“உண்மை கசக்கிறது. அதனால் மலேசியாகினியைத் தடை செய்யுங்கள்”

zul“சுல்கர்னெயின் அறிக்கை மலேசிய இளம் பத்திரிக்கையாளர் மன்றத்தின் (KWMM) நிலைக்களன்களாக  இருக்க வேண்டிய இதழியல் துறையையும் சுதந்திரமான ஊடக முறையையும் கேலிக் கூத்தாக்கியுள்ளது.”

“மலேசியாகினியை தடை செய்யுங்கள் அல்லது அதற்கு கட்டுப்பாடுகளை விதியுங்கள்”

இனி என்ன ?: மலேசியாகினி செய்திகளை வெளியிடுவதில் பாகுபாடு காட்டுவதாகவும் அதனால்  நாட்டின் நிலைத்தன்மையை அது சீர்குலைத்து வருவதாகவும் Kelab Wartawan Muda Malaysia (KWMM)
எனப்படும் மலேசிய இளம் பத்திரிக்கையாளர் மன்றத்தின் தலைவர் சுல்கர்னெயின் தாயிப் கூறிக்
கொண்டுள்ளார். அதனால் அந்தச் செய்தி இணையத் தளம் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க
வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

நிச்சயமாக உண்மை கசக்கத்தான் செய்யும். காரணம் பொய்களையும் பாதி உண்மைகளையும்
திரிக்கப்பட்ட செய்திகளையும் மோசமான ஆளுமையையும் மிதமிஞ்சிய செலவுகளையும்
இனவாதத்தையும்  தேர்ந்தெடுக்கப்பட்டு வழக்குப் போடப்படுவதையும் தடுப்புக் காவல் மரணங்களையும்
சிறுபான்மை அரசாங்கம் ஊடகங்களைக் கட்டுக்குள் வைத்திருப்பதையும் சேவகம் செய்யும்
கூட்டாளிகளையும் மலேசியாகினி அம்பலப்படுத்தி வருகின்றது.

மலேசியாகினி போன்ற இணையத் தள ஊடகங்களைத் தடை செய்தால் நாடு மூடர்கள் கூடாரமாகி
விடும்.

விஜய்47: மலேசியாகினி மீது நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுப்பது புதிதல்ல. அத்தகைய
கோரிக்கைகளை அவ்வப்போது சிலர் விடுக்கின்றனர்.

ஆனால் ஒரு காலத்தில் சுவாரா கெஅடிலான் ஆசிரியராக இருந்தவரும் இப்போது மலேசிய இளம்
பத்திரிக்கையாளர் மன்றத்தின் (KWMM) தலைவராகவும் இருக்கும் சுல்கர்னெயின் அந்த அறிக்கையை
வெளியிட்டிருப்பது தான் கவலை அளிக்கின்றது.

அத்தகையவர்களுடன் பக்காத்தான் ராக்யாட் என்ன செய்து கொண்டிருந்தது ?

பக்காத்தானிலிருந்து அவரை இழுத்து பக்காத்தான் அல்லது பிகேஆர் நிலை குலைந்து வருகின்றது
எனக் காட்டுவதற்கு அவர் நல்ல கேடயமாக அம்னோவுக்கு விளங்கக் கூடும்.

பக்காத்தான் தனது தொகுதித் தலைவர்களைத் தேர்வு செய்வதில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க
வேண்டும். ஏனெனில் இன்றைய நண்பர்கள் நாளைய எதிரிகளாகி விடுவது வழக்கமாகி விட்டது.

எது எப்படி இருந்தாலும் மலேசியாகினிக்கு வாழ்த்துக்கள். அவர்களுக்கு வலிக்கும் இடத்தில்
மலேசியாகினி அடி கொடுக்கிறது.

பி தேவ் ஆனந்த் பிள்ளை: சுதந்திரமான சிந்தனைகளையும் பேச்சுரிமையையும் கண்டு அவர்கள்
அஞ்சுகின்றனர். அந்த யோசனை நிலை பெறுவதற்கு மலேசியாகினியும் மலேசியர்களும் அனுமதிக்கக்
கூடாது.

மலேசியாகினி சுயேச்சையாக இயங்க வேண்டும். அதில் எந்த சமரசமும் கூடாது. அதன் serverகள்
வெளிநாடுகளில் வைக்கப்பட வேண்டும். அத்தகைய சுதந்திரத்தை பெற சந்தாக் கட்டணம்
உயர்த்தப்பட்டால் அதற்கு ஆதரவளிக்க நான் தயார். சுதந்திரத்தை எதுவும் தடுக்க விடக் கூடாது.

அடையாளம் இல்லாதவன்#85701391: உண்மைக்கும் கற்பனைக்கும் இடையில் உள்ள வேறுபாட்டை
சுல்கர்னெயின் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். அப்போது தான் அவர் தம்மை பத்திரிக்கையாளர்
என அழைத்துக் கொள்ள முடியும். அது முடியாது என்றால் தவறான கருத்துக்களை வெளியிட்டு அந்த
தொழிலுக்குக் களங்கத்தை ஏற்படுத்த வேண்டாம்.

பிரிமுஸ்: சுல்கர்னெயின் அறிக்கை மலேசிய இளம் பத்திரிக்கையாளர் மன்றத்தின் (KWMM)
நிலைக்களன்களாக இருக்க வேண்டிய இதழியல் துறையையும் சுதந்திரமான ஊடக முறையையும் கேலிக்
கூத்தாக்கியுள்ளது.

சுயேச்சையான ஊடகத்திற்கும் பிரச்சாரத்திற்காக செய்திகளைத் திரிப்பதற்கும் இடையில் உள்ள
வேறுபாட்டை நாம் புரிந்து கொள்ள வேண்டும். எந்தப் பத்திரிக்கை செய்திகளைத் திரிக்கின்றது
என்பதை நாம் உணர வேண்டும். குற்றவாளியை தண்டிப்பதற்குப் பதில் தூதுவனைக் கொல்லக் கூடாது.

தோலு: சுல்கர்னெயின் அவர்களே ஊடகங்களில் பாரபட்சமாக செய்திகள் வெளியிடப்படுவதை நீங்கள்
உணர முடிந்துள்ளது எனக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது.

ஆனால் உத்துசான் மலேசியா, தி ஸ்டார், டிவி3 போன்ற அச்சு மின்னியல் ஊடகங்களைப் பற்றி
நீங்கள் குறிப்பிடாதது எனக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. அவை இந்த நாட்டில் இனங்களுக்கு
இடையில் பிளவை ஏற்படுத்த பல முறை செய்திகளை வெளியிட்டுள்ளன.

இனங்களுக்கு இடையில் வெறுப்பைத் தூண்ட அவை முயன்றுள்ளன. அவற்றின் செய்திகள்
திரிக்கப்பட்டவை. பாகுபாடானவை.

ஆகவே சுல்கர்னெயின் அவர்களே மலேசியாகினி பற்றிய உங்கள் கருத்து பாரபட்சமானது.
உங்களுடைய குறுக்குப் புத்தியை அது காட்டுகின்றது. நீங்கள் அம்னோ ஏஜண்டு என்பதையும் அது
உணர்த்தி விட்டது.

உண்மை கற்பனை அல்ல: ஆம் மிகவும் நல்ல யோசனை. அரசாங்கத்துடன் இணங்கிப் போகாத எல்லா
மலேசியர்களையும் நாம் ஏன் வெளியேற்றக் கூடாது ? பிறகு உத்துசானை மட்டும் வாசிக்கும்
‘மூளையற்ற ஜென்மங்கள்’ மட்டும் இங்கு இருக்கும்.

 

TAGS: