‘நாடற்ற இந்தியர் பிரச்னைகளைத் தீர்க்க ஒரு கையெழுத்து போதும்’

indiansஉங்கள் கருத்து : “நாடற்ற இந்தியர் பிரச்னையை 100 நாட்களில் தீர்ப்பதாக பக்காத்தான் வாக்குறுதி அளித்தது. அந்த  சவாலை நீங்கள் ஏற்றுக் கொள்ளத் தயாரா ?”

நாடற்ற மக்கள் விவகாரத்துக்கு 5 ஆண்டுகளில் தீர்வு காண வேதா நம்பிக்கை

சின்ன அரக்கன்: சர்ச்சைக்குரிய ஹிண்ட்ராப் தலைவரும் இப்போது பிரதமர் துறையில் துணை  அமைச்சருமான அம்னோ/பிஎன் அமைச்சர்களைப் போன்று பேசத் தொடங்கியிருப்பது ஏமாற்றத்தை  அளிக்கிறது.

தம்மைக் குறை கூறுகின்றவர்களைப் பற்றி கவலைப்படப் போவதில்லை என அவர் சொல்வது, அவர்
முதிர்ச்சி அடையாதவர் என்பதையே காட்டுகின்றது. குறை கூறல்களை சகித்துக் கொண்டு மக்கள்
எண்ணங்களை திறந்த மனத்துடனும் முதிர்ச்சியுடனும் அவர் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

தமக்கு முன்பு உள்ள பெரும்பணியை- ஐந்து ஆண்டுகளில் இந்திய சமூகப் பிரச்னைகளைத் தீர்ப்பது-
முடிக்க அவர் விரும்பினால் அவர் ஆணவத்தை கை விட வேண்டும். இந்திய சமூகத்தின் நம்பிக்கையை மீண்டும் பெற முயல வேண்டும்.

வேதா தமது கொள்கைகளை கைவிட்டு விட்டு பிஎன் -னில் சேர்ந்தார். அவ்வாறு செய்யுமாறு இந்திய
சமூகம் அவரை நெருக்கவில்லை. ‘Janji Ditepati’ கூட்டணியில் சேருவது எனத் தாம் செய்த முடிவு
சரியானது என்பதை நிரூபிப்பது வேதாவின் பொறுப்பாகும்.

இந்திய சமூகத்துக்கு தாம் அளித்த வாக்குறுதிகளை அவர் நிறைவேற்றும் வரையில் மலேசிய இந்திய
சமூகமும் அதன் தலைவர்களும் தம்மை உன்னிப்பாகக் கவனிக்கும் என்பதை அவர் ஏற்றுக்
கொள்ளவேண்டும்.

ஒடின்: வேதமூர்த்தி, ஐந்து ஆண்டுகளில் 280,000 நாடற்ற இந்தியர்களுடைய குடியுரிமைப்
பிரச்னையைத் தீர்க்க முடியும் என நீங்கள் சொல்கின்றீர்கள். அந்த ஐந்து ஆண்டுகளில் மொத்தம்
(5x365x24)= 43,800 மணி நேரம். அந்த ஐந்து ஆண்டுகளில் ஒன்று லீப் வருடமாகும். ஆகவே ஒரு
நாள் அதாவது 24 மணி நேரம். அதனையும் சேர்த்தால் மொத்தம் 43,824 மணி நேரம்.

அந்த நேரத்தை 280,000 நாடற்ற இந்தியர் எண்ணிக்கையைக் கொண்டு வகுத்தால் நமக்கு 1.6
(கிட்டத்தட்ட) மணி நேரம் வருகிறது. அதாவது நாடற்ற இந்தியர் ஒருவருக்கு 1.6 மணி நேரத்திற்குள்
பிரஜாவுரிமைப் பத்திரம் கிடைத்து விடும் என்பது அதன் அர்த்தமாகும்.

