கடிதம் படித்து கண்ணீர் வடித்த ஆஸ்திரேலிய பிரதமர்

julia gillard cryingமெல்போர்ன்: ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் பிரதமர் ஜூலியா கில்லர்டு தனது திட்டங்கள் பற்றி விளக்கிக் கொண்டிருக்கையில், மக்கள் எழுதிய கடிதம் ஒன்றை படித்து உணர்ச்சி வசப்பட்டு அழுதார்.

ஆஸ்திரேலிய பிரதமர் ஜூலியா கில்லர்டு மாற்று திறனாளிகளுக்கு பயனளிக்க கூடிய சட்ட முன்வடிவை அறிமுகம் செய்தார். இந்த திட்டத்திற்கு கடுமையாக எதிர்ப்பு கிளம்பியதைத் தொடர்ந்து, இந்த திட்டத்தால் ஏற்பட கூடிய நன்மைகளை விளக்கினார்.

மக்களின் வாழ்வில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் இந்த திட்டம் குறித்து கில்லார்டு பேசி கொண்டிருக்கும்போது உணர்ச்சிவசப்பட்ட ஜூலியா, குயின்ஸ்லேண்டர்ஸ் நகர மக்கள் தங்களது கையெழுத்திட்டு அனுப்பிய கடிதத்தை பார்த்து உணர்ச்சிவசப்பட்ட நிலையில் அழுதார்.

ஜூலியா பேசி முடித்து அமர்ந்த பின்னர், தொழிலாளர் கட்சியினர் மற்றும் மாற்று திறனாளி வழக்கறிஞர்கள் 20 பேர் எழுந்து நின்று கரவொலி எழுப்பினர்.