‘ஜிஎஸ்டிமீது இன்னும் முடிவு இல்லை, 7 விழுக்காடு என்பது ஓர் ஆலோசனைதான்’

1 gstபொருள், சேவை வரி(ஜிஎஸ்டி) விதிப்புமீது இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று பிரதமர்துறையில் உள்ள பெமாண்டு விளக்கமளித்துள்ளது. அமைச்சரவைதான் அதன்மீது இறுதி முடிவைச்  செய்யும்.

கடந்த வாரம் பெமாண்டு தலைமை செயல் அதிகாரி இட்ரிஸ் ஜலா, ஒரு கருத்தரங்கில் பேசியபோது 7 விழுக்காடு ஜிஎஸ்டி என்று குறிப்பிட்டது உண்மைதான். ஆனால், சிங்கப்பூரில் அமலில் உள்ள ஜிஎஸ்டியைதான் அவர் அவ்வாறு குறிப்பிட்டார் என பெமாண்டு ஓர் அறிக்கையில் விளக்கமளித்துள்ளது.

ஜிஎஸ்டி விகிதம் பற்றி வினவப்பட்டதற்கு இட்ரிஸ் அவ்வாறு பதிலளித்தார் என்றது கூறியது.

1 gst1பெர்னாமா செய்தி நிறுவனம்,  இட்ரிஸ் கடந்த வாரம் கோலாலும்பூரில் ஒரு கருத்தரங்கில் பேசியபோது ஜிஎஸ்டியை  விரைவில் நடைமுறைப்படுத்துவது நல்லது என்று கூறியதாக அறிவித்திருந்தது.

சிங்கப்பூரில் உள்ளதுபோல் ஏழு விழுக்காடு ஜிஎஸ்டி விதிக்கப்பட்டால் மலேசியாவுக்கு ரிம27 பில்லியன் கூடுதல் வருமானம் கிடைக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

அவரது கூற்றுக்கு மாற்றரசுக்கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஜிஎஸ்டி-இன் சரியான விகிதத்தை இட்ரிஸ் தெரிவிக்க வேண்டும் என பிகேஆர் கோரிக்கை விடுத்தது. 7 விழுக்காடு ஜிஎஸ்டி என்றால்,  அது பெரும் சுமையாகும்,  அதற்காக ஒவ்வொரு மலேசியனும் ஆண்டுக்கு ஆயிரம் ரிங்கிட்டை வழங்க வேண்டியிருக்கும்  என்று டிஏபி கூறியது.

TAGS: