உள்துறை அமைச்சர், பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம் சொன்னதற்குச் சரிக்குச் சரியாக பதிலளிக்கும் விதத்தில் “இது உங்க அப்பன் நாடும் அல்ல”, என்று கூறினார்.
தேர்தல்முறை பிடிக்காதவர்கள் நாட்டைவிட்டு வெளியேறலாம் என்று தாம் முன்னர் கூறியதைத் தற்காத்துப் பேசிய அஹ்மட் ஜாஹிட் ஹமிடி, “இது என் அப்பன் நாடும் அவரின் அப்பன் நாடும் அல்ல” என்றார்.
இன்று செய்தியாளர் கூட்டமொன்றில் பேசிய ஜாஹிட், “இதை மலேசியாகினியில் எழுத வேண்டும்”,என்றார்.
“நீங்கள்தான் (மலேசியாகினி) எப்போதும் கதை கட்டுவீர்களே. தயவு செய்து இதழியல் நெறிமுறையைப் பின்பற்றி எழுதுங்கள்”, என்றவர் மலேசியாகினி செய்தியாளரை நோக்கிக் கூறினார்.
அட மடையா ,அனுவர் யாரையும் நாட்டை விட்டு போக சொல்ல வில்லையே. நீதானே சொன்னை. போனதும் சரியில்லே வந்தததும் சரி இல்லே. ஈத்தை வாயேன் போய் நார வாயன் வந்திருக்கான்.
நாட்டைவிட்டு வெளியேறச் சொல்ல எந்த அப்பன் உனக்கு அதிகாரம் கொடுத்தான் என்பதைச் சொல்லிவிட்டு நீ அரசியல் நடத்து. பதவி நாற்காலியில் இடம் கிடைத்ததும் தலைக்கணமும் திமிரும் வரக்கூடாது. இவ்வளவு வயசாகியும்கூட நிதானமும் பொறுப்பும் இல்லாமல் மனம்போனபடி சிறுபிள்ளைத்தனமாய் பேசுவதை முதலில் நிறுத்தவேண்டும் இந்த ஜாஹித்.