‘மற்ற நாடுகளில் புதிய வீடுகளைத் தேடுமாறு புதிய உள்துறை அமைச்சர் சொல்கிறாரா?’

zahidஉங்கள் கருத்து : “மற்ற நாடுகளில் புதிய வீட்டைத் தேடுமாறு மலேசியர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்களைக் கேட்டுக் கொள்வது தான் உள்துறை அமைச்சர் என்ற முறையில் ஸாஹிட்டின் முதலாவது பணியாகும்”

13வது பொதுத் தேர்தல் முடிவுகளில் மகிழ்ச்சி அடையாதவர்கள் வேற்று நாடுகளில் குடியேறலாம் என ஸாஹிட் சொல்கிறார்.

ஸ்டார்ர்: மே 5 பொதுத் தேர்தல் முடிவுகளில் மகிழ்ச்சி அடையாத மலேசியர்கள் வேற்று நாடுகளுக்கு குடியேறலாம் என பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அமைச்சரவையில் உள்ள மூத்த அமைச்சர் ஒருவர்  சொல்லியிருப்பது மிகவும் கொடுமையானது.

புதிய உள்துறை அமைச்சர் ஸாஹிட் ஹமிடி விடுத்துள்ள அந்த அறிக்கை உண்மையில் நஜிப்பின் புதிய அமைச்சரவையின் நேர்மையையே கேள்விக்குறியாக்கியுள்ளது.

மக்கள் தேர்தலில் தங்கள் பதிலைச் சொல்லி விட்டதால் அவர்களுடைய உணர்வுகளை ஸாஹிட் புரிந்து கொண்டிருக்க வேண்டும்.

செலுத்தப்பட்ட வாக்குகளில் குறைந்த எண்ணிக்கையிலான வாக்குகளைப் பெற்ற பின்னர் அரசாங்கத்தை அமைத்துள்ள அம்னோ/பிஎன் தேர்தல் தொகுதிகளில் தில்லுமுல்லு செய்ததின் மூலமே அதனை அடைந்துள்ளது.

சட்டவிரோதக் குடியேற்றக்காரர்களை சட்டப்பூர்வமாக்கி அவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ததது
இன்னொரு தேர்தல் மோசடியாகும்.

வாழ்க்கை தொடருகிறது: மற்ற நாடுகளில் புதிய வீட்டைத் தேடுமாறு மலேசியர்களில் பாதிக்கும்
மேற்பட்டவர்களைக் கேட்டுக் கொள்வது தான் உள்துறை அமைச்சர் என்ற முறையில் ஸாஹிட்டின்
முதலாவது பணியாகும்.

உண்மை: மார்ச் 22ம் தேதி ஜகார்த்தா போஸ்ட் என்னும் நாளேட்டில் வெளியான செய்தி இது:
‘மலேசியத் தற்காப்பு அமைச்சர் ‘தமது இல்லத்திற்கு’ வருகை புரிகிறார்’

ஜோக்ஜகார்த்தாவுக்குச் சென்றிருந்த மலேசியத் தற்காப்பு அமைச்சர் தமது ஜாவா பரம்பரை குறித்த
தகவலை வெளியிட்டார். தமக்கு ஜாவா ரத்தம் ஒடுகிறது என்றும் தனது தந்தை வழி தாத்தா
ஜோக்ஜகார்த்தாவில் உள்ள குலோன்புரோகோவைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர் சொன்னார்.

“நான் என் இல்லத்திற்கு வருகிறேன்” என ஸாஹிட் ஜகார்த்தா போஸ்ட் பத்திரிக்கையிடம் சொன்னார்.

அவர் ஜகார்த்தா அனைத்துலக தற்காப்பு கலந்துரையாடலில் கலந்து கொள்ள அங்கு சென்றிருந்தார்.

ஜோக்ஜகார்த்தாவில் இருந்த போது ஸாஹிட் அதன் மேயர் ஹார்யாடி சுயுத்தி, ஜோக்ஜகார்த்தா
சுல்தானுடைய சகோதரர் GBPH Joyokusumo உட்பட பல நண்பர்களையும் சந்திக்க எண்ணியுள்ளார்.

1932ம் ஆண்டு தமது தாத்தா குலோன்புரோகோவிலிருந்து மலேசியாவுக்கு குடியேறியதாகவும் தமது
தாயாரின் தாத்தா கிழக்கு ஜாவா பொனோரோகோவிலிருந்து வந்தவர் என்றும் அவர் பின்னர் மலேசிய
மாது ஒருவரைத் திருமணம் செய்து கொண்டார் என்றும் ஸாஜிட் சொன்னார்.

மலேசியன் சுனாமி: ஸாஹிட் அவர்களே என் தாத்தா உங்கள் தாத்தாவுக்கு முன்னரே மலாயாவுக்கு
வந்திருந்தால் யாராவது ஒருவர் உங்களை ‘பெண்டாத்தாங்’ என அழைக்கலாமா ?

ரிபார்மசி: உங்களைப் போன்று இதுவும் என்னுடைய நாடு.

டாக்: ஆகவே நாட்டை விட்டு வெளியேறுமாறு 51.78 விழுக்காடு மலேசியர்களை ஸாஹிட் கேட்டுக்
கொள்கிறார். மகிழ்ச்சியாக இல்லாத சீனர்களையும் இந்தியர்களையும் சீனாவுக்கும் இந்தியாவுக்கும்
திரும்பிச் செல்லுமாறு அம்னோ எப்போது கூறி வருகின்றது. பக்காத்தானுக்கு வாக்களித்த
மலாய்க்காரர்கள் எங்கே போவார்கள் ?

TAGS: