போலீஸ் காவல் மரணங்கள் குறித்து வேதா மெளனம் காப்பது ஏன்?, குலா சாடல்

kulaபோலீஸ் காவலில் இருக்கும்போது நேரும் இறப்புகள் குறித்து துணை அமைச்சர் பி. வேதமூர்த்தி “வாயை இறுக்கமாக மூடிக்கொண்டிருப்பது” அந்த வகை மரணங்கள் நிற்க வேண்டும் என்ற இண்ட்ராபின் கோரிக்கை கைவிடப்பட்டிருக்கிறது என்பதைத்தான் காண்பிக்கிறது. ஈப்போ பாராட் டிஏபி எம்பி எம்.குலசேகரன் இவ்வாறு சாடியுள்ளார்.

என். தர்மேந்திரன், 31,  மே 21-இல், கோலாலும்பூர் போலீஸ் தலைமையகத்தில் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டிருந்தபோது இறந்து போனார். இவ்வாண்டில் மொத்தம் ஐவர் இப்படி இறந்து போயிருக்கிறார்கள். இன்னொரு கணக்கெடுப்பு 2000-இலிருந்து  இதுவரை  தடுப்புக்காவலில் நிகழ்ந்துள்ள  மரண எண்ணிக்கை 218 என்று கூறுகிறது.

kula1“இப்படிப்பட்ட மரணங்கள் அடிக்கடி நிகழ்வதும் அவற்றுக்குக் காரணமானவர்கள் சட்ட நடவடிக்கையினின்று எளிதாகத் தப்பித்துக்கொள்வதும் நாடே வெட்கப்பட வேண்டிய விசயம் என்பதுடன் அது இந்திய மலேசியர்களின் உயிர் எவ்வளவு துச்சமாக மதிக்கப்படுகிறது என்பதையும் காண்பிக்கிறது”, என குலசேகரன் கூறினார்.

பொதுத் தேர்தலுக்குமுன், ஆளும் கட்சிக்கு ஆதரவு தெரிவிப்பதற்கு பிஎன்னிடம் இண்ட்ராப் நீட்டிய நிபந்தனைகளின் பட்டியலிலிருந்து தடுப்புக்காவல் மரணங்கள் நிற்க வேண்டும் என்ற கோரிக்கை கைவிடப்பட்டபோதே, “இண்ட்ராப் அமைச்சர் பதவிக்காக பிஎன்னிடம் விலைபோய்விட்டதாக மக்கள் சந்தேகப்பட்டனர்”, என்றாரவர்.

“இப்போது வேதமூர்த்தியின் மெளனம் அதை உண்மை என மெய்ப்பிக்கிறது”.

 

 

TAGS: