ஹிண்டராப் : மோகனும், உதயகுமாரும் வாயை மூடிக் கொள்ள வேண்டும்

waythaமஇகா இளைஞர் தலைவர் டி மோகனும் ஹிண்டராப்பின் பெயரளவு தலைவர் பி உதயகுமாரும் ‘வாயை மூடிக் கொண்டு’ தனது தலைவர் பி வேதமூர்த்தியை பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் துணை அமைச்சராக நியமித்ததை குறை கூறுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என ஹிண்ட்ராப் கூறியுள்ளது.

“அந்த அம்சத்தை தொடர்ந்து பேசிக் கொண்டிருப்பது அவர்களுடைய திறமைக் குறைவை மட்டுமின்றி
அவர்கள் சார்ந்துள்ள அமைப்புக்களின் திறமைக் குறைவையும் மேலும் வெளிப்படையாகவும் தெளிவாகவும் காட்டி விடும்,” என ஹிண்ட்ராப் ஆலோசகர் என் கணேசன் சொன்னார்.

மோகனும், உதயகுமாரும் வேதமூர்த்தியின் நியமனம் மீது விடுத்துள்ள அறிக்கைகள் குறித்து கடுமையாக கருத்துரைத்த அவர் அவ்வாறு கூறினார்.

“வேதமூர்த்தியின் நியமனத்தைப் பார்க்கும் போது இந்திய சமூகத்துக்குத் தேவையான உருமாற்றத்தைக் கொண்டு வருவதற்கு சம அளவில் ஆற்றலைக் கொண்ட தனிநபர்களோ அல்லது அமைப்புக்களோ இல்லை என்ற முடிவுக்கு ஒருவர் வரமுடியும்.”

waytha1“ஆகவே மோகனும், உதயகுமாரும் வாயை மூடிக் கொள்ள வேண்டும். அமைதியாக இருக்க வேண்டும்.  இந்தச் செய்தியின் தாக்கத்தை  உணர்ந்து அவர்கள் பயனுள்ள வழிகளில் நேரத்தைச் செலவு செய்ய  வேண்டும்,” என கணேசன் விடுத்த அறிக்கை தெரிவித்தது.

நஜிப் தேர்வின் விவேகத்தை காலம் உணர்த்தும் என கணேசன் மேலும் சொன்னார்.

வேதமூர்த்தியின் நியமனத்தை அனுதாபத்துடன் பார்க்காத பலரில் மோகனும், உதயகுமாரும் அடங்குவர்.

வேதமூர்த்தியை “அண்மைய இந்திய மண்டோர் (தலைமைக் கூலி) என்றும் ‘புதிய சாமிவேலு’ என்றும்  வேதமூர்த்தியின் மூத்த சகோதரருமான உதயகுமார் வருணித்துள்ளார்.

ஆளும் கூட்டணிக்கு விசுவாசமாக உள்ளவர்களுக்குப் பதில் ஹிண்டராப்பை நஜிப் தேர்வு செய்தது மீது  மஇகா இளைஞர் பிரிவும் பிஎன்-னுக்கு நட்புறவான கிம்மா என்ற மலேசிய இந்திய முஸ்லிம் காங்கிரஸும் அதிருப்தி தெரிவித்துள்ளன.

waytha22007ம் ஆண்டு ஹிண்ட்ராப் நடத்திய பேரணி மூலம் நாட்டின் தோற்றத்துக்கு வேதமூர்த்தி களங்கத்தை  ஏற்படுத்தியதையும் பின்னர் உதயகுமார் தற்போது ரத்துச் செய்யப்பட்டுள்ள உள்நாட்டுப் பாதுகாப்புச்  சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்ட போது வேதமூர்த்தி நாடு கடந்து வாழ்ந்ததையும் அவை சுட்டிக்  காட்டின.

என்றாலும் வேதமூர்த்தி கடந்த ஆண்டு ஆகஸ்ட் முதல் தேதி நாடு திரும்பி ஹிண்ட்ராப் பிரிவு ஒன்றுக்கு தலைமை தாங்கினார்.

கடந்த மாதம் அவர், ‘இந்திய சமூகதை மேம்படுத்துவதற்காக’ பிஎன்
-உடன் புரிந்துணர்வுப் பத்திரம் ஒன்றில் கையெழுத்திட்டார்.

அதற்கு ஈடாக பிஎன்-னுக்கு தனது ஆதரவை வேதமூர்த்தியின் ஹிண்ட்ராப் தெரிவித்துக் கொண்டது. நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெறுவதற்கு உதவுமாறும் அது மலேசிய இந்தியர்களைக் கேட்டுக் கொண்டது.