குவான் எங்: அமைச்சர்கள் எதனை மறைக்க முயலுகின்றனர் ?

limஅமைச்சர்கள் தங்கள் சொத்து விவரங்களை பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என்ற வேண்டுகோளை

புதிய வெளிப்படை அமைச்சர் பால் லோ தவிர்ப்பதாக பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங்  குற்றம் சாட்டியுள்ளார்.

அமைச்சர்கள் அங்கு மறைப்பதற்கு என்ன இருக்கிறது என அவர் வினவினார்.

பினாங்கு ஆட்சி மன்ற உறுப்பினர்கள் தங்கள் சொத்துக்களை பகிரங்கமாக அறிவிக்கச் செய்த பினாங்கு  அரசாங்கத்தை அந்த பிரதமர் துறை அமைச்சர் பாராட்டியதாக லிம் சொன்னார்.

“கூட்டரசு அரசாங்கத்தின் நேர்மையை நிலை நிறுத்துவதற்கு அது போன்ற நடவடிக்கையை எடுக்காமல்
அவர் ஏன் இப்போது வேறு வகையான நிலையைப் பின்பற்றுகிறார்,” என டிஏபி தலைமைச்
செயலாளருமான லிம் வினவினார்.

“இப்போது பால் லோ பிஎன் அமைச்சர் ஆவார். அதனால் அவர் பிஎன் -னுடைய பிரச்சாரப் பிடிக்குள்
சிக்கிக் கொண்டு விட்டார். அமைச்சர்கள் பகிரங்கமாக தங்கள் சொத்துக்களை அறிவிப்பது
அவர்களுடைய தனிப்பட்ட பாதுகாப்புக்கு மருட்டலை ஏற்படுத்தும் என அவர் சொல்கிறார்.”lim1

“மறைப்பதற்கு அமைச்சர்களிடன் என்ன தான் இருக்கிறது ?” என லிம் கேட்டார்.

மாநிலச் சட்ட மன்ற உறுப்பினர்களும் கூட தங்கள் சொத்துக்களை அறிவிப்பதற்கான நடவடிக்கையைத்  தமது நிர்வாகம் எடுத்துள்ளதாகவும் அவர் மேலும் சொன்னார்.

தங்கள் சொத்துக்களை அறிவித்ததால் லோ குறிப்பிட்டுள்ளது போல பினாங்கு ஆட்சி மன்ற  உறுப்பினர்களுடைய பாதுகாப்புக்கு மருட்டல் ஏற்படவில்லை என்பதை பினாங்கு அனுபவம்  காட்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

“ஒரு வேளை எங்களிடம் சில சொத்துக்கள் மட்டுமே இருப்பதால் தாக்கம் ஏதும் ஏற்படவில்லையோ ?
எங்கள் தனிப்பட்ட பாதுகாப்புக்கு மருட்டல் ஏற்பட்டால் அது பிஎன் ஆதரவாளர்களாகவும் பெர்க்காசா
ஆதரவாளர்களாகவும் உள்ள இனவாதிகளிடமிருந்து வர வேண்டும்,” என அவர் சொன்னார்.

 

TAGS: