பூச்சோங் முரளிக்கு 18 மாதம் சிறை தண்டனை!

prison_sentenceபூச்சோங் முரளி எனப்படும் முரளி சுப்ரமணியத்திற்கு இன்று பெட்டாலிங் ஜெயா மஜிஸ்திரேட் நீதிமன்றம் 18 மாத சிறை தண்டனையை விதித்தது.

2011-ஆம் ஆண்டு சுபாங்ஜெயா வாவாசான் தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் திருமதி சரஸ்வதி என்பவரை மிரட்டியதற்காக குற்றவியல் சட்ட விதி 353-இன் கீழ் பூச்சோங் முரளிக்கு 18 மாத சிறை தண்டனையை மஜிஸ்திரேட் நீதிபதி புவான் சரிபா வழங்கினார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக நடந்த இந்த வழக்கு தேவையற்ற வகையில் நீடிக்கப்பட்டதாலும், வழக்கு சுமூகமாக நடைபெறுவதற்கு ஒத்துழைப்பை வழங்க மறுத்த காரணத்தினாலும் மஜிஸ்ரேட் நீதிபதி கடுமையான தண்டனை கொடுக்க காரணமாக அமைந்திருக்கலாம் என கருதப்படுகிறது.

murali_250_220வாவாசன் தமிழ்ப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் தலைவராக பதவி வகித்தபோது, அந்த சங்கத்தை தடை செய்யக்கோரி மக்கள் போரட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

பலவகையான இயக்கங்களை பிரதிநிதிப்பதாக் கூறிக்கொள்ளும் பூச்சோங் முரளி, முன்னாள் மஇகா உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் மீது பல போலிஸ் புகார்கள் செய்யப்பட்ட போதும், இவர் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பி வந்துள்ளார் எனவும் கூறப்படுகிறது.

குற்றவியல் சட்டம் 353 –இன் படி:

353. Whoever assaults or uses criminal force to any person being
a public servant in the execution of his duty as such public servant,
or with intent to prevent or deter that person from discharging his
duty as such public servant, or in consequence of anything done
or attempted to be done by such person in the lawful discharge of
his duty as such public servant, shall be punished with imprisonment
for a term which may extend to two years or with fine or with both.

அதிகபட்ச தண்டனை இரண்டு வருடம் சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டும் என்பதாகும்.

இந்த தண்டனையை எதிர்த்து பூச்சோங் முரளி உடனடியாக மேல்முறையீடு செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

TAGS: