எதிர்வரும் அம்னோ கட்சித் தேர்தல்களில் தமது பதவிக்கு விடுக்கப்படும் எந்த சவாலையும் எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாக அம்னோ தலைவர் நஜிப் அப்துல் ரசாக் கோடி காட்டியுள்ளார்.
“நல்லது, அம்னோ ஜனநாயகக் கட்சி. ஆகவே எனக்குத் தெரியாது. மற்ற கட்சிகளைப் போல அல்லாமல் அம்னோ திறந்த கட்சி என்பதை நாம் ஒப்புக் கொள்ள வேண்டும்,” என அவர் இன்று
நிருபர்களிடம் கூறினார்.
நஜிப் இன்று அம்னோ உச்ச மன்றக் கூட்டத்துக்குப் பின்னர் நிருபர்களைச் சந்தித்த போது தமது
பதவிக்கு யாரும் சவால் விடுப்பதை எதிர்பார்க்கிறாரா என அவரிடம் வினவப்பட்டது.
அம்னோ தனது கட்சித் தேர்தல் முறையை முழுமையாக மாற்றி அமைத்துள்ளது. தலைவர் பதவிக்குப்
போட்டியிடும் வேட்பாளர் ஒருவரை குறைந்த பட்சம் எத்தனை தொகுதிகள் முன்மொழிந்திருக்க
வேண்டும் என்ற கட்டுப்பாட்டை அகற்றியதும் மாற்றங்களில் ஒன்றாகும். அதனால் எந்த அம்னோ
உறுப்பினரும் அந்தப் பதவிக்குப் போட்டியிட முடியும்.
புதிய தேர்தல் முறை வரும் கட்சித் தேர்தலில் முதன் முறையாகப் பயன்படுத்தப்படவிருக்கிறது.
பெரும்பாலும் இவ்வாண்டு அது நிகழும் என நஜிப் கூறியிருக்கிறார்.
மே 5 தேர்தலில் பிஎன் இது வரை இல்லாத மோசமான அடைவு நிலையைப் பெற்றுள்ளது. அம்னோ
அடைவு நிலை முன்னைக் காட்டிலும் உயர்ந்துள்ள போதிலும் அந்தத் தேர்தல் நஜிப்-பின் நிலையை
ஆட்டம் காணச் செய்துள்ளது.
இதனிடையே பிஎன் கூட்டணியை ஒரே கட்சியாக மாற்றும் யோசனையை விவரமாக ஆராய சிறப்பு
ஆய்வுக் கூடம் ஒன்றை அம்னோ அமைக்கும் என நஜிப் சொன்னதாக பெர்னாமா செய்தி
வெளியிட்டுள்ளது.
அந்த யோசனை மீது முடிவு எடுக்கும் முன்னர் தனது உறுப்பினர்களுடைய கருத்துக்களை அம்னோ
அறிய வேண்டியுள்ளதாக அம்னோ தலைவர் சொன்னார்.
எந்த மாற்றமும் அம்னோ உறுப்பினர்கள் ஏற்றுக் கொள்வதின் அடிப்படையில் இருக்க வேண்டும்
என்றார் அவர்.
“அம்னோ, உறுப்பினர்களுடைய உள்ளத்துடன் தொடர்புடைய கட்சியாகும். ஆகவே எந்த மாற்றமும்
துல்லிதமாக ஆய்வு செய்யப்பட வேண்டும்.”
மே 5 தேர்தலுக்குப் பின்னர் நடத்தப்பட்ட முதலாவது அம்னோ உச்ச மன்றக் கூட்டம் இதுவாகும்.
பிஎன் கூட்டணியை ஒரே கட்சியாக மாற்றும் யோசனையை கெராக்கான் கட்சியின் இடைக்காலத்
தலைவர் சாங் கோ யூன் முன்மொழிந்தார்.
நகர்ப்புற, இளம் வாக்காளர்கள் இன அடிப்படையில் வாக்களிக்காததை 13வது பொதுத் தேர்தல்
முடிவுகள் காட்டியுள்ளதால் ஒரே கட்சியாக பிஎன் மாறுவது அவசியம் என சாங் கருதுகிறார்.
அம்னோவும் பாஸும், DAP PKR மாதிரி குடும்ப கட்சி இல்லை. அம்னோ மற்றும் பாஸ் தலைமை துவத்தை பார்த்தாலே தெரியும் எங்கு ஜனநாயகம் இருக்கு என்று, இது போல் DAP மற்றும் PKR யில் இருக்கா?
இப்ப எல்லாம் சவாலையும் எதிர்நோக்குவேங்க ,தேர்தலில் தோல்வி கண்ட நீங்கள் எல்லாம் பேச வந்துட்டேங்க ,போயி வேலைய பாருங்கட ,நீங்களும் உங்கள் பேச்சும்,நாயி கூட உங்களை மதிக்காதுடா
அப்படிப் போடு அருவாளை! நீங்களாவது பின் வாங்குவதாவது! மே 5 தேர்தலையே நடுங்க வச்சிட்டேங்க! அம்னோ தேர்தல் என்ன ஜுஜுபி! உங்க கூட ரோஸ்மா இருக்கிற வரைக்கும் உங்கள் யாரும் அசைக்க முடியாது!