குதப்புணர்ச்சி வழக்கு ll: மூசா, ரோட்வான் ஆகியோரை பிரதிவாதித் தரப்பு அழைக்காது

குதப்புணர்ச்சி வழக்கில் சாட்சியமளிக்க வருமாறு பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கிற்கும் அவரது மனைவி ரோஸ்மா மான்சோருக்கும் அனுப்பப்பட்ட அன்வார் இப்ராஹிமின் அழைப்பை கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததைத் தொடர்ந்து மேலும் இரண்டு சாட்சிகளை அழைப்பதில்லை என பிரதிவாதித் தரப்பு இன்று முடிவு செய்துள்ளது.

முன்னாள் தேசிய போலீஸ் படைத் தலைவர் மூசா ஹசான், முன்னாள் மலாக்கா போலீஸ் தலைவர் முகமட் ரோடவான் முகமட் யூசோப் ஆகிய இருவரும் அழைக்கப்படுவதற்கு திட்டமிடப்பட்டிருந்த மற்ற இரு சாட்சிகளாகும்.

அந்த எதிர்பாராத முடிவை அன்வாருடைய வழக்குரைஞர் சங்கர நாயர் இன்று உறுதிப்படுத்தினார்.

“நாங்கள் அந்த முடிவு குறித்து அடுத்த தரப்புக்கு (அரசுத் தரப்புக்கு) தெரியப்படுத்தியுள்ளோம்.”

“பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கையும் அவரது மனைவி ரோஸ்மா மான்சோரையும் அழைப்பதையும்

அனுமதிக்காததால் அவர்கள் இருவரையும் அழைப்பதில் எந்தப் பொருளும் இல்லை,” சங்கரா தொடர்பு கொள்ளப்பட்ட போது கூறினார்.

அந்த வழக்கு விசாரணை திங்கட்கிழமை மீண்டும் தொடரும்.