யாஸிட் மீண்டும் கைது : காரணம் தெரியாமல் மனைவி தவிப்பு

yazid2012-ஆம் ஆண்டு பாதுகாப்புச் சட்டத்தின்கீழ்(சொஸ்மா) சுமத்தப்பட்ட குற்றச்சாட்டிலிருந்து விடுதலை செய்யப்பட்ட யாஸிட் சுபாட், ஏழு நாள் கழித்து மீண்டும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இதன் தொடர்பில் அவரின் மனைவி சோமல் முகம்மட்டைத்  தொடர்புகொண்டு விசாரித்தபோது கைது செய்யப்பட்டதற்கான காரணம் அவருக்கும் தெரியவில்லை.

“போலீசார் காலை எட்டு மணிக்கு வீட்டுக்கு வந்து புக்கிட் அமானுக்குக் கொண்டு செல்வதாக தெரிவித்திருக்கிறார்கள். அது நடந்தபோது நான் வீட்டில் இல்லை. ஆனால், என் நான்கு பிள்ளைகளும் அதைப் பார்த்திருக்கிறார்கள்.

chomel“எனக்கு ஏனென்று விளங்கவில்லை. இப்போதுதான் விடுதலை ஆகி வந்தார்”, என சோமல்  (இடம்) கூறினார். அவரும் அவரின் கணவரும் ஒரு சுற்றுண்டி நிலையம் வைத்து நடத்துகிறார்கள்.

யாஸிட்டும் மேலும் இருவரும் பயங்கரவாதக் குற்றச்சாட்டிலிருந்து மே 20-இல்தான் விடுதலையானார்கள். அம்மூவரும்தான் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்ட (ஐஎஸ்ஏ) த்துக்குப் பதிலாகக் கொண்டுவரப்பட்ட சொஸ்மாவின்கீழ் முதன்முதலாக கைதானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அதற்குமுன் யாஸிட் ஏழாண்டுகள் ஐஎஸ்ஏ-இன்கீழ் தடுத்து வைக்கப்பட்டு 2008, நவம்பரில் விடுவிக்கப்பட்டார்.

TAGS: