருடன் பெர்னாமா தொடர்பு கொண்ட போது அவர் அவ்வாறு கூறினார்.

இந்திய சமூகத்தின் தேவைகளையும் அவாக்களையும் பூர்த்தி செய்வதின் மூலம் மஇகா தனக்கு முன்பு வைக்கப்பட்ட எல்லாப் பணிகளையும் நிறைவேற்றும் ஆற்றலை எப்போதும் கொண்டுள்ளது.”

hindraf1வேதமூர்த்தியின் நியமனம், மஇகா பேராளர்கள் தங்கள் கடமைகளைச் செய்வதிலிருந்து நிறுத்தி விடும் என யாராவது சொன்னால் அந்த மனிதர் தற்கொலை செய்து கொள்வது நல்லது. அவை ஆதாரமற்ற அறிவில்லாத வதந்திகள்,” என்றார் சாமிவேலு.

13வது பொதுத் தேர்தலில் பிஎன் வெற்றி அடைந்ததைத் தொடர்ந்து பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்  புத்ராஜெயாவில் நேற்று தமது புதிய அமைச்சரவையை அறிவித்தார்.

வேதமூர்த்தியின் நியமனம், அமைச்சரவைக்கு நியமிக்கப்பட்டுள்ள மற்ற இந்தியப் பேராளர்களுடன்  ஒப்பிடும் போது மாறுபட்டதல்ல என்றும் சாமிவேலு சொன்னார்.

நஜிப் இன்னொரு இந்தியத் தலைவருக்கு வாய்ப்பு கொடுக்க விரும்பியுள்ளார் என அவர் மேலும்  குறிப்பிட்டார்.

-பெர்னாமா