இஸ்தானா நெகாராவில் யாங் டி பெர்துவான் அகோங் துவாங்கு அப்துல் ஹலிம் ஷா முவாட்ஸாம் முன்னிலையில் முஹைடின் யாசின் தலைமையில் அமைச்சர்களும் துணை அமைச்சர்களும் இன்று பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டுள்ளனர்.
முஹைடின் துணைப் பிரதமராகவும் முதலாவது கல்வி, உயர் கல்வி அமைச்சராகவும் அந்தச் சடங்கில் முதலில் உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.
பின்னர் அவர் தலைமை நீதிபதி அரிபின் ஸாக்காரியா, அரசாங்கத்தின் தலைமைச் செயலாளர் டாக்டர் அலி ஹம்சா ஆகியோர் முன்பு அதிகாரத்துவப் பத்திரத்தில் கையெழுத்திட்டார்.
அந்த சடங்கின் போது ராஜா பரமைசுரி அகோங் துவாங்கு ஹமினா, பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், அவரது மனைவி ரோஸ்மா மான்சோர், முன்னாள் பிரதமர் அப்துல்லா அகமட் படாவி ஆகியோர் உடனிருந்தார்கள்.
முஹைடினுக்குப் பின்னர் அமைச்சர்கள் ஐந்து குழுவினராக பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டார்கள்.
24 துணை அமைச்சர்களும் அப்போது பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டதுடன் பதவி நியமனக்
கடிதங்களையும் பெற்றுக் கொண்டார்கள்.
அந்தச் சடங்கிற்குப் பின்னர் அமைச்சர்களும் துணை அமைச்சர்களும் துவாங்கு அப்துல் ஹலிமுடன்
படம் எடுத்துக் கொண்டனர்.
-பெர்னாமா
உறுதிமொழி எடுத்த எல்லா கோமாளிகளுக்கும் வாழ்த்துக்கள் ! இப்படிக்கும் : சர்க்கஸ் கம்பெனி உரிமையாளர் நஜிப் !
சரியகே சொன்னிர்கள் nanda அவர்களே!!!!!!!!!!!
சார் நான் உங்கள் கட்சி