யானேஷா த/பெ நந்தகுமார் விவகாரத்தில் நீங்கள் நடவடிக்கை எடுக்கலாமே ? நாங்கள் உங்களுக்கு
1.6 நேரத்துக்குப் பதில் ஒரு முழு நாள் தாரளமாகக் கொடுக்கிறோம். நீங்கள் பதவி உறுதிமொழி
எடுத்துக் கொண்ட யானேஷாவுக்கு ஆவணங்கள் கிடைத்து விடும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

மலாயா உணர்வு: என்னுடைய நினைவுக்கு எட்டிய வரை ஹிண்ட்ராப் பெருந்திட்டத்தை எந்த மாற்றமும் இல்லாமல் ஏற்றுக் கொள்ளுமாறு பக்காத்தான் ராக்யாட்டை வேதமூர்த்தி நெருக்கினார். அதனை ஏற்கும் நிலையில் பக்காத்தான் இல்லை.

ஆனால் ஹிண்ட்ராப் கோரிக்கைகள் கணிசமாக நீர்க்கப்பட்ட பின்னர் பிரதமர் நஜிப் ரசாக்குடன்
வேதமூர்த்தி புரிந்துணர்வுப் பத்திரத்தில் கையெழுத்திட்டார்.

ஒரு கையெழுத்தின் மூலம் நாடற்ற இந்தியர் பிரச்னையை பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் தீர்க்க முடியும் என்றுகூட வேதா சொன்னார். இப்போது துணை அமைச்சர் பொறுப்பை
ஏற்றுக் கொண்ட பின்னர் அந்த பிரச்னையை விரைவாகத் தீர்க்க முடியாது என்றும் ஐந்து ஆண்டுகள்
பிடிக்கும் என்றும் அவர் சொல்கிறார்.

மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பது பற்றி நான் அதிகம் சொல்ல முடியாது. கடந்த 56
ஆண்டுகளாக இந்தியர் பிரச்னைகளை மஇகா தீர்க்க முடியவில்லை. வேதா-வால் முடியும் என நான்
நம்பவில்லை.

விஜார்ஜ்மை: பி வேதமூர்த்தி, இப்போது நீங்கள் பல்லவியை மாற்றுகின்றீர்கள். ஒரு கையெழுத்து மூலம் இந்தியர்கள் எதிர்நோக்கும் பிரச்னையைத் தீர்க்க முடியும் என நீங்கள் எங்களுக்குச் சொன்னீர்கள்.

நாடற்ற இந்தியர் பிரச்னையை 100 நாட்களில் தீர்ப்பதாக பக்காத்தான் வாக்குறுதி அளித்தது. அந்த
சவாலை நீங்கள் ஏற்றுக் கொள்ளத் தயாரா ?

அப்பும்: ஐந்து ஆண்டுகளா ? நீங்கள் நகைச்சுவையாக பேசுகின்றீர்களா ? ஆயிரக்கணக்கான அந்நியர்களுக்கு திடீர் குடியுரிமை (சில மணி நேரங்களில்) கொடுக்கப்பட்டுள்ளது. நாடற்ற இந்தியர் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு உங்கள் ஐந்து ஆண்டுகள் வேண்டுமா ?

ஆறு மாதங்கள் போதும். உங்களுக்கு ஐந்து ஆண்டுகள் “வீண் சம்பளம்” ( gaji buta ) கொடுக்க விரும்பவில்லை.

அத்துடன் 100 நாட்களில் நாடற்ற இந்தியர் பிரச்னையைத் தீர்ப்பதாக அன்வார் சொன்னார். இப்போது
நீங்கள் அதிகாரத்தில் இருக்கின்றீர்கள். உங்களால் நிச்சயம் முடியும்.

நஜிப் மீண்டும் ஆட்சிக்கு வந்து விட்டார். 100 நாட்களில் பிரச்னையைத் தீர்க்கா விட்டால்
அன்வாருடன் கிடைத்த வாய்ப்பை நழுவ விட்டதற்காக அந்த நாடற்ற இந்தியர்கள் என்னை எல்லாப்
பக்கமும் சாபமிட்டு விடுவார்கள் என உங்கள் எஜமானரிடம் சொல்லி அவருக்கு நெருக்குதல்
கொடுங்கள்.

TAGS: