வேதாவின் நியமனத்துக்கு என்ஜிஓ-கள் ஆதரவு

பிரதமர்1 ngo நஜிப் அப்துல் ரசாக் தம் அமைச்சரவையில் பி.வேதமூர்த்தியை ஒரு துணை அமைச்சராக நியமனம் செய்திருப்பதை இந்திய என்ஜிஓ-கள் அடங்கிய குழு ஒன்று வரவேற்றுள்ளது.

வேதமூர்த்தி துணை அமைச்சராக நியமிக்கப்பட்டதற்குப் பலர் கண்டனமும் தெரிவித்துள்ளனர். அவரின் சகோதரர் உதயகுமார் அதைக் கடுமையாகக் குறைகூறியதுடன் அவர் “புதிய சாமிவேலு” என்றும் அம்னோவுக்கு ஆமாம் போடும் ஆசாமி என்றும் வருணித்துள்ளார்.

 

1 ngo soloஆனால், கூலிமில் உள்ள பத்து கிரேஸ் ஆஸ்ரமத்தின் நிறுவனரும் ஆலோசகருமான சோலமன் பி.ஜி. இராஜேந்திரன் (வலம்), நஜிப் செய்ததுதான் சரி என்று கூறினார். அரசாங்கத்தில் இந்திய மலேசியர் பிரதிநிதித்துவம் கூடுதலாக இருப்பது நல்லதுதான் என்றும் அது அவசியமான ஒன்றுதான் என்றும் கூறினார். அதுவும், என்ஜிஓ பிரதிநிதி ஒருவர் அரசாங்கத்தில் உறுப்பு வகிப்பது இன்னும் நல்லது.

“ஒரு என்ஜிஓ-வால்தான் இன்னொரு என்ஜிஓ-வின் தேவையைப் புரிந்துகொள்ள முடியும். இந்த அமைப்புகளுக்கும் அவற்றின் சேவைகளுக்கும் உரிய முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்று நினைக்கிறோம்”, என நேற்றிரவு பினாங்கில் செய்தியாளர் கூட்டமொன்றில் அவர் கூறினார். அவருடன் 10 என்ஜிஓ-களின் தலைவர்களும் இருந்தனர்.

1 ngo 1அடுத்த மாதம் பினாங்கு, கெடா, பெர்லிஸ் ஆகிய மாநிலங்களிலிருந்து 120 என்ஜிஓ-கள் வேதமூர்த்தியைச் சந்தித்து இந்திய சமூகத்தின் தேவைகளை எடுத்துரைக்க திட்டமிட்டுள்ளன.

அச்செய்தியாளர் கூட்டத்தில் பினாங்கு ஆயிரத்தில் ஒருவன் இதயக்கனி எம்ஜிஆர் மன்றம், அன்பே ஆனந்தம், ஸ்ரீபரமஹம்ச தாசர் நலவளர்ச்சி சங்கம், யாகின் கல்லூரி, கெடா இந்தியர் சங்கம் முதலியவை கலந்து கொண்டன.

அவர்கள்  “Hidup PM (வாழ்க பிரதமர்)”  “1 மலேசியா” என்றும் முழக்கமிட்டனர். நஜிப்பின் உருவப்படம் கொண்ட பதாகைகளையும் ஏந்தி இருந்தனர்.

TAGS: