‘அலியாஸ் அவர்களே தயவு செய்து பாஸ்போர்ட் சட்டத்தைப் படியுங்கள்’

passportஉங்கள் கருத்து : ‘அகோங்/அல்லது மலேசிய அரசாங்கத்துக்கு எதிராக செயல்படுகின்றவர்களுக்கு மட்டுமே தேச  நிந்தனைச் சட்டம் பொருந்தும்’

வெளிநாடுகளில் ‘நாட்டின் தோற்றத்துக்கு’ களங்கம் விளைவிக்கின்றவர்கள் கறுப்புப் பட்டியலில்
சேர்க்கப்படுவர்.

சோபிமோர்: முதலாவதாக வெளிநாடுகளில் பேரணிகளில் கலந்து கொண்டதற்காக மலேசிய பிரஜை  ஒருவருடைய பாஸ்போர்ட்டை குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் பறிமுதல் செய்வதற்கு  பாஸ்போர்ட் சட்டத்தில் எந்தப் பிரிவு அனுமதிக்கிறது ?

அந்தச் சட்டம் தமது பாஸ்போர்ட்டைத் தவறாகப் பயன்படுத்தி குற்றச் செயல்களில் ஈடுபடும் பிரஜை
அல்லாதவருக்கு மட்டுமே அந்தச் சட்டம் பொருந்தும்.

குடிநுழைவுச் சட்டம், பாஸ்போர்ட் சட்டம் ஆகியவற்றை தலைமை இயக்குநர் நன்கு அறிந்திருக்க
வேண்டும். இல்லை என்றால் வேறு எந்த ரகசியச் சட்டத்தை அல்லது விதிமுறையை அவர்
குறிப்பிடுகிறாரா ?

இரண்டாவதாக தலைமை இயக்குநர் அவர்களது பாஸ்போர்ட்களை எந்த அடிப்படையில் ரத்துச் செய்ய முடியும் ? பேச்சு சுதந்திரத்தையும் ஒன்று கூடும் உரிமையையும் நிலை நிறுத்தும் அந்நிய நாடுகளில் அனுமதிகள் கொடுக்கப்பட்ட பேரணிகள் சட்ட விரோதமானவை எனக் கருதப்படுவதில்லை.

மூன்றாவதாக அந்த மலேசிய மாணவர்களுடைய தேச நிந்தனைகள் எனச் சொல்லும் போது
அகோங்/அல்லது மலேசிய அரசாங்கத்துக்கு எதிராக செயல்படுகின்றவர்களுக்கு மட்டுமே தேச
நிந்தனைச் சட்டம் பொருந்தும்.

ஒடின்: பிஎன் கறை படிந்தது என்பதை வெளிநாடுகளில் வசிக்கும் மலேசியர்கள் உலகிற்குக்
காட்டியுள்ளதாக குடிநுழைவுத் தலைமை இயக்குநர் அலியாஸ் அகமட் சொல்கிறார்.

அவர்கள் மலேசியாவின் தோற்றத்துக்கு களங்கத்தை ஏற்படுத்தவில்லை. பிஎன் ஏற்கனவே நாட்டின்
பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தி விட்டது. எது எப்படி இருந்தாலும் நீங்கள் சட்டங்களை மீண்டும்
படிப்பது நல்லது.

ஸ்விபெண்டர்: 13வது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் பிரதமர் நஜிப் ரசாக் நிர்வாகம் இனவாதத்தை
தூண்டுகின்றது. அதனைத் தொடர்ந்து அமைதியான பேரணிகளை ஒடுக்கப் போவதாக புதிய உள்துறை அமைச்சர் மருட்டுகிறார். எதிர்ப்பாளர்களும் எதிர்த்தரப்பு அரசியல்வாதிகளும் கைது
செய்யப்படுகின்றனர். இப்போது சொந்தக் குடிமக்கள் நாட்டுக்குள்ளும் நாட்டுக்கு வெளியிலும் பயணம்
செய்வதற்கு தடை விதிக்கப்படுகின்றது.

அல்லது இது அம்னோவைத் தங்கள் கட்டுக்குள் வைத்திருக்க மகாதீர் தத்துவத்தைப்
பின்பற்றுகின்றவர்களுக்கும் ‘சீர்திருத்த’ பிரதமர் நஜிப் ரசாக்கிற்கும் இடையில் நிகழும் போராட்டத்தின் வெளிப்பாடா ? இது வரையில் அம்னோவில் உள்ள பழமைவாதிகள், வலச்சாரிகள் ஆகியோரது கரங்களே மேலோங்கியுள்ளன. நஜிப் ‘ஆழ்ந்த மௌனம்’ காக்கிறார்.

தே தாரேக்: நாட்டின் தோற்றத்திற்குக் களங்கத்தை ஏற்படுத்தியுள்ள குற்றவாளிகளில் தேர்தல்
ஆணையம் முக்கியமானதாகும். தேர்தல் மோசடிகளை அவர்கள் இப்போது தான் செய்து
முடித்துள்ளனர். அந்த ஆணையத் தலைவரும் துணைத் தலைவரும் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு
ஏன் தடை விதிக்கக் கூடாது ?

இனவாத சொற்பொழிவுகள் மூலம் நாட்டின் தோற்றத்துக்குக் களங்கத்தை ஏற்படுத்திய முன்னாள்
நீதிபதியையும் பொதுப் பல்கலைக்கழகம் ஒன்றின் இணை வேந்தரையும் பற்றி என்ன சொல்வது ?

பைபிள்களை எரிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்ட பெர்க்காசா தலைவர் இப்ராஹிம் அலியைப்
பற்றியும் இந்து சமயத்தை இழிவுபடுத்திப் பேசிய பெர்க்காசா உதவித் தலைவர் சுல்கிப்லி நூர்டின்
ஆகியோரை என்ன செய்வது ?

முதுநிலை அரசாங்க அதிகாரிகள் தங்கள் எண்ணங்களில் அரசியல் கட்சி உணர்வுகளைப் பிரதிபலிப்பது வருத்தத்தை அளிக்கின்றது.

வெளிநாடுகளில் வசிக்கும் மலேசியர்களுக்கு ஒரு வேண்டுகோள், அடுத்த முறை நீங்கள் மலேசிய
தூதரகத்துக்கு வெளியில் ஆர்ப்பாட்டம் செய்தால் முகத்தை மூடிக் கொள்ளுங்கள்.

வெளிநாடுகளில் ஆர்ப்பாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யும் சர்வாதிகார, கம்யூனிச நாடுகளுடைய
குடிமக்கள் அதனைத் தான் செய்கின்றனர். யாரும் உங்களை படம் எடுத்தாலும் அடையாளம் தெரியாது. ஆகவே கறுப்புப் பட்டியலில் சேர்க்க முடியாது. நாம் இப்போது அதிகாரப்பற்றற்ற போலீஸ் ராஜ்யத்தில் இருக்கிறோம். ஆகவே எச்சரிக்கையாக இருங்கள்.

கெட்டிக்கார வாக்காளர்: ஜனநாயக நாட்டில் மாற்றுக் கருத்துக்கள் சகித்துக் கொள்ளப்படுவதோடு
வரவேற்கப்படுகின்றன. அதிகார அத்துமீறல் நிறைந்த மக்கள் நம்பிக்கை இல்லாத பலவீனமான
தலைமைத்துவமே தனது சொந்தப் பிரஜைகளை மிரட்டும். துன்புறுத்தும். இந்த நாடு உங்களுக்கு மட்டும் சொந்தமானது அல்ல.

TAGS: