உங்கள் கருத்து : “வேதா- துறைப் பொறுப்பு இல்லாத அமைச்சர். அதுவும் பின்கதவு வழியாக. அவர் என்ன செய்ய முடியும் என்பதைப் பார்ப்போம்”
புதிய அமைச்சரவை: வேதா, கைரி, பால் லோ நியமனம்; மசீச இடம் பெறவில்லை
போலிகால்50: என்ன ? ஹிண்ட்ராப் தலைவர் பி வேதமூர்த்தி துணை அமைச்சரா ? பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அவர்களே இந்தியர்கள் அவரை விரும்பவில்லை. அவர் எந்தப் பசையும் இல்லாதவர். இந்தியர்களைக் கவனிக்காமல் தம்மை மட்டுமே கவனித்துக் கொள்ளும் மோசடிக்காரர் அந்த வேதமூர்த்தி.
மலேசியா54: வேதமூர்த்தி, உங்கள் உண்ணாவிரதம் உங்களுக்கு நன்மையைச் செய்துள்ளது. ஆகவே
இது தான் நீங்கள் விரும்பியதா ? மற்றவர்கள் சொன்னது உண்மையென இப்போது எங்களுக்குத்
தெரிகிறது.
சீ ஹோ சியூ: நாம் சந்தேகப்பட்டது போல வேதமூர்த்தி நஜிப்புடன் ஒத்துழைத்ததற்குக் காரணம்
உள்ளது. அது ஏன் என்பதும் நமக்குத் தெரிந்து விட்டது. அவரை வாங்குவதற்கு சாதாரண துணை
அமைச்சர் பதவி ஒன்று மட்டும் போதும்.
எதுவும் நடக்கும்: வேதா- துறைப் பொறுப்பு இல்லாத அமைச்சர். அதுவும் பின்கதவு வழியாக. அவர்
என்ன செய்ய முடியும் என்பதைப் பார்ப்போம். ஒரு வேளை அவர் நாடாளுமன்றத்தில் மீண்டும்
உண்ணாவிரதம் இருக்கலாம்.
குவிக்னோபாண்ட்: அற்புதம். தாய்மொழிப் பள்ளிகளை ஒழிக்கப் போவதாக அம்னோ மருட்டியுள்ள
வேளையில் வேதா துணை அமைச்சர் பதவியை ஏற்றுக் கொண்டிருக்கிறார். வேதாவால் முடியும்
(உண்மையாக). இந்திய சமூகத்தில் உள்ள நமது சகோதர சகோதரிகளைப் பற்றி அவ்வாறு சொல்ல
முடியாது.
ஹெர்மிட்: கௌரவமிக்க பி வேதமூர்த்தி அவர்களுக்கு துணை அமைச்சராக நியமிக்கப்பட்டதற்கு
வாழ்த்துக்கள். உங்கள் மாயா ஜாலம் வேலை செய்துள்ளதாகத் தெரிகிறது.
வீரா: அவர் நஜிப்புக்கு உதவி செய்தார். துணை அமைச்சர் பொறுப்பைக் கொடுத்து நஜிப் இப்போது
அவருக்கு உதவி செய்துள்ளார். ஆகவே அந்த மகஜரில் கண்ணுக்குப் புலப்படாத அம்சம்
தெளிவாகியுள்ளது.
பிஎஸ்: வேதா, ஒரங்கட்டப்பட்ட இந்தியர்களுடைய சிவப்பு நிற அடையாளக் கார்டுகளை நீல நிற
அடையாளக் கார்டுகளாக மாற்றுவதற்கான வழியைக் காணும் நிலையிலும் குற்றச்செயல்களில் சிக்கிக் கொண்டுள்ள இந்திய இளைஞர்கள் எண்ணிக்கையை குறைக்கும் மாயவித்தையை செய்யும் நிலையிலும் இப்போது நீங்கள் இருக்கின்றீர்கள் என நாங்கள் நம்புகிறோம்.
மறத்தமிழன்: இந்தியர்கள் சிறிது நம்பிக்கை வைத்த பக்காத்தான் அதிகாரத்துக்கு வரவில்லை. அதனால் இந்தியர்களுடைய வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கான வாய்ப்பை அவர்கள் வேதாவுக்குக் கொடுக்க வேண்டும்.
2008ம் ஆண்டு தொடக்கம் அவரும் அவரது சகோதரர் உதயகுமாரும் ஹிண்ட்ராப்புடன் இந்தியர்களுடைய அவலத்தைப் போக்குவதற்கு போராடி வருகின்றனர்.
இப்போது வேதா உள் வட்டத்துக்குள் இருப்பதால் இந்தியர்களுடைய துயரங்களைப் போக்குவதற்கு
அவர் நஜிப்புடன் தாம் ஏற்படுத்திக் கொண்டுள்ள புதிய உறவுகளைப் பயன்படுத்திக் கொள்வார் என
பிரார்த்தனை செய்வோம்.
உதயா இந்தியர் நலன்களை மேம்படுத்தும் தமது சகோதரரின் முயற்சிகளுக்கு ஆதரவளிக்க வேண்டும். நீங்கள் இருவரும் உண்மையில் இந்தியர்களுக்காக போராடுகின்றீர்கள் என்பது எனக்குத் தெரியும்.
சைக்கோ: வேதாவுக்கும் ஹிண்ட்ராப்புக்கும் வாழ்த்துக்கள். உங்கள் பெருந்திட்டத்தை தொடருங்கள்.
இந்தியர்களுக்கும் மற்ற சிறுபான்மை சமூகங்களுக்கும் நீங்கள் நிறையச் செய்ய வேண்டியுள்ளது. இது நல்ல சந்தர்ப்பம். ஹிண்டராப் நல்ல முடிவைச் செய்துள்ளது.
ரெத்னம்: கம்போங் புவா பாலா பிரச்னையை பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் தீர்க்க முயன்ற போது பேனாவைக் கொண்டு கையெழுத்திடுவதின் மூலம் அவர் பிரச்னையைத் தீர்த்து விடலாம் என வேதா அவரைச் சாடினார்.
இப்போது இந்தியர் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு கையெழுத்திட வேதாவுக்கு பல பேனாக்கள்
தேவைப்படும்.
வாழ்துக்கள் வேத அவர்களே, உங்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது, நன்றாக பயன்படுத்தி, இந்தியர் வளர்ச்சிக்கு பாடுபடுவிர்கள் என்று நம்புகிறோம். நிங்கள் ஆற்றும் சேவை, இப்வளவு நாட்கள் உங்களை தப்பாக பேசியவர்கள் தவறு என்று உணரும் படி இருக்கவேண்டும். வாழ்க ஹிண்ட்ராப்
இந்தியர்களை பொறுத்த வரையில் அரசாங்கத்தில் எத்தனை இந்தியர்கள் அங்கம் வகிக்கிறார்கள் என்பது முக்கியமே அல்ல. ஏனென்றால் எவனும் நமக்கு ஒரு பிரச்சனை என்றால் வையை மூடிக்கொண்டு அம்னோவின் வலை பிடித்துக் கொண்டோ பொய் விடுவான்கள். அப்படி இருக்க இந்த வேதமுர்த்தி என்ன கிழிக்கப் போறன்னு பார்ப்போம்.
பிச்சைகாரனுக்கு .கிடைத்த பிச்சை அந்த துணை அமைச்சர் பதவி .வேதமூர்த்தி வெட்கமா இல்லையா ?தமிழனா நீங்க ,மானம் உள்ள தமிழனா நீங்கள் ?இந்த பதவிக்குத்தான் உண்ணா விருத நாடகமா ?இனி நீங்க போற இடமெல்லாம் இந்திய சமுகம் காரி துப்பும் ,நிச்சயம் துப்பும் .மலேசியா இந்திய சமுகத்தின் இன துரோகி இந்த வேதமூர்த்தி .
நரகாசுரன் வந்தான் ,படுத்தான் ,உண்ணாவிரதம் எடுத்தான் ,எழுந்திசி நடந்தான் ,நஜிப்பிடம் கை குலுக்கினான் ,துணை அமைச்சர் பதவியை வாங்கி சென்றான் ,,,,
வேதா! நான் உங்களை வெறுக்கிறேன் என்பது உண்மை! ஒரு வேளை நான் அவசரப்பட்டு விட்டேனோ என்று நினைக்கிறேன். நீங்கள் துணை அமைச்சர் ஆவீர்கள் என நான் எதிர்பார்க்கவில்லை. முதலில் எனது வாழ்த்துகள்! எது எப்படி இருப்பினும் நஜிப்புடன் நீங்கள் ஒரு ஒப்பந்தம் செய்திருக்கிறீர்கள். ஒரு வேளை அந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் அனைத்தையும் நிறைவேற்றுவதற்காக உங்களை அவர் நியமனம் செய்திருக்கலாம். அது சாத்தியம் என்றால் அதனை நீங்கள் நிறைவேற்ற வேண்டும். அது தான் எனது வேண்டுகோள். சாமிவேலு போல் இந்த சமுதாயத்தை சோதனை செய்யாதீர்கள். அனைத்தையும் அனுபவித்த பின் நஜிப்பும் அம்னோவும் நான் கேட்டவை எதையும் கொடுக்கவில்லை புதிய பிரதமர் வாரி வாரிக் கொடுக்கிறார் என்று சொல்லாதீர்கள். உங்கள் நான் நம்புகிறேன்!
இப்போது இந்தியர் சிக்கல்களை தீர்ப்பதற்கு ….
கைச்சாத்திட இந்த வேதாவுக்கு பல எழுதுகோல்கள்
தேவைப்படும் !!
இந்த ” சோற்று அரசியல் வாதியை ” …….
வாழ்த்துவோம் வாரீர் !!!
திரு வேதா, நீங்கள் வந்த பாதை தவறானதாகவும் இருக்கலாம். பின் கதவு வழியாகவும் இருக்கலாம். பலருக்கு (நானும் உட்பட) அதில் உடன் பாடு இல்லைதான். உங்களை பொறுப்பு அற்ற அமைச்சர் பதவிக்கு அமர்த்தியுள்ளது கூட BN அரசாங்கத்தின் அரசியல் சதிராட்டமாகவும் இருக்கலாம். இருப்பினும், இனி நீங்கள் எடுத்துக் கொள்ளும் பிரயத்தனம் எல்லாம் உங்கள் சொந்த இனத்திற்காக இருக்க வேண்டும் என்பது எங்கள் ஆவல். இனியும் நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் என்பதைத்தான் சமுதாயம் கூர்ந்து கவனிக்கும். இனிமேலாவது நீங்கள் செய்யும் சேவைகள் உளபூர்வமாகவும், உண்மையாகவும் இருக்கட்டும். வாழ்த்துக்கள்.
குரைத்துக் கொண்டிருந்த ‘அதற்கு’ எலும்புத் துண்டு போட்டாகிவிட்டது. இனி அது தன் வாலை சுருட்டிக் கொள்ளும்.
நமது பிரதமர் வேதா பின்னால் தமிழ் மக்கள் வரிசை பிடித்து நிற்கிறார்கள் என்று தவறாக நினைத்து விட்டார் போலிருக்கு.. உண்மைலேயே தமிழர்கள் மேல் அக்கறை இருந்தால் அந்த பதவியை பிரகாஷ் ராவ்கே கொடுத்து இருக்கலாம் அல்லது , முருகேசுக்கு கொடுத்து இருக்கலாம், பசுபதி அவர்களுக்கு கொடுத்து இருக்கலாம், மலர்விழி குணசீலனுக்கு கொடுத்து இருக்கலாம் தேவமணி அவர்களுக்காவது கொடுத்து இருக்கலாம் போயும் போயும் இந்த உண்ணா விரத நாயகனுக்கு கொடுத்து உள்ளாரே ..!
பொதுவாக அரசாங்கத்தில் தமிழர்களை பிரதிநிதித்து மா இ கா வை தவிர வேறு எவரும் நுழையவே முடியாது.ஆனால் வேதா பின் கதவு வழியாக நுழைந்து விட்டாரா,? இல்லை பிரதமர் அண்மையில் தமது நேரடி பார்வையில் திட்டமிட்டு நிதிகளை இந்தியர்களுக்கு வழங்க நியமிதிருக்கிறாரா?ஆனால் வேதாவிற்கு அரசியல் ஆட்டம் தெரியாது.
இனி ஒதுக்கீடுகள் நமது பிரதிநிதி கட்சிக்கு கிடைக்காதா ?இதற்க்கு ம இ கா ஒத்துக்கொள்ளுமா?இல்லை கீழறுப்பு வேலைகளை செய்து வேதாவை ஒருவழி பண்ணிவிடுவார்களா? வேதா அவர்களே உமக்கு கடமைகளை நிறைவேற்ற நிறைய சவால்கள் காத்துக்கொண்டிருக்கிறது.
நாங்கள் எப்படி அரசியல் வாதிகளை சமாளிக்க போகிறீர்கள் என்று பார்த்துக்கொண்டிருக்கிறோம்.
Whatever it is the back door deputy minister should thank the great DSAI for the post he gain. Without him he will never get such a post. Since we are the minority ppl in the country, we can’t influence the election result by our self in considerable impact. When DSAI in 2008 formed the pakatan rakyat the new force against the mighty BN, the later started loose the grip . From the onwards the Malaysians enjoying some kind of extra – extra things from BN in order to get back the support. Some fell in to that trap some don’t . If DSAI NEVER form the coalition I’m very sure that BN won’t bother us even after the HINDRAF demo 2007. This is due they still can win 2/3 of parliament seats comfortably. Thank you so much DSAI. God bless you.
மா இ கா உங்களுக்கு குழி தோண்டுவது உறுதி !!!!!!!!!!!!!!!!
வேதா அவர்களுக்கு கொடுக்கப்பட்ட பொறுப்பில்லா அமைச்சு ‘இந்தியர் நலம் பேணும்’ அமைச்சாக மாற்றப்பட வேண்டும் அல்லது அது போலவே செயல்பட வேண்டும்.எது எப்படியோ இந்நாட்டில் இந்திய சமூகத்திற்காக ஒரு சிறு ஒளி வீச்சு தென்படுவது போல் தெரிகிறது.பொறுத்திருந்துதான் பார்ப்போமே.’ஆக்கப் பொறுத்த நாம் ஆறப் பொறுப்போமே.வெளியில் இருந்த வேதா அவர்கள் நரியின் குகைக்குள் சென்றுவிட்டார்.அங்கு அவர் நிச்சயம் புலியாகத்தான் இருப்பார்.புலி பசித்தாலும் புல்லை [லஞ்சத்தை] தின்னாது.நல்லதே நடக்க வேண்டும் என்று ஆண்டவனை பிரார்த்திப்போம்.
வைத்து பிழைப்புக்காக செருப்பு தைக்கிரவன்னுக்கு இருக்கும் மரியாத கூட,துரோகி வேதாவுக்கு இனி கிடைக்காது…அது நம் சமுதாயமே முடிவு பண்ணட்டும்.
எல்லாம் நாடக் மேடை
எங்கும் நடிகர் கூட்டம்…….
என்ன மாயமோ..என்ன மந்திரமோ..?
2013-ஆம் மிகச்சிறந்த ஜோக் – வேதா மந்திரியாக்கப் பட்டதுதான்.
பாவம் ஐப்.பி.எஃப், மக்கள் சக்தி…
நஜிப்பின் நாடகம் கூடிய விரைவில் வெளிச்சத்திற்கு வரும்.
அய்யா..குத்தூசி, நீங்கள் சொன்னது உண்மையிலும் உண்மை…குரைத்துக் கொண்டிருந்த நாய்க்கு எலும்புத் துண்டு போட்டாகி விட்டது. இனி அது தன் வாலை சுருடிக் கொள்ளும்..சபாஷ் குத்தூசி
பேராசிரியர் சொன்னது நிஜம்தான் மானமுள்ள தமிழினத்தில் இனி யாரும் கருணா, தனேந்திரன் வேதமூர்த்தி என்ற பெயரை குழந்தைகளுக்கு சூட்டிவிடாதீர்கள்.
ஐபிஎப் என்ன நினைத்துக் கொண்டிருப்பார்கள்…”ஐயோ, வடை போச்சே..” இதுதாம்ல அரசியல். ஓயாம ஓடறது முக்கியமில்ல, கேப்புல கிடா வெட்டத் தெரியணும், மக்கா!! சூதானமா இருக்கக் கத்துக்கோணும்.
அவனுக்கு இவன் ஆப்பு வச்சான் இவனுக்கு அவன் ஆப்பு வச்சிட்டான் .நான் சொன்னால் பிரதமர் அப்படியே கேப்பாருன்னு சொல்லி இந்த நாட்டில் இலக்கா இல்லாத மந்திரிபோல் உலாவி வந்த தநேந்திரனுக்கு ஆப்பு இப்பொழுது தெரிகிறதா கடவுள் பெயரை சொல்லி நீ என்ன ஆட்டம் போட்ட உன்னை நினைக்கும் பொழுது ஒரு பாடல் வரி நினைவுக்கு வருது ……..பதவி வரும் போது பணிவு வர வேண்டும் தோழா ……..மக்களுக்காக வாழ்ந்த எம் ஜி ஆர் எங்கே நீ எங்கே .இந்த நாட்டில் இந்திய சமுதாய உணர்வுக்கு பலம் உண்டு .
இந்த நாட்டில் உண்மையான இந்தியர் கட்சிகள் ஒன்று இல்லவே இல்லை .
பார்கதனேபோரம் வேதாளம் முருங்கை மரம் ஏறுத அல்லது இன்னும் செருப்படி வாங்க போகுதான்னு……..
இது முன்பே கணிக்கபட்ட்துதன் மந்த்ரி பதவி மகுடம் சுட்டிகோல் நீ வலு உன் நடிப்பில் sivagi செத்தான் vetha
புதிய அரசாங்கத்தில் 6 இந்த்திய அமைச்சர்கள் ..இனிநன்மை உண்டாகட்டும் … நம் இனத்தவருக்கு …
செய்விர்கள ????? இல்லை ?????
அறிக்கை விட்டே நாட்கள் நகரும?
புதிய அரசாங்கத்தில் 6 இந்த்திய அமைச்சர்கள் ..இனிநன்மை உண்டாகட்டும் … நம் இனத்தவருக்கு …
செய்விர்கள ????? இல்லை ?????
அறிக்கை விட்டே நாட்கள் நகரும?….
வேதாவை வையாதீர்கள் நண்பர்களே! அவருக்கு நஜிப் அரசாங்கம் ஒரு வாய்ப்புக் கொடுத்திருக்கிறது. அவர் எதற்காகப் போராடினாரோ அதை நிறைவேற்றுவதற்காக அவருக்கு ஒரு வாய்ப்புக் கொடுக்கப் பட்டிருக்கலாம். நாம் பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும். ம.இ.கா. காரன் எதையும் செய்ய மாட்டான் என்று நஜிப்புக்குத் தெரியும். வேதா செய்வார் என்று அவர் நினைத்திருக்கலாம். கொஞ்சம் பொறுங்கள். ம.இ.கா. பொறாமைப்படும் படி ஒரு வேளை அவர் செய்து விட்டால்…? அதனால் அவசரப்படாதீர்கள். இன்னும் ஐந்து ஆண்டுகள் இருக்கின்றனவே! திட்டுவதற்கு இன்னும் கொஞ்சம் அவகாசம் கொடுங்களேன்!
முதலில் எனது பேரை தமிழன் 2 என்று மாற்றிக்கொள்கிறேன். ஏனென்றால் வேறொரு கபோதி என் பேரை வெச்சிகிட்டு வேதாவை தூக்கி பேசுது. கசுமாலம்
தமிழனுக்கு வேதனை உண்டு/- தமிழனே-பதவியை பரிக்க பலவிதத்தில் ஏதேதோ என்னென்னவோ செய்வான்,கிடைத்த உடன் செய்வதறியாது விட்டு ஓடவும் செய்வான். .அன்றைய தமிழன் வீரத்தால் ஈட்டிய பெறுமையை,இன்று இவன் குனிந்து நெளிந்து,குருகி,கோழையாய்,கொடுத்ததை பெற்று பல்லிப்பான். கொஞ்சமாகிலும் நடந்து வந்த பாதையை ஒருமுறை நினைத்தால் அவனின் பூர்வீகம் தெரிந்துவிடும். திரும்ப பயபிடுகிறான்.அவனை எவனாவது தமிழன் என்று சொல்லிவிடுவானோ என்று. கடவுளை கட்டிவைத்து காசுபரிக்கும் கூட்டம், தமிழன் கட்டிய கோயிலை வைத்து பிழைத்து தமிழனை ஒன்று சேரவிடாத கூட்டம், இன்று தமிழன் இறைவனை விட்டு விட்டு ஓடவைத்த கூட்டம், எப்படி நம் தமிழரின் ஒற்றுமை நிலைக்கும். ஐயோ இன்னும் ஓர் முறை நம்மாலே நாமே வீழ்ந்தோம் என்ற நிலை மேலும் நமக்கு வரக்கூடாது. ஒரு சில வசதி உள்ளவர்களால்,ஏதும் அறியா ஏழையர்கள் பாதிக்க படக்கூடாது நம்மில் ஒற்றுமை இதுவே நம்மின் மூலமந்திரம்
வேதமூர்த்தி ஒரு எட்டப்பன்