நேர்காணல் : சிலாங்கூர் மந்திரி புசார் அப்துல் காலிட் இப்ராகிம், பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலி மறைமுகமாக தம் நிர்வாகம் குறித்து குறை சொல்லி வந்தாலும் அதைப் பற்றிக் கவலைப்படவில்லை. இப்படிப்பட்ட அரசியல் எதிர்ப்பு இருந்த போதிலும் மீண்டும் சிலாங்கூர் அரசின் மந்திரி புசாராக நியமிக்கப்பட்டிருப்பதை அவர் சுட்டிக்காட்டினார். “இதுதான் அரசியல்”, என்றாரவர்.
சிறு தொழில்களுக்கான அனுமதிகள் விரைந்து கொடுக்கப்பட வேண்டும் என்றும் அடிநிலை மக்களின் மேம்பாட்டில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அஸ்னின் செய்தியாளர் கூட்டமொன்றில் கேட்டுக்கொண்டிருப்பது குறித்து கருத்துரைத்தபோது காலிட் இவ்வாறு கூறினார்.
“எவ்வளவோ எதிர்ப்புகளுக்கிடையிலும் நானே மந்திரி புசாராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன்”.
அஸ்மினும் (இடம்) அவரின் அணியினருக்கும் காலிட் நிர்வாகத்தில் பிடிக்காத விவகாரங்கள் பல உண்டு, காலிட்டை மந்திரி புசாராகக் கட்சி தேர்ந்தெடுத்ததிலும் அவர்கள் அதிருப்தி கொண்டுள்ளனர்.
“இந்த விவகாரங்கள் பிஎன்னில் இல்லையா? என்ன சொல்ல வ்ருகிறேன் என்றால், இது (உள்சண்டை) ஒன்றும் வழக்கத்துக்கு மாறானதல்ல”, என காலிட் குறிப்பிட்டார்.
மலேசியாவில் அரசியல் இன்னும் “போதுமான அளவு முதிர்ச்சி பெறவில்லை”, என்றாரவர்.
“மேனாடுகளில் அரசியல் நாகரிகம் இருக்கிறது. அவர்களுக்குப் பலநூறு ஆண்டுகள் அனுபவம் இருக்கிறது”.
தமக்கு எதிராகக் கூறப்படும் குறைகூறல்கள் மாநில நிர்வாகத்தில் தாக்கத்தை உண்டுபண்ணுமா என்பதைக் காலம்தான் சொல்லும் என்று காலிட் கூறினார்.
“ஒரு வாரம்தான் ஆகிறது (மந்திரி புசார் பதவியேற்று). ஒரு வாரத்தில் பெரிய மேம்பாட்டை ஏற்படுத்த முடியாது. (தவணைக் காலத்தில்) கால்பகுதி கடந்த பின் குறை கூறல்களின் விளைவுகளைக் கேட்டால் நன்றாக இருக்கும்”, என்றார்.
மே 5 பொதுத் தேர்தலுக்குமுன் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வு காலிட்டுக்கு சிலாங்கூர் மக்களிடையே மிகுந்த செல்வாக்கு இருப்பதைக் காண்பித்தது. தேசிய தலைவர்களான அன்வார் இப்ராகிம், நஜிப் அப்துல் ரசாக்கை விடவும் அவரின் செல்வாக்கு சிலாங்கூர் மக்களிடம் கொடி கட்டி பறந்தது.
ஆனால், சிலாங்கூரில் பக்காத்தான் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை பெற்றது என்றால் அதற்கு தம் செல்வாக்குத்தான் முக்கிய காரணம் என்பதை காலிட் நம்பவில்லை.
“அது (எம்பி என்பது ஒரு காரணமாக இருக்கலாம்). ஆனால், மந்திரி புசாரைத் தனிப்பட்ட தலைவர் என்று நான் நினைக்கவில்லை. மாநிலத்தை நிர்வகிக்கும் குழுவில் ஒருவராகத்தான் பார்க்கிறேன்.
“அதுதான் மக்கள் முடிவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதை நம்பவில்லை”, என்றார்.
தலைகனம் இல்லாத தலைவர் !
சிலாங்கூர் மந்திரிபுசார் அப்துல் காலிட் இப்ராஹிம் அவர்களின் கருத்து, அவரின் தன்னடக்கத்தையும், உயர்ந்த மணபன்புகளையும் காட்டுகிறது. அவரது தலமையில் சிலாங்கூர் மாநில நிர்வாகம் மக்களுக்கு சிறப்பான சேவை வழங்கிட வாழ்த்துக்கள்.
காலிட் அவர்களே ! உங்களை போன்ற தலைவர்களே எங்களுக்கு இந்த மாநிலத்தில் வேண்டும்.ஆட்சி குழுவில் நீங்கள் யாரை தேர்வு செய்தாலும்,புறக்கணித்தாலும் எங்களுக்கு உடன்பாடு.
தங்களின் …
அரசியல் முதிர்வைக் காட்டுகின்றது .
நன்றி மறப்பவர் அல்ல
சிலாங்கூர் மக்கள் !
டான்ஸ்ரீ காலிட் ஒரு சிறந்த மக்கள் தலைவர் அவர் மீண்டும் மந்திரி பெசராக நீடிகக வேண்டும் ஆட்சிக் குழு உறுப்பினர்கள் மாற்றம் காண வேண்டும் குறிப்பாக இந்தியர் மாற்றம் காண வேண்டும் அப்போதுதான் புதியவரின் திறமை என்னவென்று கணிக்கமுடியும்