மாட் ஜைன்: முகம்மட் நூருக்கு எதிராக ஏஜி நடவடிக்கை எடுக்க மாட்டார்

1agமுறையீட்டு நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி முகம்மட் நூர் அப்துல்லா கடந்த வாரம் பேசிய பேச்சின் தொடர்பில் சட்டத்துறை தலைவர் அப்துல் கனி பட்டேய்ல் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எதுவும் எடுக்க மாட்டார் என்கிறார் கோலாலும்பூர் குற்றப்புலன் ஆய்வுத் துறை முன்னாள் தலைவர் மாட் ஜைன் இப்ராகிம்.

1ag1முகம்மட் நூருக்கு எதிராக கனி (வலம்) நடவடிக்கை எடுப்பார் என யாரும் எதிர்பார்க்க வேண்டாம், ஏனென்றால், அன்வார் இப்ராகிமின் “கண்-காயமடைந்த சம்பவத்தில்” கனியும் போலீஸ் படைத்தலைவர் மூசா ஹசானும் குற்றச்செயல்கள் எதுவும் செய்யவில்லை என்று தீர்ப்பளித்து விடுவித்தவர் அந்த முன்னாள் நீதிபதிதான் என்றாரவர்.

“கனி, மூசா, கோலாலும்பூர் மருத்துவமனை மருத்துவர் டாக்டர் அப்துல் ரஹ்மான் யூசுப் ஆகியோருடன் நான் உள்பட எங்கள் நால்வர்மீதும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் மேற்கொண்ட விசாரணை கோப்புகளை ஆராய அமைக்கப்பட்ட சுயேச்சை வாரியத்தின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டிருந்த மூன்று மூத்த நீதிபதிகளில் முகம்மட் நூரும் ஒருவராவார்”, என்று மாட் ஜைன் இன்று விடுத்த அறிக்கை ஒன்றில் கூறினார்.

மற்ற இருவரில் ஒருவர் கூட்டரசு நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி அப்துல் காடிர் இஸ்மாயில், இன்னொருவர் முறையீட்டு நீதிமன்ற முன்னாள் நீதிபதி முகம்மட் நூர் அஹ்மட்.

2க்கு1 என்ற பெரும்பான்மை முடிவில் அவ்வாரியம் கனி எவ்வித குற்றச்செயலும் புரியவில்லை என்று தீர்மானித்தது.

வாரியத்துக்குத் தலைமைதாங்கிய அப்துல் காடிருக்குத் தீர்ப்பில் உடன்பாடில்லை.

TAGS: