‘பேச்சு நன்று, ஆனால் அது செவிட்டு காதில் ஊதிய சங்குதான்’

1 integrityஉங்கள் கருத்து : ‘நேர்மைக்குறைவுதான் பிஎன்/அம்னோவை மக்கள் நிராகரிக்க முக்கிய காரணம். ஆனால், அதை ஒப்புக்கொள்ள மறுக்கிறார்களே, அதை என்னவென்பது…..’

நேர்மைக்குறைவால் பிஎன் ஆதரவு சரிகிறது

கலா: அம்னோ தலைமையிலான பிஎன் ஆட்சி நாளுக்கு நாள் தேய்ந்து வருகிறது என்பதைத்தான் பேராக் அரசப் பேராளர் ராஜா நஸ்ரின் நயமாக எடுத்துரைத்துள்ளார்.

இந்நிலைக்கு நேர்மைப் பற்றாக்குறைதான் காரணம் என்று ராஜா நினைத்தாலும் மக்கள் அதை வேறு விதமாக பார்க்கிறார்கள். அதனால்தான் மக்களின் வாக்குகள் அம்னோ-பிஎன்னுக்கு 47 விழுக்காடும் பக்காத்தானுக்கு 51.8 விழுக்காடும் கிடைத்தன.

மெர்டேகா தொடங்கி அம்னோ-பிஎன்னுக்குக் கிடைத்துள்ள வாக்குகளில் மிகக் குறைந்த விகிதம் இதுதான். அம்னோ-பிஎன் அரசு திருட்டுக்குணம் மிக்கது. சந்தேகமா….. கிள்ளான் துறைமுக ஊழல், சுயேச்சை மின் உற்பத்தியாளர்கள் அடிக்கும் கொள்ளை லாபம், குத்தகை பேரங்கள் என இன்னும் எத்தனையோ இருக்கின்றன.

பெயரிலி_3f89: நேர்மைக் குறைவுதான் (ஊழல்கள், வேண்டியவருக்குச் சலுகைகள், நியாயமற்ற நடைமுறைகள்,  அதிகார அத்துமீறல் இன்னும் பிற) பிஎன்/அம்னோ நிராகரிக்கப்பட்டதற்குக் காரணம் என்பதை அனைவரும் அறிவர்.

ஆனால், பிஎன்/அம்னோதான் அதை ஒப்புக்கொள்வதில்லை.

ஒப்புக்கொள்ள மறுப்பது மட்டுமல்ல. எல்லாவற்றுமே காரணம் சீனர்கள் என்று பழியை அவர்கள்மீது போட்டு மலாய்க்காரர்களுக்கும் சீனர்களுக்குமிடையில் பிளவை உண்டுபண்ணப் பார்க்கிறது. பதவிமீது கொண்ட பேராசைதான் இதற்குக் காரணம்.

பீவே: பேச்சை வரவேற்கிறேன். ஆனால், 2008 பேராக் மாநில அரசு நெருக்கடியின்போது நீங்கள் நடந்துகொண்ட விதம்தான் உங்கள் நேர்மையைச் சந்தேகிக்க வைக்கிறது.

ஆர்மகெட்டன்: களையை ஒழிக்க அதை ஆணிவேருடன் அகற்ற வேண்டும் என்பது சீனப் பழமொழி.

பிஎன்தான் ஊழலின் ஆணிவேர், அதனால், ஊழலை ஒழிக்க பிஎன்னைக் கில்லி எறிய வேண்டும். வேறு குறுக்குவழி இல்லை.

பூமிஅஸ்லி: அரசப் பேராளர் பிஎன்னுக்கு ஒன்றை உணர்த்த விரும்புகிறார். அவர்கள் புத்திசாலிகள் என்றால், புரிந்து கொள்வார்கள்.

நிர்வாகம் என்றால் அதில் நேர்மை வேண்டும். ஆனால் அவப்பேறாக,  நேர்மை, நியாயம் என்ற சொல்களை அரசாங்கம் கெட்ட வார்த்தைகளாக நினைப்பதுபோல் தெரிகிறது.

TAGS: