கடந்த மே 16 ஆம் தேதி பேரரசரால் அமைச்சராகப் பதவிப் பிரமாணம் செய்யப்பட்டு நியமனக் கடிதம் பெற்றவர்களில் ஒருவரான முன்னாள் டிரான்ஸ்பேரன்சி இண்டர்நேசனல்-மலேசியா தலைவர் பால் லோ கெங் சுவான் மலேசிய அரசமைப்புச் சட்டத்தின் எந்தப் பிரிவின் கீழ் அமைச்சராக நியமிக்கப்பட்டார் என்ற கேள்விக்கு “புத்ராஜெயாவை கேளுங்கள்” என்று மிகச் சாதாரணமாக பதில் அளித்தார்.
அவர் தற்போது புத்ராஜெயாவின் ஓர் அங்கமாக இருக்கிறார் என்பதை அவருக்கு நினைவுறுத்தி அவர் எந்தச் சட்டத்தின் கீழ் அமைச்சராக நியமிக்கப்பட்டார் என்பதைக் கூறுமாறு செம்பருத்தி.கோம் அவரைத் தொடர்பு கொண்ட போது வலியுறுத்தியது.
ஆனால், அவரது பதில் மீண்டும் “புத்ராஜெயாவை கேளுங்கள்” என்பதுதான்.
அமைச்சராக நியமிக்கப்படுவதற்கு முன்பு செனட்டராக இருந்தீர்களா அல்லது தற்போது செனட்டராக இருக்கிறீர்களா என்று மேலும் வினவப்பட்டதற்கு, “இல்லை. நான் பதில் அளிக்க முடியாது. நீங்கள் புத்ராஜெயாவைத்தான் கேட்க வேண்டும்”, என்றாரவர்.
புத்ராஜெயா என்ன உன் வீட்டு முன் வாசல் கதவா நாங்கள் அதனிடம் கேட்க?,உனக்கே யாரால்? ஏன்? எதற்கு? எப்படி? இந்த பதவி கிடைத்தது என்று தெரியாமல் இருக்கும் போது நீ இப்படிதான் பதில் சொல்வாய்.எதற்கும் நீ புத்ராஜெயாவிடம் கேட்டு எங்களுக்கு பதில் சொல்ல முடியுமா?முடியாது என்று நினைக்கிறேன்.முயற்சி செய்து பாரும்? ஏன் என்றால் பதவியின் நாற்காலியை சூடு பண்ணுவது நீதானே ?
” வீடு பற்றி எரிகிறது” அக்கம் பக்கத்தார் பதறிபோய் , ஐயோ ! எப்படி நெருப்பு ஏற்ப்பட்டது என்று உரிமையாளரை வினவினால் ” நெருப்பை கேளுங்கள், அதுக்குதான் தெரியும்” என்றானாம் கூர்கெட்ட வேமானி!!