சவூதியில் ஈரானுக்கு உளவு பார்த்த 10 பேர் கைது

arrestசவூதியில் ஈரானுக்காக உளவு பார்த்ததாக 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுடன் சேர்த்து கடந்த 2 மாதங்களில் மொத்தம் 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சவூதி அரேபியா ஆட்சியாளர்களுக்கும், ஈரானுக்கும் இடையே உறவு சரியில்லை. அவர்கள் விரோதம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு தான் போகிறது.

இந்நிலையில் ஈரானுக்காக சவூதியில் சிலர் உளவு பார்ப்பதாக தகவல் வெளியானது. இதையடுத்து நடத்திய சோதனையில் கடந்த மார்ச் மாதம் 19ம் தேதி சவூதியைச் சேர்ந்த 16 பேர், ஈரானைச் சேர்ந்த ஒருவர் மற்றும் லெபனானைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டனர் என்று சவூதி உள்துறை அமைச்சகம் தெரிவித்தது.

இந்நிலையில் ஈரானுக்கு உளவு பார்த்ததாக சவூதியைச் சேர்ந்த 8 பேர், லெபனான் மற்றும் துருக்கியைச் சேர்ந்த தலா ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து உளவு பார்த்ததற்காக கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 28 ஆக அதிகரித்துள்ளது.

ஆனால் தாங்கள் யாரையும் உளவு பார்க்கச் சொல்லவில்லை என்று ஈரான் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.