போலீஸ் தடுப்புக் காவல் மரணங்கள் தொடர்பில் விசாரிக்கப்படும் போலீஸ் அதிகாரிகள் படையிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட வேண்டும் என ஹிண்ட்ராப் தலைவர் பி வேதமூர்த்தி தெரிவித்த யோசனையை உள்துறை அமைச்சர் அகமட் ஸாஹிட் ஹமிடி ஒப்புக் கொள்கிறார்.
“அந்தக் கருத்து நியாயமானது என நான் நினைக்கிறேன்,” என காஜாங்கில் இன்று நிருபர்களிடம் கூறினார்.
அவர் அங்குள்ள சிறைச்சாலைத் துறைத் தலைமையகத்துக்கு வருகை அளித்த பின்னர் நிருபர்களைச் சந்தித்தார்.
நேற்று வேதமூர்த்தி விடுத்த அறிக்கை குறித்து கருத்துக் கூறுமாறு அவரிடம் கேட்டுக் கொள்ளப்பட்டது.
என்றாலும் போலீஸ் படையின் கட்டுக்கோப்பை சீர்குலைக்காமல் அத்தகைய நடவடிக்கையை மிகவும்
கவனமாக எடுக்க வேண்டும் என ஸாஹிட் எச்சரித்தார்.
“அதற்குப் பொறுப்பானவர்கள் தனிநபர்கள். முழு போலீஸ் படை அல்ல. ஆகவே தனி நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். முழு போலீஸ் படை மீது அல்ல.”
எதிர்காலத்தில் தடுப்புக் காவல் மரணங்களுக்கு இயல்பாக போலீசார் மீது பழி போடப்படாமல்
இருக்கும் பொருட்டு போலீஸ் விசாரணை நடைமுறைகளை மறு ஆய்வு செய்ய வேண்டிய தேவை இருப்பதாக ஸாஹிட் குறிப்பிட்டார்.
கைதிகள் தடுத்து வைக்கப்படும் போது போலீஸ் லாக்கப்பில் வைத்திருக்கப்படக் கூடாது என்றும்
முறையான கண்காணிப்பு கேமிரா வசதிகளைக் கொண்ட மத்திய தடுப்பு மய்யங்கள் வைக்கப்பட
வேண்டும் என்றும் அவர் யோசனை கூறினார்.
முறையாக கண்காணிக்கவும் தவறுகள் நேருமானால் ஆதாரங்களைப் பெறவும் அது உதவும் என அவர் எண்ணுகிறார்.
குற்றச்செயல்கள் மலிந்துள்ள நகரங்களில் மோட்டார் சைக்கிள்கள் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்ட ‘பாதுகாப்பு மண்டலங்களை’ உருவாக்கலாம் என ஐஜிபி என்ற தேசிய போலீஸ் படைத் தலைவர் காலித் அபு பாக்காரின் யோசனை பற்றியும் ஸாஹிட்டிடம் வினவப்பட்டது.
அந்த யோசனையை தாம் ஆய்வு செய்ய வேண்டிய தேவை இருப்பதாக குறிப்பிட்ட உள்துறை அமைச்சர் நகரச் சாலைகளை பாதுகாப்பானதாக வைத்திருக்க தமது அமைச்சும் மற்ற சம்பந்தப்பட்ட அமைப்புக்களும் உறுதிபூண்டுள்ளதாகச் சொன்னார்.
இரண்டு அருகதை இல்லாத முட்டாள்கள்.
பாவம் வேதா… பிஎன்னு நீங்க சொல்லி கேக்கறாங்க….
இடை நீக்கம்? உன்னை முதலில் அப்படி செய்ய வேண்டும், துரோகி!!
வேதா சொன்னால் தப்பு.அனால் மஇகா ம்ற்றும் குள்ள நரிகள் கட்சிகள் வாய் திறக்க வில்லே, அதைபற்றி யாரும் கேள்வி கேட்கவில்லையே? சமுதாயமே என்று மாறுமோ இந்த நிலை…….
பனி நீக்கம் செய்ய சொல்லுங்கடா மட்டிகளா !
உள்துறை அமைச்சர் அகமட் ஸாஹிட் ஹமிடி ஒப்புக் கொண்டுவிட்டார். அப்புறம் என்ன வேதா(ளமே), மீண்டும் முருங்க மரத்தில் ஏற வேண்டியதுதானே? அதாவது பசியாறிவிட்டு மத்தியான சாப்பாடுவரை உண்ணவிரத நாடகத்தை ஆரம்பிக்க வேண்டியதுதானே?