லெம்பா பந்தாய் எம்பி நுருல் இஸ்ஸா அன்வார், சாபா குடிநுழைவுத்துறையின் கறுப்புப் பட்டிலில் பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம், டிஏபி பெருந் தலைவர் லிம் கிட் சியாங் ஆகீயோரின் பெயர்களும் இருக்கும் என நம்புகிறார்.
நேற்றிரவு கோட்டா கினாபாலு விமான நிலையத்தில் தம்மைத் தடுத்து நிறுத்திய குடிநுழைவுத் துறை அதிகாரிகளின் நடவடிக்கை அதைக் குறிப்பாக உணர்த்துகிறது என்று நுருல் இஸ்ஸா தெரிவித்தார்.
“அப்படித்தான் நினைக்கிறேன். நான் கேட்ட கேள்விகளுக்கு அவர்கள் பதில் சொல்லவில்லை. உத்தரவுப்படி நடந்து கொண்டார்கள் என்பதைப் புரிந்துகொண்டேன்”.
சாபா முதலமைச்சர் மூசா அமான் (இடம்) உத்தரவின்பேரில் தடுத்து நிறுத்தப்பட்டதாகக் கூறப்படும் நுருல் இஸ்ஸா, அம்மாநிலத்துக்குள் நுழைய தடைவிதிக்கப்பட்ட “சமூக ஆர்வலர்கள், பக்காத்தான் தலைவர்கள்” ஆகியோரடங்கிய பட்டியல் ஒன்று இருக்கிறது எனத் தம்மிடம் தெரிவிக்கப்பட்டதாகக் கூறினார். ஆனால், அதிகாரிகள் பட்டியலில் இடம்பெற்றுள்ளவர்களின் பெயர்களைத் தெரிவிக்க மறுத்து விட்டனர்.
காமாதான் விழாவில் கலந்துகொள்ள சாபா செல்ல முயன்ற தாம் தடுத்து நிறுத்தப்பட்டதை ஆட்சேபித்து அவர் முதலமைச்சருக்குக் கடிதம் எழுதுவார், அத்துடன் அப்பட்டியலை பகிரங்கப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொள்வார்.
தம்மைத் தடுத்து நிறுத்தும் முடிவுக்கு எதிராக வழக்கு தொடுக்கப் போவதாகவும் நுருல் இஸ்ஸா குறிப்பிட்டார். அதே வேளை 20-அம்ச ஒப்பந்தம் சாபாவுக்கு குடிநுழைவு அதிகாரம் வழங்குகிறது என்றும் அது குறித்து கேள்வி எழுப்பவில்லை என்பதையும் அவர் வலியுறுத்தினார்.
“அரசியல் காரணங்களுக்காக அது தவறாகப் பயன்படுத்துவது ஏன் என்றுதான் கேட்கிறோம்”, என்றாரவர்.
எதிர்கட்சியினர் இனி சாபா – சரவாக்கில் நுழைய முடியாது என நம்பலாம்!
மருமகளே! மணமகளே! வா, வா. உன் வலது காலை எடுத்து வைத்து வா, வா என்று அழைக்க மூசா அமான் என்ன உன் மாமனாரா? வேண்டாத மருமகளை வீடு வாசப்படியை மிதிக்காதே என்று சொல்லுவதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. ஆனால், ஒரு பெண் நினைத்தால் மூசா அமான் என்ற மாமனாரை வீட்டை விட்டே துரத்தலாம் என்பதை புங் மொக்தார் உணர்ந்து கொண்டார். மூசா அமான் வீட்டை விட்டு ஓடும் காலம் வெகு விரைவில் இந்த பெண் ரூபத்தில் வரும்.
ஆஹ்மாம் , அரசியல் காரணத்திற்காக , சொந்த மக்களையே விரோதியாகவும், தீவிர வாதியாகவும் காண்கிறார்கள், சொந்த நிழலே இவர்களை மிரட்டுவது போல் , ஆஹ்னால் தீவிர வாதி நம் நாட்டிற்குள் நுழைந்து நம் மக்களை கொன்று விட்டான் ,அது தீவிரமாக தெரிய வில்லை, விந்தையான அரசியல் . திருடர்கள், சொத்து குவிப்பு தலைவர் கல் , நாட்டை ஆஹ்ளும் பொது , பார்வைக்கு நல்லவர்கள், பைத்தியகார நாடு
சத்து மலேசியா சிரிப்பாய் சிரிக்கிறது …. இந்த சுலோகம் இந்த பூலோகத்தில் கிடைக்கபெறாது… காரணம் இதை பாரிசானுக்காக …. நஜிப்
அவருடைய பதவிக்காலத்தை தற்காக்க வாடகைக்கு எடுத்துக்கொண்டார் ….